அமேசான்: தரமான அம்சங்களுடன் கிடைக்கும் அட்டகாசமான ஒப்போ ஸ்மார்ட்போன்கள்.!
ஒப்போ நிறுவனம் தொடர்ந்து அதிநவீன ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்து வருகிறது. குறிப்பாக இந்நிறுவனம் பாஸ்ட் சார்ஜிங் வசதி, தரமாக சிப்செட், அசத்தலான கேமராக்கள் என அனைத்து அம்சங்களுடனும் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்கிறது என்றுதான் கூறவேண்டும்.

அதேபோல் இந்நிறுவனம் அடுத்த ஆண்டு பல 5ஜி ஸ்மார்ட்போன் மாடல்களை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்யும் என எதரிபார்க்கப்படுகிறது. மேலும் இப்போது அமேசான் தளத்தில் தரமான அம்சங்களுடன் கிடைக்கும் அட்டகாசமான ஒப்போ ஸ்மார்ட்போன்களின் பட்டியலை சற்று விரிவாகப் பார்ப்போம்.
ஒப்போ எஃப்19 ப்ரோ
8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி கொண்ட ஒப்போ எஃப்19 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடலை அமேசான் தளத்தில் ரூ.21,990-விலையில் வாங்க முடியும். Fwpg;ghf OPPO நிறுவனம் ஒப்போ எஃப் 19 ப்ரோவில் 4310mAh பேட்டரியை வழங்கியுள்ளது. அதிக பயன்பாட்டில் கூட, இது ஒரு நாளைக்கு மேல் நீடிக்கும் பயனை தருகிறது. இதை ஒப்போ நிறுவனம் 30W VOOC ஃப்ளாஷ் சார்ஜ் 4.0 தொழில்நுட்பத்தால் நீண்டகால பேட்டரி அனுபவத்தை செயல்படுத்தியுள்ளது. OPPO F19 Pro ஸ்மார்ட்போன் 6.43' இன்ச் பஞ்ச்
ஹோல் AMOLED டிஸ்பிளேவை 90.8% ஸ்கிரீன்-டு-பாடி விகிதத்துடன் கொண்டுள்ளது. ஒப்போ எஃப் 19 ப்ரோ ஸ்மார்ட்போன் மீடியா டெக் ஹீலியோ பி 95 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. உங்கள் வீடியோகிராபி மற்றும் புகைப்படம் ஆர்வத்தை மேம்படுத்த ஒப்போ நிறுவனம் இந்த OPPO F19 Pro ஸ்மார்ட்போனில் AI- குவாட்-ரியர்-கேமராவை வழங்கியுள்ளது. இது 48 எம்பி சூப்பர் எச்டி அம்சம் கொண்ட பிரைமரி கேமராவுடன் வருகிறது. இது எந்தவொரு லைட்டிங் நிலையிலும் தெளிவான, உயர்தர வீடியோக்கள் மற்றும்
புகைப்படங்களை எடுக்க அனுமதிக்கிறது. இதில் இரண்டாம் கேமராவாக 8 மெகா பிக்சல் கொண்ட அல்ட்ரா-வைட் ஆங்கிள் சென்சாருடன் இந்த ஸ்மார்ட்போன் வருகிறது. இது உங்கள் பயண சாகசங்களில், நீங்கள் காணும் இயற்கைக் காட்சிகளை வைடு ஆங்கிளில் புகைப்படம் எடுக்க இது அனுமதிக்கிறது. அடுத்த கேமராவாக 2 மெகா பிக்சல் கொண்ட மேக்ரோ லென்ஸ் கேமரா, 4 செ.மீ நெருக்கமான
தூரத்துடன் உலகின் அதிசயங்களை நெருக்கமாகப் படம் பிடிக்க உதவும் வகையில் வைக்கப்பட்டுள்ளது. பூக்கள், இலைகள் மற்றும் அன்றாட வாழ்க்கை பொருட்களின் அழகான மற்றும் ஆழமான நெருக்கமான காட்சிகளை விவரங்களுடன் படம் பிடிக்க இது உதவுகிறது. இறுதியாக குவாட் கேமரா அமைப்பில் 2 மெகா பிக்சல் கொண்ட மோனோ சென்சார் வழங்கப்பட்டுள்ளது.
