Home
Deal of the day

போடு ஆர்டரை.. முதல் முறையாக விலை குறைந்தது.. OnePlus Pad 2 வாங்க சரியான நேரம்.. என்ன விலை? எவ்வளவு தள்ளுபடி?

தீபாவளி பண்டிகை முடிந்த பிறகும், சில பிராண்டுகள் அவற்றின் தயாரிப்புகள் மீது எண்ணில் அடங்காத பல சலுகைகள் மற்றும் தள்ளுபடிகளை அறிவித்து வருகிறது. இதில் பல முன்னணி பிராண்டுகளான சாம்சங் (Samsung), சியோமி (Xiaomi), ஒன்பிளஸ் (OnePlus) மற்றும் ஒப்போ (OPPO) போன்ற பிராண்டுகளும் அடங்கும். இதில் இப்போது குறிப்பிட்டு கூறும் விதமாக ஒன்பிளஸ் நிறுவனம் அதன் இந்திய வாடிக்கையாளர்களை கவரும் விதமாக புதிய சலுகையை அதன் லேட்டஸ்ட் டேப்லெட் சாதனமான ஒன்பிளஸ் பேட் 2 (OnePlus Pad 2) மாடல் மீது அறிவித்துள்ளது.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஒன்பிளஸ் நிறுவனம் அதன் டிவைஸ்கள் மீதும் மற்றும் அதன் ஆக்சஸரீஸ் சாதனங்கள் மீதும் பல தள்ளுபடியை அறிவித்திருந்தது. இதில் குறிப்பிட்டு கூறும் விதமாக ஒன்பிளஸ் பேட் 2 டேப்லெட் (OnePlus Pad 2 Tablet) மீது நிறுவனம் அறிவித்துள்ள சலுகை ஒன்பிளஸ் ரசிகர்களை கவர்ந்துள்ளது. இது என்ன சலுகை? மற்றும் இதன் முழு விபரம் இங்கே.

ஒன்பிளஸ் பேட் 2 (OnePlus Pad 2):

போடு ஆர்டரை.. முதல் முறையாக விலை குறைந்தது.. OnePlus Pad 2 வாங்குங்கோ

ஒன்பிளஸ் பேட் 2 (OnePlus Pad 2) சாதனம் அறிமுகம் செய்யப்பட்டதில் இருந்து, இப்போது தான் முதல் முறையாக விலை குறைவை கண்டுள்ளது. இந்திய சந்தையில் ஒன்பிளஸ் பேட் 2 (OnePlus Pad 2) டேப்லெட் சாதனத்தை ஒன்பிளஸ் நிறுவனம் அறிமுகம் செய்த போது இதன் அசல் விலை தோராயமாக ரூ. 48,000 இல் இருந்தது. மிகச்சரியாக சொல்ல வேண்டுமென்றால், இதன் விலை ரூ. 47,999 என்று பட்டியலிடப்பட்டுள்ளது.

ஆனால், இப்போது இந்த சாதனம் முதல் முறையாக ரூ. 40,999 என்ற சலுகை விலையில் பட்டியலிடப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒன்பிளஸ் பேட் 2 டேப்லெட் (OnePlus Pad 2 Tablet) சாதனத்தின் அசல் விலையில் இருந்து ரூ. 7000 முழுமையாக குறைக்கப்பட்டுள்ளது. இத்துடன் ஒன்பிளஸ் வழங்கும் சலுகை முடிந்துவிட்டது என்று தப்பு கணக்கு போட்டுவிடாதீர்கள். இன்னும் கூடுதல் தள்ளுபடியை வழங்கி அசத்தியுள்ளது ஒன்பிளஸ்.

இந்த திடீர் விலை குறைப்புடன், ஒன்பிளஸ் நிறுவனம் இப்போது கூடுதலாக ரூ. 3000 தள்ளுபடியை ஒன்பிளஸ் பேட் 2 டேப்லெட் (OnePlus Pad 2 Tablet) சாதனத்தின் மீது அறிவித்துள்ளது. இதன் மூலம் மொத்தமாக உங்களுக்கு ரூ. 10,000 வரை ஒன்பிளஸ் பேட் 2 டேப்லெட் (OnePlus Pad 2 Tablet) சாதனத்தின் மீதான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதுவரை இல்லதா வகையில், முதல் முறையாக இந்த சலுகை ஒன்பிளஸ் பேட் 2 டேப்லெட் மீது அறிவிக்கப்பட்டுள்ளது.

முழுசா ரூ. 10,000 வரை தள்ளுபடி.. முதல் முறையாக விலை குறைந்தது OnePlus Pad 2 Tablet:

இறுதி சலுகை விலையாக, ஒன்பிளஸ் பேட் 2 டேப்லெட் சாதனத்தை வெறும் ரூ. 37,999 விலைக்கு வாங்க வாய்ப்பு கிடைத்துள்ளது.இதுவொரு குறுகிய கால சிறப்பு சலுகை போல் தெரிவதனால், முந்திக்கொள்வோருக்கு லாபம் நிச்சயம். இந்த சலுகை இப்போது அமேசான் இந்தியா வலைத்தளம் வழியாக வாங்க கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த புதிய தள்ளுபடி விலையில் புதிய ஒன்பிளஸ் பேட் 2 டேப்லெட் (OnePlus Pad 2 Tablet) சாதனத்தை வாங்க விரும்பினால் இந்த லிங்க்கை கிளிக் செய்து, உடனே சலுகையை பெற்று மகிழ்ந்திடுகள்.

Best Mobiles in India

English summary
OnePlus Pad 2 on sale for Rs 37999 for the first time in India Through Amazon with overall discount of Rs 10000
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X