அமேசான்: தரமான அம்சங்களுடன் கிடைக்கும் ஒப்போ ஸ்மார்ட்போன்கள்.!
ஒப்போ நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்களுக்கு இந்தியாவில் நல்ல வரவேற்பு உள்ளது. குறிப்பாக இந்நிறுவனம் பாஸ்ட் சார்ஜிங் அம்சத்தில் அதிக கவனம் செலுத்துகிறது என்றுதான் கூறவேண்டும். குறிப்பாக விவோ, சாம்சங் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களுக்கு போட்டியாக பல அதிநவீன ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது இந்நிறுவனம்.

அதேபோல் ஒப்போ நிறுவனம் விரைவில் பல 5ஜி ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இப்போது அமேசான் தளத்தில் தரமான அம்சங்களுடன் கிடைக்கும் ஸ்மார்ட்போன்களின் பட்டியலை சற்று விரிவாகப் பார்ப்போம்.
ஒப்போ ரெனோ 6 ப்ரோ 5ஜி
12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி உள்ளடக்க மெமரி வசதி கொண்ட ஒப்போ ரெனோ 6 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனை அமேசான் தளத்தில் ரூ.37,880-விலையில் வாங்க முடியும். குறிப்பாக ஒப்போ ரெனோ 6 ப்ரோ சாதனம் சற்று பெரிய 6.55 இன்ச் FHD + AMOLED டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. இது 90 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்தையும் 2400 x 1080 பிக்சல்கள் தீர்மானத்தையும் கொண்டுள்ளது. இது 32 எம்பி முன் கேமரா சென்சார் வைக்க ஒரு பஞ்ச்-ஹோல் கட்அவுட்டையும் கொண்டுள்ளது. இந்த மாடல் மீடியா டெக் டைமன்சிட்டி 1200 சிப்செட் உடன் 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜ் மூலம் இயக்குகிறது. ஆண்ட்ராய்டு 11-அடிப்படையிலான கலர்ஓஎஸ் 11.3 இயங்குதளத்தில் இது இயங்குகிறது. ரெனோ 6 ப்ரோ குவாட்-கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. இது 64MP முதன்மை சென்சார், 8MP வைடு ஆங்கிள் லென்ஸ், 2MP மேக்ரோ மற்றும் மற்றொரு 2MP டெப்த் சென்சார் வழங்கப்பட்டுள்ளது. இதுபோக 5 ஜி, வைஃபை 6, புளூடூத் வி 5.2, ஜிபிஎஸ், யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் மற்றும் பாதுகாப்புக்காக இன்டிஸ்ப்ளே கைரேகை ஸ்கேனர் ஆகியவற்றை ஆதரிக்கிறது.
ஒப்போ எஃப்19 ப்ரோ
8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ஒப்போ எஃப்19 ப்ரோ ஸ்மார்ட்போனை அமேசான் தளத்தில் ரூ.21,990-விலையில் வாங்க முடியும். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் 6.43-இன்ச் டிஸ்பிளே, 2400x1080 பிக்சல் தீர்மானம், இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர் ஆதரவு, 2.2ஜிகாஹெர்ட்ஸ் மீடியாடெக் ஹீலியோ பி95 ஆக்டோ-கோர் சிப்செட், ஆண்ட்ராய்டு 11 இயங்குதளம், 4310 எம்ஏஎச் பேட்டரி, 30 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது. அதேபோல் ஒப்போ எஃப்19 ப்ரோ ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி மெயின் கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா +2எம்பி மேக்ரோ கேமரா + 2எம்பி போர்ட்ரெயிட் லென்ஸ் என மொத்தம் நான்கு கேமராக்கள் உள்ளன. பின்பு செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும்என்றே 16எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன். இதுதவிர பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.
ஒப்போ ஏ55
6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ஒப்போ ஏ55 ஸமார்ட்போனை அமேசான் தளத்தில் ரூ.17,490-விலையில் வாங்க முடியும். குறிப்பாக இந்த ஒப்போ ஏ55 ஸ்மார்ட்போனில் 6.43-இன்ச் எஃப்எச்டி Super AMOLED டிஸ்பிளே வசதி உள்ளது. மேலும் 2400x1080 பிக்சல் தீர்மானம், இன்-டிஸ்பிளே கைரேகை ஸகேனர், மீடியாடெக் ஹீலியோ பி95 சிப்செட், 4310 எம்ஏஎச் பேட்டரி, 30 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு என பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். அதேபோல் இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி மெயின் கேமரா + 8எம்பி வைடு ஆங்கிள் லென்ஸ் + 2எம்பி போர்ட்ரெயிட் லென்ஸ் +2எம்பி மேக்ரோ கேமரா என மொத்தம் நான்கு கேமராக்கள் உள்ளன. பின்பு செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன்.
ஒப்போ ஏ74 5ஜி
6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ஒப்போ ஏ4 5ஜி ஸ்மார்ட்போன் மாடலை அமேசான் தளத்தில் ரூ.17,999-விலையில் வாங்க முடியும். மேலும் ஒப்போ ஏ74 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 6.49-இன்ச் எப்எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது.
மேலும்1080x2400 பிக்சல் தீர்மானம், 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 480 பிராசஸர் வசதி, colourOS 11.1 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளம், 5000 எம்ஏஎஎச் பேட்டரி, 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, கைரேகை சென்சார் ஆதரவு உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது ஒப்போ ஏ74 5ஜி. மேலும் ஒப்போ ஏ74 5ஜி ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி சென்சார் + 2எம்பி டெப்த் சென்சார் + 2எம்பி மேக்ரோ சென்சார் என மொத்தம் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் வீடியோ கால் அழைப்புகளுக்கு என்றே 8எம்பி செல்பீ கேமரா இவற்றுள் இடம்பெற்றுள்ளது. 5ஜி,4ஜி எல்டிஇ, வைஃபை 802.11 ஏசி, புளூடூத் வி5.1, யூ.எஸ்.பி டைப்-சி, ஜி.பி.எஸ் மற்றும் 3.5 மி.மீ ஆடியோ ஜாக் உட்ப பல இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது ஒப்போ ஏ74 5ஜி ஸ்மார்ட்போன்.
அதேபோல் ஒப்போ நிறுவனம் விரைவில் பல்வேறு புதிய 5ஜி ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. குறிப்பாக இந்திய சந்தையில் ஒப்போ நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. எனவே ஒப்போ உட்பட பல நிறுவனங்கள் 5ஜி
ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்வதில் அதிக ஆர்வம் காட்டுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications