Home
Deal of the day

6000mAh பேட்டரி.. 80W சார்ஜிங்.. ரூ.1850 ஆஃபர் ரேட்ல OPPO Reno 15 5G ஸ்மார்ட்போன்.. புது விலை எப்படி?

பிளிப்கார்ட் விற்பனையில் விலை குறைப்பு மற்றும் பேங்க் தள்ளுபடி போக ஓப்போ ரெனோ 15 5ஜி (OPPO Reno 15 5G) ஸ்மார்ட்போன் கிடைக்கிறது. 6000mAh பேட்டரி, 80W சார்ஜிங், 50 மெகா பிக்சல் கேமரா மற்றும் அமோலெட் டிஸ்பிளேவை கொடுக்கும் இந்த ஸ்மார்ட்போனுக்கு ஆர்டர்கள் குவிந்து வருகின்றன.

8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் கொடுக்கும் வேரியண்ட்டின் விலை தற்போது பிளிப்கார்ட் தளத்தில் ரூ.36,999ஆக இருக்கிறது. இந்த விலையே ரூ.1,000 விலை குறைப்புடன் கிடைக்கிறது. இதில் கூடுதலாக தகுதியான கிரெடிட் கார்டுகளுக்கு ரூ.1,850 தள்ளுபடியும் கொடுக்கப்படுகிறது. இதை பெறும்பட்சத்தில் ரூ.35,149 விலைக்கு வாங்கி கொள்ளலாம்.

6000mAh பேட்டரி.. 80W சார்ஜிங்.. ரூ.1850 ஆஃபர் ரேட்ல OPPO Reno 15!

இந்த மாடலை தவிர்த்து, 256 ஜிபி ஸ்டோரேஜ் + 12 ஜிபி ரேம், 512 ஜிபி ஸ்டோரேஜ் + 12 ஜிபி ரேம் உடன் கிடைக்கும் மாடல்களும் இருக்கின்றன. இதற்கும் விலை குறைப்புடன் பேங்க் தள்ளுபடியும் கிடைக்கிறது. பேர்ல் ஒயிட் (Pearl White), ஃபாரஸ்ட் கிரீன் (Forest Green), மின்ட் கிரீன் (Mint Green) மற்றும் தீபாவளி கோல்டு எடிஷன் (Diwali Gold Edition) கலர்கள் உள்ளன.

ஓப்போ ரெனோ 14 5ஜி முக்கிய அம்சங்கள்: 2760 x 1256 பிக்சல்களுடன் 6.59 இன்ச் அமோலெட் பேனலை கொடுத்துள்ளது. 1.5K ரெசொலூஷனையும், 120Hz ரெஃப்ரெஷ் ரேட்டையும் கொடுக்கிறது. 240Hz டச் சாம்பிளிங் ரேட், 3840Hz பிடபுள்யூஎம் டிம்மிங் ஃபிரிகொன்சி கிடைத்துள்ளது. 1200 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் உள்ளது. கார்னிங் கொரில்லா கிளாஸ் 7ஐ பாதுகாப்பு கொண்ட மாடலாக இருக்கிறது.

எப்/1.8 அபெர்சர், சோனி ஐஎம்எக்ஸ்883 சென்சார், ஓஐஎஸ் ஸ்டெபிலைசேஷனுடன் 50 மெகா பிக்சல் பிரைமரி கேமரா + 112º வைடு, எப்/2.2 அபெர்சர், ஓம்னிவிஷன் ஓவி08டி சென்சாருடன் 8 மெகா பிக்சல் அல்ட்ரா வைடு கேமரா + எப்/2.8 அபெர்சர், சாம்சங் ஜேஎன்5 சென்சார், ஓஐஎஸ் ஸ்டெபிலைசேஷனுடன் 50 மெகா பிக்சல் டெலிபோட்டோ கேமரா கிடைக்கிறது.

6000mAh பேட்டரி.. 80W சார்ஜிங்.. ரூ.1850 ஆஃபர் ரேட்ல OPPO Reno 15!

3.5X ஜூம், 4K ரெக்கார்டிங் செய்து கொள்ளலாம். முன்பக்கத்தில் எப்/2.0 அபெர்சர், டெலிபோட்டோவில் கிடைத்த சென்சார் மற்றும் வீடியோ ரெக்கார்டிங்குடன் 50 எம்பி கேமரா கிடைக்கிறது. மீடியாடெக் டைமன்சிட்டி 8350 4என்எம் சிப்செட் உள்ளது. மாலி ஜி615 எம்சி 6 ஜிபியு கிடைப்பதால், டிஸ்பிளேவிலும் பிரீமியம் அனுபவம் கிடைக்கும்.

ஆக்டா கோர் கொண்டுள்ளது. கலர்ஓஎஸ் 15 உடன் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் கிடைத்துள்ளது. ஐபி66 ரேட்டிங் மற்றும் ஐபி68 ரேட்டிங் உள்ளது. கூடுதலாக ஐபி69 ரேட்டிங்குடன் டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ஸ் கிடைத்துள்ளது. இன்பிராரெட் சென்சாரும், இன்டிஸ்பிளேவில் கிடைக்கும் ஃபிங்கர்பிரிண்ட் சென்சாரும் கொடுக்கப்பட்டு உள்ளது.

டைப்-சி போர்ட்டில் ஆடியோ சப்போர்ட் கிடைக்கும். ஸ்டீரியோ ஸ்பீக்கர் வருகிறது. 80W ஃபாஸ்ட் சார்ஜிங்கானது, சூப்பர்வூப் சப்போர்ட்டுடன் கிடைக்கிறது. 7.32 எம்எம் தடிமன் பாடியில் 6000mAh பேட்டரி கிடைத்துள்ளது. 187 கிராம் எடையும் வருவதால், ஓரளவுக்கு ஸ்லிமான மற்றும் லைட் வெயிட்டிலான ஸ்மார்ட்போனாக இது இருக்கிறது.

5ஜி ஸ்மார்ட்போனில் கிடைக்கும் வழக்கமான கனெக்டிவிட்டிகள் உள்ளன. 5ஜி எஸ்ஏ/என்எஸ்ஏ மற்றும் 4ஜி வோஎல்டிஇ டூயல் கிடைக்கிறது. வை-பை 6, ப்ளூடூத் 5.4 மற்றும் ஜிபிஎஸ் கனெக்டிவிட்டிகளும் இருக்கின்றன, கூடுதலாக குளோனாஸ், கலிலியோ, கியூஇசட்எஸ்எஸ் மற்றும் பெய்டு ஆகிய கனெக்டிவிட்டிகளும் பேக் செய்யப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
OPPO Reno 15 5G With 50MP Camera Get Rs 1850 Bank Discount Rs 1000 Price Cut Check Flipkart Offer
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X