புதுசு வந்ததும் பழசுக்கு டிஸ்கவுண்ட்.. அமேசானில் ரூ.4800 தள்ளுபடி.. OPPO-வின் 6500mAh பேட்டரி 5ஜி போன்!
ஒப்போ (OPPO) நிறுவனம் தனது பிரபலமான ரெனோ சீரிஸின் கீழ் 2 புதிய 5ஜி ஸ்மார்ட்போன்களை இன்று (ஜூலை 2) இந்தியாவில் அறிமுகம் செய்தது: ஒப்போ ரெனோ 16 5ஜி (Oppo Reno 16 5G) மற்றும் ஒப்போ ரெனோ 16சி 5ஜி (Oppo Reno 16c 5G).
புதிய ஒப்போ ரெனோ 16 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமான வேகத்தில், கடந்த 2026 ஜனவரி மாதம் இந்தியாவில் அறிமுகமான ஒப்போ ரெனோ 15 5ஜி (Oppo Reno 15 5G) ஸ்மார்ட்போன் மீது, அமேசான் இந்தியா வலைத்தளமானது 2 வகையான ஆபர்கள் அறிவித்துள்ளது.

தற்போது அமேசான் இந்தியா வலைத்தளத்தில் - ஒப்போ ரெனோ 15 5ஜி ஸ்மார்ட்போனின் பேஸிக் 8ஜிபி ரேம் + 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.47,999 க்கு வாங்க கிடைக்கிறது. இது அறிமுக விலையான ரூ.45,999-ஐ விட ரூ.2000 அதிகமாகும். இந்த விலை உயர்விற்கு சமீப காலமாக நிலவும் மெமரி பற்றாக்குறை தான் காரணம்.
இருப்பினும் அமேசான் இந்தியா இதற்கும் சேர்த்து - ஒப்போ ரெனோ 15 ஸ்மார்ட்போன் மீது ரூ.4799 பேங்க் டிஸ்கவுண்ட்டை வழங்குகிறது. குறிப்பிட்ட வங்கிகளின் கார்டுகளை பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் இஎம்ஐ (EMI) மற்றும் நான்-இஎம்ஐ (Non-EMI) பரிவர்த்தனைகளுக்கு ரூ.4,799 உடனடித் தள்ளுபடி கிடைக்கும் என்று அமேசான் பட்டியலிடப்பட்டுள்ளது.
இதோடு ஒப்போ ரெனோ 15 5ஜி ஸ்மார்ட்போனை வாங்க அமேசான் பே பேலன்ஸ் வழியாக பணம் செலுத்தினால் ரூ.1439 கேஷ்பேக் கிடைக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள வாடிக்கையாளர்கள், இந்த சலுகையை பயன்படுத்தி கொள்ளவும். ஏனென்றால் புதிய ஒப்போ ரெனோ 16 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது ரூ.61,999 என்கிற ஆரம்ப விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இது ஒப்போ ரெனோ 16 ஸ்மார்ட்போனின் 8ஜிபி ரேம் + 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷனின் விலையாகும். இதே ஸ்மார்ட்போனின் 12ஜிபி ரேம் + 256ஜிபி ஆப்ஷன் ரூ.67,999 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மறுகையில் உள்ள ஒப்போ ரெனோ 16சி 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது ரூ.46,999 என்ற ஆரம்ப விலையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இரண்டுமே ஜூலை 9 முதல் விற்பனைக்கு வரும்,ஒப்போ ஸ்டோர், பிளிப்கார்ட், அமேசான் வழியாக வாங்கலாம்.
ஒப்போ ரெனோ 15 5ஜி ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்:
- 1.5K ரெசல்யூஷன் (1256 x 2760 பிக்சல்கள்) மற்றும் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.59-இன்ச் LTPS AMOLED டிஸ்பிளே
- குவால்காம் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 4 சிப்செட்
- 50MP ப்ரைமரி (OIS) கேமரா + 50MP டெலிஃபோட்டோ (OIS) கேமரா + 8MP அல்ட்ரா-வைட் கேமரா
- 50MP செல்பீ கேமரா
- 80W SUPERVOOC ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி
- 6500mAh பேட்டரி
- IP69 ரேட்டிங்
புதிய ஒப்போ ரெனோ 16 5ஜி ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்:
- 120Hz ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.32-இன்ச் FHD+ AMOLED டிஸ்பிளே
- ஸ்னாப்டிராகன் 7 ஜென் 4 சிப்செட்
- 8GB/12GB LPDDR5X ரேம்
- 256GB UFS 3.1 ஸ்டோரேஜ்
- 50MP சோனி LYT-600 ப்ரைமரி சென்சார், 50MP அல்ட்ரா-வைட் சென்சார் மற்றும் 3.5x ஆப்டிகல் ஜூம் வசதி கொண்ட 50MP சாம்சங் JN5 டெலிஃபோட்டோ லென்ஸ்
- 50MP செல்பீ கேமரா
- 80W SUPERVOOC பாஸ்ட் சார்ஜிங்
- 6,700mAh பேட்டரி


Click it and Unblock the Notifications