Home
Deal of the day

அமேசான்: பட்ஜெட் விலையில் கிடைக்கும் ஒப்போ ஏ31 ஸ்மார்ட்போன்.!

ஒப்போ நிறுவனம் தொடர்ந்து அதிநவீன ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்து வருகிறது. குறிப்பாக தரமான டிஸ்பிளே, தனித்துவமான சிப்செட், பாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்கிறது ஒப்போ ஸ்மார்ட்போன் மாடல்.

அமேசான்: பட்ஜெட் விலையில் கிடைக்கும் ஒப்போ ஏ31 ஸ்மார்ட்போன்.!

ஒப்போ நிறுவனம் அடுத்த ஆண்டு தரமான பல ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. மேலும் இப்போது அமேசான் தளத்தில் பட்ஜெட் விலையில் கிடைக்கும் ஒப்போ ஸ்மார்ட்போன்களின் பட்டியலைப் பார்ப்போம்.

ஒப்போ ஏ16

4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி வசதி கொண்ட ஒப்போ ஏ31 ஸ்மார்ட்போன் மாடலை அமேசான் தளத்தில் ரூ.13,490-விலையில் வாங்க முடியும். ஒப்போ ஏ16 ஸ்மார்ட்போன் ஆனது 6.52-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 720 x 1600 பிக்சல் தீர்மானம், 20:9 என்ற திரைவிகிதம், 480 நிட்ஸ் ப்ரைட்னஸ், 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக
கொண்டு இந்த புதிய ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. ஒப்போ ஏ16 ஸ்மார்ட்போனில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மீடியாடெக் ஹீலியோ ஜி35 சிப்செட் வசதி உள்ளது. எனவே இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும் என்றே கூறலாம். பின்பு ColorOS 11.1 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த புதிய ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. ஒப்போ ஏ16 ஸ்மார்ட்போனின் பின்புறம் 13எம்பி பிரைமரி சென்சார் + 2எம்பி மேக்ரோ சென்சார் + 2எம்பி டெப்த சென்சார் என மொத்தம் மூன்று கேமராக்கள் உள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி செல்பீ கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல். அதேபோல் கைரேகை
சென்சார், ஃபேஸ் அன்லாக் உள்ளிட்ட பல்வேறுசிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த ஒப்போ ஏ16 ஸ்மார்ட்போன். இந்த ஒப்போ ஏ16 ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் 10 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். பின்பு டூயல் 4ஜி வோல்ட்இ, என்எப்சி, ப்ளூடூத், வைஃபை, 3.5 மிமீ ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த புதிய ஒப்போ ஏ16 ஸ்மார்ட்போன்.அதேபோல் இந்த சாதனத்தின் எடை 190 கிராம் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒப்போ ஏ 54

4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட ஒப்போ ஏ54 ஸ்மார்ட்போன் மாடலை அமேசான் தளத்தில் ரூ.14,990-விலையில் வாங்க முடியும். ஒப்போ ஏ 54 ஸ்மார்ட்போன் 6.51' இன்ச் எச்டி பிளஸ் உடன் கூடிய 720x1600 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இது நிலையான 60 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதம், 89.2 சதவீத டிஸ்பிளே டு பாடி விகிதம் மற்றும் 269 பிபி பிக்சல் அடர்த்தி ஆகியவற்றைக்
கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் மீடியாடெக் ஹீலியோ பி 35 (எம்டி 6765) சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. ஒப்போ ஏ 54 ஸ்மார்ட்போன் ஒரு டிரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. இதில் எல்இடி ப்ளாஷ் உடன் கூடிய 13 மெகா பிக்சல் பிரைமரி கேமரா, 2 மெகாபிக்சல் மேக்ரோ செகண்டரி சென்சார் மற்றும் 2 மெகாபிக்சல் கொண்ட டெப்த் சென்சார் ஆகியவை வழங்கப்பட்டுள்ளது.
முன்புறத்தில், இந்த ஸ்மார்ட்போனின் மேல் இடது மூலையில் அமைந்துள்ள பஞ்ச் ஹோல் கட்அவுட்டில் செல்பீ மற்றும் வீடியோ காலிங் அழைப்புகளுக்காக 16 மெகாபிக்சல் கொண்ட செல்பி ஷூட்டர் வழங்கப்பட்டுள்ளது. புதிய ஒப்போ A54 ஸ்மார்ட்போன் ஆனது 5,000 mah பேட்டரி மூலம் 18W பாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் வருகிறது. இந்த புதிய ஸ்மார்ட்போன் வாட்டர் ரெசிஸ்டன்ஸ் அம்சத்திற்கான
ஐபிஎக்ஸ் 4 சான்றிதழுடன் வருகிறது. இது ஆண்ட்ராய்டு 10 ஐ அடிப்படையாகக் கொண்ட கலர்ஓஎஸ் 7.2 ஐ மூலம் இயக்குகிறது. பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை சென்சார் இதில் வழங்கப்பட்டுள்ளது. ஒப்போ A54 ஸ்மார்ட்போனின் இணைப்பு விருப்பங்களை பொறுத்த வரையில், இந்த சாதனம் டூயல் 4G VoLTE, Wi-Fi 802.11 ac (2.4 + 5GHz), புளூடூத் 5.0, GPS + GLONASS, யூஎஸ்பி டைப்-C ஆகிய அம்சங்களுடன் வருகிறது.

