அமேசான்: பட்ஜெட் விலையில் கிடைக்கும் ஒப்போ ஸ்மார்ட்போன்கள்.! இதோ பட்டியல்.!
ஒப்போ நிறுவனம் தொடர்ந்து அசத்தலான ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. குறிப்பாக இந்நிறுவனம் பாஸ்ட் சார்ஜிங் சார்ந்த தொழில்நுட்பத்தில் அதிக கவனம் செலுத்துகிறது என்றுதான் கூறவேண்டும். குறிப்பாக சியோமி, விவோ நிறுவனங்களுக்கு போட்டியாக அதிநவீன ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது ஒப்போ நிறுவனம்.

அதேபோல் ஒப்போ நிறுவனம் இந்த ஆண்டு பல 5ஜி ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அமேசான் தளத்தில் பட்ஜெட் விலையில் கிடைக்கும் ஒப்போ ஸ்மார்ட்போன்களின் பட்டியலைப் பார்ப்போம்.
ஒப்போ ஏ31
6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ஒப்போ ஏ31 ஸ்மார்ட்போனை அமேசான் தளத்தில் ரூ.12,990-விலையில் வாங்க முடியும். ஒப்போ ஏ31(2020) ஸ்மார்ட்போன் மாடலில் 6.5-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பு இடம்பெற்றுள்ளது. பின்பு720x1,600 பிக்சல் தீர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் வெளிவந்துள்ளது. மேலும் இந்தசாதனத்தின் கைரேகை சென்சார் வசதி இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் 12எம்பி சென்சார் + 2எம்பி மேக்ரோ சென்சார் + 2எம்பி டெப்த் சென்சார் என மூன்றுகேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் 8எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம்என பல்வேறு வசதிகள் இவற்றுள் அடக்கம். ஒப்போ ஏ31 ஸ்மார்ட்போனில் Mediatek 6765 octa core சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது, மேலும் ஆண்ட்ராய்டு9பை இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. ஒப்போ ஏ31சாதனத்தில் 4230எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது, மேலும் 4ஜி எல்டிஇ, வைஃபை, புளூடூத் 5.0, மைக்ரோ யுஎஸ்பி போர்ட் மற்றும் 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள்அடக்கம்.
ஒப்போ எஃப்19 ப்ரோ
8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ஒப்போ எஃப்19 ப்ரோ ஸ்மார்ட்போனை அமேசான் தளத்தில் ரூ.21,990-விலையில் வாங்க முடியும். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் 6.43-இன்ச் டிஸ்பிளே, 2400x1080 பிக்சல் தீர்மானம், இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர் ஆதரவு, 2.2ஜிகாஹெர்ட்ஸ் மீடியாடெக் ஹீலியோ பி95 ஆக்டோ-கோர் சிப்செட், ஆண்ட்ராய்டு 11 இயங்குதளம், 4310 எம்ஏஎச் பேட்டரி, 30 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது. அதேபோல் ஒப்போ எஃப்19 ப்ரோ ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி மெயின் கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா +2எம்பி மேக்ரோ கேமரா + 2எம்பி போர்ட்ரெயிட் லென்ஸ் என மொத்தம் நான்கு கேமராக்கள் உள்ளன. பின்பு செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும்என்றே
16எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன். இதுதவிர பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.
ஒப்போ ஏ16
4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட ஒப்போ ஏ16 ஸ்மார்ட்போனை அமேசான் தளத்தில் ரூ.13,490-விலையில் வாங்க முடியும். இந்த ஒப்போ ஏ16 ஸ்மார்ட்போன் ஆனது 6.52-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 720 x 1600 பிக்சல் தீர்மானம், 20:9 என்ற திரைவிகிதம், 480 நிட்ஸ் ப்ரைட்னஸ், 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு இந்த புதிய ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. பெரிய டிஸ்பிளே என்பதால் இந்த சாதனத்தை பயன்படுத்துவதற்கு அருமையாக இருக்கும். அதேசமயம் இதன் வடிவமைப்பும் மிக அருமையாக உள்ளது. ஒப்போ ஏ16 ஸ்மார்ட்போனில்
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மீடியாடெக் ஹீலியோ ஜி35 சிப்செட் வசதி உள்ளது. எனவே இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும் என்றே கூறலாம். பின்பு ColorOS 11.1 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த புதிய ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. ஒப்போ ஏ16 ஸ்மார்ட்போனின் பின்புறம் 13எம்பி பிரைமரி சென்சார் + 2எம்பி மேக்ரோ சென்சார் + 2எம்பி டெப்த சென்சார் என மொத்தம் மூன்று கேமராக்கள் உள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி செல்பீ கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல். இந்த ஒப்போ ஏ16 ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச்
பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் 10 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். பின்பு டூயல் 4ஜி வோல்ட்இ, என்எப்சி, ப்ளூடூத், வைஃபை, 3.5 மிமீ ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த புதிய ஒப்போ ஏ16 ஸ்மார்ட்போன்.
ஒப்போ ஏ54
4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட ஒப்போ ஏ54 ஸ்மார்ட்போனை அமேசான் தளத்தில் ரூ.13,990-விலையில் வாங்க முடியும். ஒப்போ ஏ54 ஸ்மார்ட்போன் ஆனது 6.51-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 720x1,600 பிக்சல் தீர்மானம், 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன்மாடல். ஒப்போ ஏ54 ஸ்மார்ட்போனில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹீலியோ பி35 (எம்டி6765) பிராசஸர் வசதி இடம்பெறுள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது
இந்த புதிய ஸ்மார்ட்போன். விரைவில் ஆண்ட்ராய்டு 11 அப்டேட் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒப்போ ஏ54 ஸ்மார்ட்போனின் பின்புறம் 13எம்பி பிரைமரி சென்சார் + 2எம்பி செகன்டரி சென்சார் + 2எம்பி tertiary சென்சார் என மொத்தம் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் வீடியோ கால் அழைப்புகளுக்கு என்றே 16எம்பி செல்பீ கேமரா இவற்றுள்ள அடக்கம். குறிப்பாக இரவு நேரங்களில் கூட இந்த ஸ்மார்ட்போனின் கேமரா கொண்டு துல்லியமான வீடியோக்களை எடுக்கமுடியும் என்று ஒப்போ நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒப்போ ஏ54 ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே சார்ஜ்
பற்றிய கவலை இருக்காது. மேலும் 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, கைரேகை சென்சார் என பல்வேறு அட்டகாச அம்சங்களை கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன்மாடல். 4ஜி எல்டிஇ, வைஃபை 802.11 ஏசி, ப்ளூடூத் 5.0, ஜிபிஎஸ் / ஏ-ஜிபிஎஸ், என்எப்சி, ஐஆர் பிளாஸ்டர், ஹெட்ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த புதிய ஒப்போ ஏ54 ஸ்மார்ட்போன்.


Click it and Unblock the Notifications