Home
Deal of the day

தங்கத்த தூக்குங்க ப்ரோ.. பட்ஜெட்ல 7000mAh பேட்டரி.. 80W சார்ஜிங்.. OIS கேமரா.. AMOLED டிஸ்பிளே.. எந்த மாடல்?

பிளிப்கார்ட் தளத்தில் ஓப்போ எப்31 ப்ரோ 5ஜி (OPPO F31 Pro 5G) ஸ்மார்ட்போன், தள்ளுபடி விலைக்கு வாங்க கிடைக்கிறது. பட்ஜெட் விலையில் 7000mAh பேட்டரி கொண்ட மாடலாக இருக்கிறது. இதுபோக 80W ஃபாஸ்ட் சார்ஜிங், ஓஐஎஸ் கேமரா, அமோலெட் டிஸ்பிளே, IP69 ரேட்டிங் போன்ற பீச்சர்களை கொடுக்கிறது. ஆக்டோ கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7300 எனர்ஜி சிப்செட் கொண்ட இந்த ஓப்போ எப்31 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனின் பீச்சர்கள், விலை மற்றும் தள்ளுபடி விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.26,999ஆக இருக்கிறது. 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.28,999ஆகவும், 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.30,999ஆகவும் இருக்கிறது. இப்போது, பிளிப்கார்ட் தளத்தில் ரூ.1,500 பேங்க் தள்ளுபடி போக விற்பனைக்கு கிடைக்கிறது.

தங்கத்த தூக்குங்க ப்ரோ.. பட்ஜெட்ல 7000mAh பேட்டரி.. 80W சார்ஜிங்!

பிளிப்கார்ட் ஆக்சிஸ் பேங்க் கிரெடிட் கார்டு மூலம் ஈஎம்ஐ ஆப்ஷனில் ஆர்டர் செய்தால், ரூ.2,900 மதிப்பில் தள்ளுபடியை பெற்று கொள்ளலாம். ஆகவே, ரூ.25,499 பட்ஜெட்டில் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டை வாங்கி கொள்ள முடியும். அதேபோல 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டை ரூ.27,499 பட்ஜெட்டில் பெற்று கொள்ள முடியும்.

ஓப்போ எப்31 ப்ரோ 5ஜி அம்சங்கள் (OPPO F31 Pro 5G Specifications): இந்த ஓப்போ ஸ்மார்ட்போனில் 6.57 இன்ச் (2372 x 1080 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த டிஸ்பிளேவில் ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலுஷன், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 1400 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது.

மேலும், 2160Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி கிடைக்கிறது. பட்ஜெட் மாடலாக இருந்தும் டிடி-ஸ்டார் டிபிளஸ் (DT-Star D+) புரொடெக்சன் கிடைக்கிறது. ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) மற்றும் கலர்ஓஎஸ் 15.0 (ColorOS 15.0) கிடைக்கிறது. ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7300 எனர்ஜி 4என்எம் (Octa Core MediaTek Dimensity 7300 Energy 4nm) சிப்செட் உள்ளது.

இதுபோக டிரினிட்டி என்ஜின் (Trinity Engine) மற்றும் லூமினஸ் ரென்டரிங் என்ஜின் (Luminous Rendering Engine) கிடைக்கிறது. இந்த சிப்செட்டில் மாலி ஜி615 எம்சி2 ஜிபியு (Mali G615 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டு கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போனுக்கு 2 ஜெனரேஷன் ஓஎஸ் அப்டேட் மற்றும் 2 வருடங்களுக்கான செக்யூரிட்டி அப்டேட்கள் கிடைக்கின்றன.

50 எம்பி மெயின் கேமரா, ஓம்னிவிஷன் ஓவி50டி40 (OV50D40) சென்சாருடன் கிடைக்கிறது. இதில் ஓஐஎஸ் (OIS) கேமரா சப்போர்ட் கிடைக்கிறது. மேலும், 2 எம்பி டெப்த் கேமரா மற்றும் கேலக்ஸி கோர் 02எம்1பி (Galaxy Core 02M1B) சென்சார் கிடைக்கிறது. 32 எம்பி செல்பீ ஷூட்டர் உள்ளது. இதிலும் கேலக்ஸி கோர் 32ஈ2 (Galaxy Core 32E2) சென்சார் கிடைக்கிறது.

IP66 ரேட்டிங் + IP68 ரேட்டிங் + IP69 ரேட்டிங் வாட்டர் & டஸ்ட் ரெசிஸ்டன்ட் மற்றும் MIL-STD-810H மிலிட்டரி கிரேடு டியூரபிலிட்டி உள்ளது. ஹை-ரெஸ் ஆடியோ, ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் உள்ளது. இந்த ஓப்போ எப்31 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனில் டெசர்ட் கோல்டு (Desert Gold) மற்றும் ஸ்பேஸ் கிரே (Space Grey) ஆகிய கலர்கள் விற்பனைக்கு கிடைக்கின்றன.

More from GizBot

Best Mobiles in India

English summary
OPPO F31 Pro 5G 50MP Camera Sale With Discounted Price on Flipkart Offer Check New Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X