மிரளுது தீபாவளி ஆஃபர்.. ரூ.21,499 போதும்.. 7000mAh பேட்டரி.. 80W சார்ஜிங்.. AMOLED டிஸ்பிளே.. எந்த மாடல்?
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பிளிப்கார்ட் தளத்தில் பல்வேறு ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு தள்ளுபடி கிடைக்கிறது. இதில் ஓப்போ எப்31 5ஜி (OPPO F31 5G) ஸ்மார்ட்போனுக்கு பேங்க் தள்ளுபடி கிடைக்கிறது. 7000mAh பேட்டரி, 80W ஃபாஸ்ட் சார்ஜிங் மட்டுமல்லாமல், அமோலெட் டிஸ்பிளே, ஓஐஎஸ் கேமரா மற்றும் IP69 ரேட்டிங் கொண்ட வாட்டர் ரெசிஸ்டன்ட் கொடுக்கிறது. ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6300 சிப்செட் கொண்ட இந்த ஓப்போ எப்31 5ஜி ஸ்மார்ட்போனின் விலை, பீச்சர்கள் குறித்த விவரங்கள் இதோ.
8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.22,999ஆகவும், 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.24,999ஆகவும் இருக்கிறது. இப்போது, பிளிப்கார்ட் தளத்தில் ரூ.1,500 உடனடி தள்ளுபடி போக விற்பனைக்கு கிடைக்கிறது. மல்டிபிள் பேங்க் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளுக்கு இந்த டிஸ்கவுண்ட் கிடைக்கிறது.

ஆகவே, ரூ.21,499 பட்ஜெட்டில் வாங்கி கொள்ளலாம். மேலும், பிளிப்கார்ட் ஆக்சிஸ் பேங்க் கிரெடிட் கார்டு மூலம் ஆர்டர் செய்யும் கஸ்டமர்களுக்கு ரூ.2,300 தள்ளுபடி கிடைக்கிறது. ஆகவே, ரூ.20,699 பட்ஜெட்டில் வாங்கி கொள்ளலாம். மேலும், ரூ.2,000 மதிப்பில் எக்ஸ்சேஞ்ச் போனஸ் கிடைக்கிறது. இப்போது டிஸ்பிளே, கேமரா, பேட்டரி பீச்சர்களை தெரிந்து கொள்ளலாம்.
ஓப்போ எப்31 5ஜி அம்சங்கள் (OPPO F31 5G Specifications): இந்த ஓப்போ ஸ்மார்ட்போனில் ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6300 எனர்ஜி 6என்எம் (Octa Core MediaTek Dimensity 6300 Energy 6nm) சிப்செட் கிடைக்கிறது. மேலும், ஆர்ம் மாலி ஜி57 ஜிபியு (Arm Mali G57 GPU) கிராபிக்ஸ் கார்டு மற்றும் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) கிடைக்கிறது.
ஏஐ லிங்க்பூஸ்ட் 3.0 (AI LinkBoost 3.0), அவுட்டோர் மோட் 2.0 (Outdoor Mode 2.0) போன்ற பீச்சர்களுடன் கலர்ஓஎஸ் 15.0 (ColorOS 15.0) கிடைக்கிறது. மேலும், கேமராவில் ஏஐ நைட் மோட் (AI Night Mode), போர்ட்ராய்டு மோட் (Portrait Mode), மோஷன் போட்டோ (Motion Photo), ஏஐ போர்ட்ராய்டு ரீடச்சிங் (AI Portrait Retouching) போன்ற பீச்சர்கள் கிடைக்கின்றன.
மேலும், டிரினிட்டி என்ஜின், லூமினஸ் ரென்டரிங் என்ஜின் சப்போர்ட் கிடைக்கிறது. அண்டர் வாட்டர் போட்டோகிராபி மற்றும் குளோவ் டச் டிஸ்பிளே கிடைக்கிறது. இதற்காக IP66 ரேட்டிங் + IP68 ரேட்டிங் + IP69 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் கிடைக்கிறது. ஓம்னிவிஷன் ஓவி50டி40 (OV50D40) சென்சாருடன் 50 எம்பி மெயின் கேமரா கிடைக்கிறது.
இந்த கேமராவுக்கு ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் மற்றும் 2 எம்பி டெப்த் கேமரா சப்போர்ட் கிடைக்கிறது. இந்த டெப்த் கேமராவுக்கு கேலக்ஸி கோர் 02எம்1பி (Galaxy Core 02M1B) சென்சார் கிடைக்கிறது. இந்த ஓப்போ எப்31 5ஜி ஸ்மார்ட்போனில் சோனி ஐஎம்எக்ஸ்480 (Sony IMX480) சென்சாருடன் 16 எம்பி செல்பீ கேமரா கிடைக்கிறது. MIL-STD-810H சர்டிபிகேஷன் கிடைக்கிறது.
80W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 7000mAh பேட்டரி கிடைக்கிறது. டைப்-சி ஆடியோ, ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் கிடைக்கின்றன. இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் கொடுக்கப்படுகிறது. இந்த ஓப்போ எப்31 5ஜி ஸ்மார்ட்போனில் மிட்நைட் ப்ளூ (Midnight Blue), கிளவுட் கிரீன் (Cloud Green) மற்றும் ப்ளூம் ரெட் (Bloom Red) ஆகிய கலர்கள் விற்பனைக்கு கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications








