அமேசான்: அசத்தலான அம்சங்களுடன் கிடைக்கும் ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்கள்.!
ஒன்பிளஸ் நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்களுக்கு உலகம் முழுவதும் நல்ல வரவேற்பு உள்ளது என்றுதான் கூறவேண்டும். குறிப்பாக ஒன்பிளஸ் நிறுவனம் ஆப்பிள் நிறுவனத்திற்கு போட்டியாக பல ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது.

குறிப்பாக ஒன்பிளஸ் நிறுவனம் விரைவில் பல்வேறு புதிய 5ஜி ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. மேலும் அமேசான் தளத்தில் அசத்தலான அம்சங்களுடன் கிடைக்கும் ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்களின் பட்டியலை சற்று விரிவாகப் பார்ப்போம்.
ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 5ஜி
8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 5ஜி ஸ்மார்ட்போன் மாடலை அமேசான் தளத்தில் ரூ.24,999-விலையில் வாங்க முடியும். மேலும் தேர்வு செய்த வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த ஸ்மார்ட்போனை வாங்கினால் ரூ.1500 தள்ளுபடி கிடைக்கும். ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 6.43-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 2400 x 1080 பிக்சல் தீர்மானம், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 5ஜி ஸ்மார்ட்போன் மாடல். இந்த ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 750 5ஜி பிராசஸர் வசதி உள்ளது. எனவே இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும் இந்த ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 5ஜி மாடல். இந்தியாவில் கூடிய விரைவில் 5ஜி சேவை வரும் என்பதால் இந்த ஸ்மார்ட்போன் சரியான விலையில் 5ஜி உட்பட அனைத்து அமசங்களுடன் வெளிவந்துள்ளது. மேலும் OxygenOS 11 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தைஅடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்தபுதிய ஸ்மார்ட்போன் மாடல். ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 5ஜி ஸ்மார்ட்போனின் பின்புறம் 64எம்பி பிரைமரி லென்ஸ் + 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 2எம்பி மேக்ரோ கேமரா என மொத்தம் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி செல்பீ கேமராவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 5ஜி ஸ்மார்ட்போனில் 4500 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. மேலும் 30டி பிளஸ் வார்ப் சார்ஜிங் ஆதரவுடன் வெளிவந்துள்ளது இந்த ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 5ஜி ஸ்மார்ட்போன்.
ஒன்பிளஸ் நோர்ட் 2 5ஜி
8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ஒன்பிளஸ் நோர்ட் 2 5ஜி ஸ்மார்ட்போனை அமேசான் தளத்தில் ரூ.29,999-விலையில் வாங்க முடியும். மேலும் இந்த சாதனத்தை தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை கொண்டு வாங்கினால் குறிப்பிட்ட சலுகைகள் கிடைக்கும். ஒன்பிளஸ் நோர்ட் 2 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 6.43-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் Fluid AMOLED டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 1,080x2,400 பிக்சல் தீர்மானம், 20:9 என்ற திரைவிகிதம், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த ஒன்பிளஸ் நோர்ட் 2 5ஜி ஸ்மார்ட்போன் மாடல். ஒன்பிளஸ் நோர்ட் 2 5ஜி ஸ்மார்ட்போனில் மீடியாடெக் Dimensity 1200-AI SoC சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது. மேலும் OxygenOS 11.3 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் 50எம்பி பிரைமரி சென்சார் + 8எம்பி அல்ட்ரா-வைட் கேமரா + 2எம்பி மோனோ லென்ஸ் என மொத்தம் மூன்று கேமராக்கள் இடம்பெற்றுள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி செல்பீ கேமரா ஆரவைக் கொண்டுள்ளது
இந்த ஒன்பிளஸ் நோர்ட் 2 5ஜி ஸ்மார்ட்போன். ஒன்பிளஸ் நோர்ட் 2 5ஜி ஸ்மார்ட்போனில் 4500 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. மேலும் 65 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த சாதனம்.
ஒன்பிளஸ் 7
6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ஒன்பிளஸ் 7 ஸ்மார்ட்போன் மாடலை அமேசான் தளத்தில் ரூ.23,399-விலையில் வாங்க முடியும். 6.41-இன்ச் முழு எச்டி பிளஸ் சூப்பர் AMOLED டிஸ்பிளே, 1080x2340 பிக்சல் தீர்மானம், ஃபேஸ்அன்லாக், குவால்காம் ஸ்னாப்டிராகன் 855 சிப்செட் எனப் பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். மேலும் இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி கேமரா + 5எம்பி செகன்டரி சென்சார் என மொத்தம் இரண்டு கேமராக்கள் உள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். 3700எம்ஏஎச் பேட்டரி, வைஃபை 4ஜி வோல்ட்இ, ப்ளூடூத் 5.0, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி உள்ளிட்ட அம்சங்களும் இவற்றுள் அடக்கம்.
ஒன்பிளஸ் 9 5ஜி
12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி கொண்ட ஒன்பிளஸ் 9 5ஜி மாடலை அமேசான் தளத ரூ.54,999-வாங்க முடியும். குறிப்பாக 6.55-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் Fluid OLED டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளது ஒன்பிளஸ் 9 5ஜி மாடல். மேலும் இந்த சாதனம் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 20: 9 என்ற திரைவிகிதம், கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு, ஆண்ட்ராய்டு 11 அடிப்படையிலான ஆக்சிஜன்ஓஎஸ் 11 இயங்குதளம், ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 888 எஸ்ஒசி சிப்செட், ஒன்பிளஸ் கூல் ப்ளே என்று கூறப்படும் மல்டி லேயர் கூலிங் சிஸ்டம் ஆதரவு, 4500 எம்ஏஎச் பேட்டரி, டால்பி அட்மோஸ் அம்சம் கொண்ட டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்ஸ்,வார்ப் சார்ஜ் 65டி பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன். ஒன்பிளஸ் 9 5ஜி ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி சென்சார் + 50எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ் + 2எம்பி மோனோக்ரோம் சென்சார் என மொத்தம் மூன்று கேமராக்கள் உள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன்.


Click it and Unblock the Notifications