ஒப்போ ஏ53

4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட ஒப்போ ஏ53 ஸ்மார்ட்போன் மாடலை அமேசான் தளத்தில் ரூ.13,529-விலையில் வாங்க முடியும். ஒப்போ ஏ53 ஸ்மார்ட்போன் 6.53-இன்ச் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டிருக்கிறது. பின்பு 1600 x 720 பிக்சல் தீர்மானம் மற்றும் 20:9 என்ற திரைவிகிதம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு அறிமுகம் செய்யப்பட்டது.
ஒப்போ ஏ53 ஸ்மார்ட்போனில் மிகவும் எதிர்பார்த்த ஸ்னாப்டிராகன் 460 சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது. பின்பு 90Hz refresh rate வசதி மற்றும் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளதால் இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும். ஒப்போ ஏ53 ஸ்மார்ட்போனின் பின்புறம் 13எம்பி பிரைமரி சென்சார் + 2எம்பி மேக்ரோ கேமரா + 2எம்பி டெப்த்
சென்சார் என மொத்தம் மூன்று கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் 16எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த சாதனம். இந்த ஸ்மார்ட்போனில் 5000எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது, மேலும் 18வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவைக் கொண்டு இந்த ஸ்மார்ட்போன் கொண்டுள்ளதால்
பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். 4 ஜி எல்டிஇ, வைஃபை 802.11 ஏசி, புளூடூத் 5, ஜிபிஎஸ் / க்ளோனாஸ், யூ.எஸ்.பி டைப்-சி மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

ஒப்போ ஏ74 5ஜி

6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி கொண்ட ஒப்போ ஏ74 5ஜி ஸ்மார்ட்போனை அமேசான் தளத்தில் ரூ.17,990-விலையில் வாங்க முடியும். ஒப்போ ஏ74 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 6.49-இன்ச் எப்எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. மேலும் 1080x2400 பிக்சல் தீர்மானம், 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல். இந்த அசத்தலான ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 480 பிராசஸர் வசதி இடம்பெற்றுள்ளது. மேலும் ColourOS 11.1 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த ஒப்போ ஏ74 5ஜி ஸ்மார்ட்போன் மாடல். இந்த ஒப்போ ஏ74 5ஜி ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி சென்சார் + 2எம்பி டெப்த் சென்சார் + 2எம்பி மேக்ரோ சென்சார் என மொத்தம் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் வீடியோ கால் அழைப்புகளுக்கு என்றே 8எம்பி செல்பீ கேமரா இவற்றுள் இடம்பெற்றுள்ளது. ஒப்போ ஏ74 5ஜி ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு மற்றும் கைரேகை சென்சார் ஆதரவு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். 5ஜி, 4ஜி எல்டிஇ, வைஃபை 802.11 ஏசி, புளூடூத் வி5.1, யூ.எஸ்.பி டைப்-சி, ஜி.பி.எஸ் மற்றும் 3.5 மி.மீ ஆடியோ
ஜாக் உட்ப பல இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது ஒப்போ ஏ74 5ஜி ஸ்மார்ட்போன்.

English summary
OPPO smartphones available at budget prices on Amazon: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X