அமேசான்: ரூ.35,000-க்கு கீழ் கிடைக்கும் தரமான ஒப்போ ஸ்மார்ட்போன்கள்.! இதோ பட்டியல்.!
ஒப்போ நிறுவனம் தொடர்ந்து அசத்தலான ஸ்மார்ட்போன்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துவருகிறது. குறிப்பாக இந்நிறுவனம் அறிமுகம் செய்யும் ஸ்மார்ட்போன்கள் தரமான சிப்செட், பாஸ்ட் சார்ஜிங் வசதி, அசத்தலான கேமராக்கள் எனப் பல்வேறு சிறப்பான அம்சங்களுடன் வெளிவருதால் அதிகளவில் விற்பனை செய்யப்படுகின்றன.

அதேபோல் இந்த ஆண்டு ஒப்போ நிறுவனம் பல 5ஜி ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளன. மேலும் இப்போது அமேசான் தளத்தில் ரூ.35,000-க்கு கீழ் கிடைக்கும் தரமான ஒப்போ ஸ்மார்ட்போன்களின் பட்டியலைப் பார்ப்போம்.
ஒப்போ ரெனோ 5 ப்ரோ
8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ஒப்போ ரெனோ 5 ப்ரோ ஸ்மார்ட்போனை அமேசான் தளத்தில் ரூ.32,999-விலையில் வாங்க முடியும். ஒப்போ ரெனோ 5 ப்ரோ ஸ்மார்ட்போன் 6.55 இன்ச் முழு எச்டி ப்ளஸ், 90 ஹெர்ட்ஸ் டிஸ்ப்ளே புதுப்பிப்பு வீதம் உள்ளிட்டவைகளுடன் வருகிறது. இதில் மீடியாடெக் டைமன்சிட்டி 1000 ப்ளஸ் எஸ்ஓசி-ஐ கொண்டிருக்கிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 11 ஆதரவு,
இரட்டை சிம் கார்ட்களுடன் வருகிறது. ஒப்போ ரெனோ 5 ப்ரோ ஸ்மார்ட்போனின் கேமரா அம்சங்கள் குறித்து பார்க்கையில், இது 64 மெகாபிக்சல் முதன்மை கேமரா, 8 மெகாபிக்சல் இரண்டாம் நிலை கேமரா, இரட்டை 2 மெகாபிக்சல் கேமரா கொண்டிருக்கிறது. பஞ்ச் கட்அவுட் அமைப்புடன் 32 மெகாபிக்சல் செல்பி கேமரா பொருத்தப்பட்டுள்ளது. ஒப்போ ரெனோ 5 ப்ரோ இணைப்பு ஆதரவுகள் குறித்து பார்க்கையில், இதில் டூயல் பேண்ட் வைஃபை, ப்ளூடூத் 5.1, பாதுகாப்பு அம்சத்திற்கு இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
உள்ளிட்டவைகள் இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனில் 4350 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 65 வாட்ஸ் வேகமான சார்ஜிங் ஆதரவு உள்ளிட்டவைகள் உள்ளன.
ஒப்போ ரெனோ 6 5ஜி
8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ஒப்போ ரெனோ 6 5ஜி மாடலை அமேசான் தளத்தில் ரூ.29,400-விலையில் வாங்க முடியும். இந்த சாதனம் 6.43 இன்ச் முழு எச்டி பிளஸ் கொண்ட 1080 x 2400 பிக்சல்கள் உடைய பிளாட் அமோலேட் டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. இது 90 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்துடன் உள்ளது. இந்த ஒப்போ ரெனோ 6 5ஜி ஸ்மார்ட்போன் மீடியாடெக் டைமன்சிட்டி 900 சிப்செட் உடன் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் விருப்பத்துடன் வருகிறது. ஆண்ட்ராய்டு 11-அடிப்படையிலான கலர்ஓஎஸ் 11.3
இயங்குதளத்தில் இது இயங்குகிறது. கேமரா அம்சத்தைப் பொறுத்த வரையில் இந்த ஸ்மார்ட்போன் 64 எம்.பி பிரதான லென்ஸ், 8 எம்பி அல்ட்ரா-வைட்-ஆங்கிள் லென்ஸ் மற்றும் 2 எம்பி மேக்ரோ ஷூட்டர் ஆகியவற்றைக் கொண்ட மூன்று பின்புற கேமரா அமைப்பை கொண்டுள்ளது. முன்பக்கத்தில் பஞ்ச்-ஹோல் கட்அவுட்டில் வைக்கப்பட்ட 32 எம்.பி செல்பி கேமராவை கொண்டுள்ளது. இது 65W SuperVOOC 2.0 பாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கும் 4,300 mAh பேட்டரியை கொண்டுள்ளது. இது 5 ஜி, வைஃபை 6, புளூடூத் வி 5.2,
ஜிபிஎஸ், யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் மற்றும் பாதுகாப்புக்காக இன்டிஸ்ப்ளே கைரேகை ஸ்கேனர் ஆகியவற்றை ஆதரிக்கிறது.