ஒப்போ எஃப் 17 ப்ரோ
8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ஒப்போ எஃப் 17 ப்ரோ ஸ்மார்ட்போனை அமேசான் தளத்தில் ரூ.23,990-விலையில் வாங்க முடியும். ஒப்போ எஃப் 17 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது 6.43-இன்ச் புல் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 1,080x2,400 பிக்சல்கள் மற்றும் 20:9 அளவிலான திரை விகிதம் உள்ளிட்ட பல்வேறு வசதிகளை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். இந்த ஸ்மார்ட்போனில் 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் இடம்பெற்றுள்ளது. மேலும் ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹீலியோ பி95 சிப்செட் வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது ஒப்போ எஃப் 17 ப்ரோ ஸ்மார்ட்போன். குறிப்பாக ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன்வெளிவந்துள்ளதால் இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும். இந்த ஒப்போ எஃப் 17 ப்ரோ ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி லென்ஸ் + 8எம்பி வைட் ஆங்கிள் கேமரா + 2எம்பி மோனோக்ரோம் சென்சார் + 2எம்பி டெப்த் சென்சார் என மொத்தம் நான்கு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் 16எம்பி பிரைமரி சென்சார் + 2எம்பி டெப்த் சென்சார் என டூயல் செல்பீ கேமராவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான சாதனம். ஒப்போ எஃப் 17 ப்ரோ ஸ்மார்ட்போன் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி வசதியைக் கொண்டுள்ளது. மேலும் இந்த சாதனம் 4015எம்ஏஎச் பேட்டரி மற்றும் 30W வூக் ஃப்ளாஷ் சார்ஜ் 4.0 ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியைக் கொண்டுள்ளது. குறிப்பாக 4ஜி வோல்டிஇ, வைஃபை, ப்ளூடூத், ஜிபிஎஸ் / ஏ-ஜிபிஎஸ், யூ.எஸ்.பி டைப்-சி, 3.5 மிமீ ஹெட்ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது ஒப்போ எஃப்17 ப்ரோ ஸ்மார்ட்போன்.
ஒப்போ ஏ53
6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ஒப்போ ஏ53 ஸ்மார்ட்போன் மாடலை அமேசான் தளத்தில் ரூ.16,180-விலையில் வாங்க முடியும். குறிப்பாக ஒப்போ ஏ53 ஸ்மார்ட்போன் 6.5-இன்ச் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டிருக்கிறது. பின்பு 1600 x 720 பிக்சல் தீர்மானம் மற்றும் 20:9 என்ற திரைவிகிதம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு அறிமுகம் செய்யப்பட்டது. ஒப்போ ஏ53 ஸ்மார்ட்போனில் மிகவும் எதிர்பார்த்த ஸ்னாப்டிராகன் 460 சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது.
பின்பு 90Hz refresh rate வசதி மற்றும் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளதால் இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும். ஒப்போ ஏ53 ஸ்மார்ட்போனின் பின்புறம் 13எம்பி பிரைமரி சென்சார் + 2எம்பி மேக்ரோ கேமரா + 2எம்பி டெப்த் சென்சார் என மொத்தம் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் 16எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த சாதனம். இந்த ஸ்மார்ட்போனில் 5000எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது, மேலும் 18வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவைக் கொண்டு இந்த ஸ்மார்ட்போன் கொண்டுள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். 4 ஜி எல்டிஇ, வைஃபை 802.11 ஏசி, புளூடூத் 5, ஜிபிஎஸ் / க்ளோனாஸ், யூ.எஸ்.பி டைப்-சி மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.
ஒப்போ ஏ74 5ஜி
6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி கொண்ட ஒப்போ ஏ74 5ஜி ஸ்மார்ட்போனை அமேசான் தளத்தில் ரூ.17,990-விலையில் வாங்க முடியும். ஒப்போ ஏ74 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 6.49-இன்ச் எப்எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. மேலும் 1080x2400 பிக்சல் தீர்மானம், 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன்
மாடல். இந்த அசத்தலான ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 480 பிராசஸர் வசதி இடம்பெற்றுள்ளது. மேலும் ColourOS 11.1 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த ஒப்போ ஏ74 5ஜி ஸ்மார்ட்போன் மாடல். இந்த ஒப்போ ஏ74 5ஜி ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி சென்சார் + 2எம்பி டெப்த் சென்சார் + 2எம்பி மேக்ரோ சென்சார் என மொத்தம் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் வீடியோ கால் அழைப்புகளுக்கு என்றே 8எம்பி செல்பீ கேமரா இவற்றுள் இடம்பெற்றுள்ளது. ஒப்போ ஏ74 5ஜி ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு மற்றும் கைரேகை சென்சார் ஆதரவு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். 5ஜி, 4ஜி எல்டிஇ, வைஃபை 802.11 ஏசி, புளூடூத் வி5.1, யூ.எஸ்.பி டைப்-சி, ஜி.பி.எஸ் மற்றும் 3.5 மி.மீ ஆடியோ ஜாக் உட்ப பல இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது ஒப்போ ஏ74 5ஜி ஸ்மார்ட்போன்


Click it and Unblock the Notifications