Home
Deal of the day

யாரு சாமி அவன்.. ரூ.13,000 விலை குறைப்பு.. மட்ட ரேட்ல 5600mAh பேட்டரி.. 50MP கேமரா.. 16GB ரேம்.. எந்த மாடல்?

இந்திய மார்கெட்டில் மிட்-ரேஞ்ச் மாடலாக களமிறங்கிய ஓப்போ ரெனோ13 5ஜி (OPPO Reno13 5G) ஸ்மார்ட்போன் இப்போது நேரடி விலை குறைப்பு போக பட்ஜெட் விலைக்கு வந்துவிட்டது. இந்த விலைக்கு 5600mAh பேட்டரி, 80W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 50 எம்பி கேமராவை கொடுக்கிறது. இந்த ஓப்போ ரெனோ13 5ஜி ஸ்மார்ட்போனின் முழு விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

பிளிப்கார்ட் தளத்தில் 8 ஜிபி ரேம் (8 ஜிபி விர்ச்சுவல் ரேம்) + 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டின் ரூ.24,999ஆக இருக்கிறது. ஆனால், இந்திய மார்கெட்டில் வெளியானபோது, இதே 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.37,999ஆக இருந்தது. ஆகவே, ரூ.13,000 நேரடியாக விலை குறைப்பு கிடைக்கிறது. இதுபோக ரூ.1,250 கிரெடிட் கார்டு டிஸ்கவுண்ட் கிடைக்கிறது.

யாரு சாமி அவன்.. ரூ.13,000 விலை குறைப்பு.. மட்ட ரேட்ல 5600mAh பேட்டரி!

ஆகவே, ரூ.23,749 பட்ஜெட்டில் வாங்கி கொள்ளலாம். ஆகவே, கிட்டத்தட்ட ரூ.15,000 தள்ளுபடி விலைக்கு இந்த மிட்-ரேஞ்ச் பீச்சர்களை கொண்ட ஸ்மார்ட்போன் கிடைக்கிறது. ஐவரி ஒயிட் (Ivory White), லூமினஸ் ப்ளூ (Luminous Blue) மற்றும் ஸ்கை ப்ளூ (Sky Blue) ஆகிய மூன்று கலர்களில் இந்த ஓப்போ ரெனோ13 5ஜி ஸ்மார்ட்போனை ஆர்டர் செய்து கொள்ளலாம்.

ஓப்போ ரெனோ13 5ஜி அம்சங்கள் (OPPO Reno13 5G Specifications): இந்த ரெனோ ஸ்மார்ட்போனில் 6.59 இன்ச் (2760 x 1256 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே கொடுக்கப்பட்டுள்ளது. இந்த டிஸ்பிளேவுக்கு 1.5K ரெசொலூஷன், 240Hz டச் சாம்பிளிங் ரேட் மற்றும் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைக்கிறது. மேலும், 1200 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொடுக்கப்பட்டுள்ளது.

இதுபோக 3840Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி கிடைக்கிறது. பிரீமியம் மாடல்களுக்கு நிகராக பர்ஃபாமென்ஸ் கொடுக்கும்படி ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 8350 4என்எம் (Octa Core Dimensity 8350 4nm) சிப்செட் கொண்டுள்ளது. ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) மற்றும் கேமிங் பிரியர்களுக்கு பக்கா அவுட்புட் கொடுக்கும்படி மாலி ஜி615 ஜிபியு (Mali G615 GPU) கிராபிக்ஸ் கார்டு உள்ளது.

இந்த 3 ஜெனரேஷன் ஆண்ட்ராய்டு அப்டேட்கள் மற்றும் 4 வருடங்களுக்கு செக்யூரிட்டி அப்டேட்களை இந்த ஓப்போ ரெனோ13 5ஜி ஸ்மார்ட்போன் கொடுக்கிறது. மேலும், கலர்ஓஎஸ் 15 (ColorOS 15) கொடுக்கப்பட்டு இருக்கிறது. இதில் ஏஐ லிங்ஸ் பூஸ்ட் (AI Linkboost) மற்றும் பீக்கன்லிங்க் (BeaconLink) போன்ற பர்ஃபாமென்ஸ் பீச்சர்கள் கூடுதலாக கொடுக்கப்பட்டு இருக்கின்றன.

மேலும், ஸ்கிரீன் டிரான்ஸ்லேட்டர் (Screen Translator), ஏஐ சம்மரி (AI Summary), ஏஐ ரைட்டர் (AI Writer) போன்ற அசிஸ்டன்ஸ் பீச்சர்களும் கிடைக்கின்றன. 50 எம்பி மெயின் கேமரா மற்றும் 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா கிடைக்கிறது. மேலும், 2 எம்பி மோனோகுரோம் கேமராவுடன் ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் கொடுக்கிறது. சோனி எல்ஒய்டி 600 (Sony LYT 600) சென்சார் உள்ளது.

இந்த ஓப்போ ரெனோ13 5ஜி ஸ்மார்ட்போனில் 50 எம்பி செல்பீ கேமரா கொடுக்கப்படுகிறது. இந்த கேமராவுக்கு ஏஐ லைவ் போட்டோ (AI Livephoto) சப்போர்ட் கிடைக்கிறது. அதேபோல அண்டர் வாட்டர் போட்டோகிராபி கொடுக்க IP66 ரேட்டிங் + IP68 ரேட்டிங் மற்றும் IP69 ரேட்டிங் கொடுக்கப்படுகிறது. ஏஐ கிளாரிட்டி என்ஹான்சர் (AI Clarity Enhancer) பீச்சரும் உள்ளது.

மேலும், ஏஐ அன்பிளர் (AI Unblur) மற்றும் ஏஐ ரெஃப்ளெக்சன் ரிமூவர் (AI Reflection Remover) பீச்சர்கள் கிடைக்கின்றன. இந்த ஓப்போ ரெனோ13 5ஜி ஸ்மார்ட்போனில் 80W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 5600mAh பேட்டரி கொடுக்கப்பட்டு இருக்கிறது. இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor), இன்பிராரெட் சென்சார் (Infrared Sensor) கிடைக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
OPPO Reno13 5G With 8GB RAM Available Under Rs 24000 in India Ahead 2026 Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X