Home
Deal of the day

OnePlus இறக்கிய லட்டு ஆஃபர்.. ரூ.5,000 டிஸ்கவுண்ட்.. 12GB ரேம்.. 80W சார்ஜிங்.. 12140mAh பேட்டரி.. எந்த மாடல்?

பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் சேல் (Flipkart Big Billion Days Sale) நெருங்கிவிட்டதால், முன்னணி பிராண்ட்களின் ஸ்மார்ட்போன், டேப்லெட் மாடல்களுக்கு கிடைக்காத டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. இதில் ஒன்பிளஸ் பேட் 3 (OnePlus Pad 3) மாடலுக்கு ரூ.5,000 உடனடி டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. இதுபோக பல்வேறு கூடுதல் சலுகைகளையும் கொடுக்கிறது. 12 ஜிபி ரேம், 80W ஃபாஸ்ட் சார்ஜிங், 12140mAh பேட்டரி போன்ற பிரீமியம் பீச்சர்களை கொடுத்து இருக்கிறது. இந்த ஒன்பிளஸ் பேட் 3 மாடலின் முழு பீச்சர்கள், விலை விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

இந்திய மார்கெட்டில் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.47,999ஆகவும், 16 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.52,999ஆகவும் இருக்கிறது. இப்போது, பிளிப்கார்ட் தளத்தில் ரூ.5,000 உடனடி டிஸ்கவுண்ட் வாங்க கிடைக்கிறது. அதுவே ஈஎம்ஐ ஆப்ஷனில் ஆர்டர் செய்தால் ரூ.5,250 உடனடி டிஸ்கவுண்ட் கிடைக்கிறது.

OnePlus இறக்கிய லட்டு ஆஃபர்.. ரூ.5,000 டிஸ்கவுண்ட்.. 12GB ரேம் மாடல்!

ஆகவே, 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டை ரூ.42,999 பட்ஜெட்டில் வாங்கி கொள்ள முடியும். இதுவொரு வை-பை ஒன்லி மாடலாகும். அதேபோல ஸ்டார்ம் ப்ளூ (Storm Blue) மற்றும் ப்ரோஸ்டட் சில்வர் (Frosted Silver) ஆகிய 2 கலர்களில் மட்டும் விற்பனைக்கு கிடைக்கிறது. பிரீமியம் குவாலிட்டி பாடி கிடைக்கிறது. முழு பீச்சர்களை தெரிந்து கொள்ளலாம்.

ஒன்பிளஸ் பேட் 3 அம்சங்கள் (OnePlus Pad 3 Specifications): இந்த பிரீமியம் டேப்லெட்டில் 13.2 இன்ச் (3392 x 2400 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளே மட்டுமே கிடைக்கிறது. ஆனால், ஓடிடி பிரியர்கள் மற்றும் கேமிங் பிரியர்கள் மூக்கில் விரல் வைக்கும்படி 144Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 3.4K ரெசொலூஷன் கொடுக்கிறது. அதேபோல 540Hz டச் சாம்பிளிங் ரேட் கிடைக்கிறது.

இதுபோக டால்பி விஷன் (Dolby Vision) கிடைக்கிறது. பொதுவாக டேப்லெட் மாடல்களில் பீக் பிரைட்னஸ் கம்மியாகவே இருக்கும். இதிலும் அப்படித்தான் இருக்கிறது. இருப்பினும், 900 நிட்ஸ் எச்பிஎம் மோட் (HBM Mode) வருகிறது. மேலும், 315 பிபிஐ பிக்சல் டென்சிட்டி கொடுத்துள்ளது. இந்த விலைக்கு ஏற்ப பர்ஃபாமென்ஸ் கொடுக்க சிப்செட் மற்றும் கிராபிக்ஸ் கிடைக்கிறது.

ஆகவே, இந்த ஒன்பிளஸ் பேட் 3 மாடலில் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) கொண்ட ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 எலைட் 3என்எம் (Octa Core Snapdragon 8 Elite 3nm) சிப்செட் கிடைக்கிறது. இதுபோக அப்கிரேட் ஏஐ பீச்சர்கள் மற்றும் மல்டி மீடியா பீச்சர்களுடன் ஆக்ஸிஜன் ஓஎஸ் 15 (OxygenOS 15) கொடுக்கிறது. ஏஐ டிரான்ஸ்லேஷன், ஏஐ சம்மரி, ஏஐ ரைட்டர் உள்ளன.

அட்ரினோ 830 ஜிபியு (Adreno 830 GPU) கிராபிக்ஸ் கார்டு வருகிறது. டிஸ்பிளேவுக்கு ஏற்ப ஆடியோவும் பட்டையை கிளப்பி இருக்கிறது. ஹை-ரெஸ் ஆடியோ ( Hi-Res Audio) சர்டிபிகேஷன் கொண்ட 8 ஸ்பீக்கர்கள் கிடைக்கின்றன. இதில் 4 வூப்பர் யூனிட் மற்றும் 4 ட்வீடர்கள் கிடைக்கின்றன. ஆகவே, இதில் பிரீமியமான ஸ்ட்ரீயோ அனுபவத்தை பெற்று கொள்ளலாம்.

இந்த ஒன்பிளஸ் பேட் 3 மாடலில் 80W சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் கிடைக்கிறது. இதற்கு ஏற்ப 12140mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. ஆகவே, அதிக பேக்கப் மட்டுமல்லாமல், விரைவாக சார்ஜ் செய்து கொள்ள முடியும். 10 நிமிடங்களில் 18 சதவீத சார்ஜ் செய்ய முடியும். 100 சதவீத சார்ஜ் செய்ய 92 நிமிடங்கள் தேவைப்படும். இது மற்ற மாடல்களைவிட அதிகமாகும்.

Best Mobiles in India

English summary
OnePlus Pad 3 With 12GB RAM Available Under Rs 45000 Ahead of Flipkart Big Billion Days Sale
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X