Home
Deal of the day

ஆளுக்கு 1 ஆர்டர்.. 6500எம்ஏஎச் பேட்டரி.. IP64 ரேட்டிங்.. ஆஃபரில் Oppo 5ஜி போன்.. எந்த மாடல்?

ஒப்போ நிறுவனத்தின் ஒப்போ ஏ6எஸ் 5ஜி (OPPO A6x 5G) ஸமாார்ட்போன் ஆனது தற்போது பிளிப்கார்ட் தளத்தில் தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் 6500எம்ஏஎச் பேட்டரி, டூயல் ரியர் கேமரா, பெரிய டிஸ்பிளே உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன் வெளிவந்தது. இப்போது இந்த போனுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் மற்றும் இதன் சிறப்பு அம்சங்களைப் பார்க்கலாம்.

பிளிப்கார்ட் தளத்தில் 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ஒப்போ ஏ6எஸ் 5ஜி போனுக்கு 9 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.14,499 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் ரூ.725 தள்ளுபடியும் உள்ளது. எனவே இந்த போனை கம்மி விலையில் வாங்கிவிட முடியும்.

ஆளுக்கு 1 ஆர்டர்.. ஆஃபரில் Oppo 5ஜி போன்.. எந்த மாடல்?

ஓப்போ ஏ6எக்ஸ் 5ஜி அம்சங்கள்(OPPO A6x 5G Specifications): 6.7 இன்ச் எச்டி பிளஸ் எல்சிடி (LCD) டிஸ்பிளே உடன் இந்த போன் வெளிவந்துள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 120 Hz ரெஃப்ரெஷ் ரேட் , 1152 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தரமான ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6300 6என்எம் (Octa Core MediaTek Dimensity 6300 6nm) சிப்செட் உடன் இந்த ஓப்போ ஏ6எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் கேமிங் பயனர்களைக் கவரும் வகையில் ஆர்ம் மாலி ஜி57 எம்சி2 ஜிபியு (ARM Mali G57 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டு ஆதரவும் இந்த போனில் உள்ளது.

கலர்ஓஎஸ் 15 (ColorOS 15) சார்ந்த ஆண்ட்ராய்டு 15 (Android 15) மூலம் இந்த ஓப்போ ஏ6எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் இயங்குகிறது. ஆனாலும் இந்த ஸ்மார்ட்போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். ஏஐ கேம்பூஸ்ட் 2.0 (AI GameBoos 2.0), ஏஐ லிங்க்பூஸ்ட் 3.0 (AI LinkBoost 3.0) போன்ற பல ஏஐ அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

13எம்பி டூயர் ரியர் கேமரா அமைப்புடன் ஓப்போ ஏ6எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 5எம்பி கேமராவும் இதில் உள்ளது. போர்ட்ராய்டு மோட் (Portrait Mode), ஏஐ போர்ட்ராய்டு ரீடச்சிங் (AI Portrait Retouching), ஏஐ பர்பெக்ட் ஷாட் (AI Perpect Shot), ஏஐ ரீகம்போஸ் (AI Recompose) மற்றும் ஏஐ எரைசர் 2.0 (AI Eraser 2.0) உள்ளிட்ட பல அம்சங்கள் இந்த சாதனத்தில் உள்ளன.

ஆளுக்கு 1 ஆர்டர்.. ஆஃபரில் Oppo 5ஜி போன்.. எந்த மாடல்?

6500mAh பேட்டரி உடன் ஓப்போ ஏ6எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை வாங்கினால் சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த ஸ்மார்ட்போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 45W சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. IP64 வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டன்ஸ் (Water & Dust Resistance)ஆதரவும் இதில் உள்ளது.

5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வை-பை 802.11 ஏசி (Wi-Fi 802.11 ac), ப்ளூடூத் 5.1 (Bluetooth 5.1), ஜிபிஎஸ் (GPS) உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த ஒப்போ ஸ்மார்ட்போனில் உள்ளன. மேலும் ஐஸ் ப்ளூ (Ice Blue) மற்றும் ஆலிவ் கிரீன் (Olive Green) நிறங்களில் இந்த போனை வாங்க முடியும்.

Best Mobiles in India

English summary
Oppo A6X 5G with 6500mAh battery is available at a 9 percent discount on Flipkart: check details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X