ஒப்போ எஃப்19 ப்ரோ
8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி கொண்ட ஒப்போ எஃப்19 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடலை அமேசான் தளத்தில் ரூ.21,990-விலையில் வாங்க முடியும். OPPO நிறுவனம் ஒப்போ எஃப் 19 ப்ரோவில் 4310mAh பேட்டரியை வழங்கியுள்ளது. அதிக பயன்பாட்டில் கூட, இது ஒரு நாளைக்கு மேல் நீடிக்கும் பயனை தருகிறது. இதை ஒப்போ நிறுவனம் 30W VOOC ஃப்ளாஷ் சார்ஜ் 4.0 தொழில்நுட்பத்தால் நீண்டகால பேட்டரி அனுபவத்தை செயல்படுத்தியுள்ளது. OPPO F19 Pro ஸ்மார்ட்போன் 6.43' இன்ச் பஞ்ச்
ஹோல் AMOLED டிஸ்பிளேவை 90.8% ஸ்கிரீன்-டு-பாடி விகிதத்துடன் கொண்டுள்ளது. ஒப்போ எஃப் 19 ப்ரோ ஸ்மார்ட்போன் மீடியா டெக் ஹீலியோ பி 95 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. உங்கள் வீடியோகிராபி மற்றும் புகைப்படம் ஆர்வத்தை மேம்படுத்த ஒப்போ நிறுவனம் இந்த OPPO F19 Pro ஸ்மார்ட்போனில் AI- குவாட்-ரியர்-கேமராவை வழங்கியுள்ளது. இது 48 எம்பி சூப்பர் எச்டி அம்சம் கொண்ட பிரைமரி கேமராவுடன் வருகிறது. இது எந்தவொரு லைட்டிங் நிலையிலும் தெளிவான, உயர்தர வீடியோக்கள் மற்றும்
புகைப்படங்களை எடுக்க அனுமதிக்கிறது. இதில் இரண்டாம் கேமராவாக 8 மெகா பிக்சல் கொண்ட அல்ட்ரா-வைட் ஆங்கிள் சென்சாருடன் இந்த ஸ்மார்ட்போன் வருகிறது. இது உங்கள் பயண சாகசங்களில், நீங்கள் காணும் இயற்கைக் காட்சிகளை வைடு ஆங்கிளில் புகைப்படம் எடுக்க இது அனுமதிக்கிறது. அடுத்த கேமராவாக 2 மெகா பிக்சல் கொண்ட மேக்ரோ லென்ஸ் கேமரா, 4 செ.மீ நெருக்கமான
தூரத்துடன் உலகின் அதிசயங்களை நெருக்கமாகப் படம் பிடிக்க உதவும் வகையில் வைக்கப்பட்டுள்ளது. பூக்கள், இலைகள் மற்றும் அன்றாட வாழ்க்கை பொருட்களின் அழகான மற்றும் ஆழமான நெருக்கமான காட்சிகளை விவரங்களுடன் படம் பிடிக்க இது உதவுகிறது. இறுதியாக குவாட் கேமரா அமைப்பில் 2 மெகா பிக்சல் கொண்ட மோனோ சென்சார் வழங்கப்பட்டுள்ளது.
ஒப்போ ஏ53
4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ஒப்போ ஏ53 ஸ்மார்ட்போன் மாடலை அமேசான் தளத்தில் ரூ.14,999-விலையில் வாங்க முடியும். குறிப்பாக ஒப்போ ஏ53 ஸ்மார்ட்போன் 6.5-இன்ச் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டிருக்கிறது. பின்பு 1600 x 720 பிக்சல் தீர்மானம் மற்றும் 20:9 என்ற திரைவிகிதம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு அறிமுகம் செய்யப்பட்டது. ஒப்போ ஏ53 ஸ்மார்ட்போனில் மிகவும் எதிர்பார்த்த ஸ்னாப்டிராகன் 460 சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது. பின்பு 90Hz refresh rate வசதி மற்றும் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளதால் இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும். ஒப்போ ஏ53 ஸ்மார்ட்போனின் பின்புறம் 13எம்பி பிரைமரி சென்சார் + 2எம்பி மேக்ரோ கேமரா + 2எம்பி டெப்த் சென்சார் என மொத்தம் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் 16எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த சாதனம். இந்த ஸ்மார்ட்போனில் 5000எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது, மேலும் 18வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவைக் கொண்டு இந்த ஸ்மார்ட்போன் கொண்டுள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். 4 ஜி எல்டிஇ, வைஃபை 802.11 ஏசி, புளூடூத் 5, ஜிபிஎஸ் / க்ளோனாஸ், யூ.எஸ்.பி டைப்-சி மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.
Disclaimer: This site contains affiliate links to products. We may receive a commission for purchases made through these links. However, this does not influence or impact any of our articles, such as reviews, comparisons, opinion pieces and verdicts.