எப்படியாவது 1 வாங்குவீங்க.. 50எம்பி கேமரா.. 80W சார்ஜிங்.. ஆஃபரில் ஒன்பிளஸ் 5ஜி போன்.. எந்த மாடல்?
ஒன்பிளஸ் நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்களுக்கு இந்தியா முழுவதும் நல்ல வரவேற்பு உள்ளது. காரணம் என்னவென்றால்தனித்துவமான வடிவமைப்பு மற்றும் தரமான அம்சங்களுடன் இந்த போன்கள் வெளிவருகின்றன. எனவே தான் இந்நிறுவனத்தின் போன்கள் அதிகளவில் விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில் அமேசான் தளத்தில் ஒன்பிளஸ் நோர்ட் சிஇ லைட் 5ஜி (OnePlus Nord CE4 Lite 5G) ஸ்மார்ட்போன் தள்ளுபடி விலையில் கிடைக்கிறது.
அதாவது அமேசான் தளத்தில் ஒன்பிளஸ் நோர்ட் சிஇ4 லைட் 5ஜி ஸ்மார்ட்போனுக்கு 14 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.17,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இப்போது ஒன்பிளஸ் நோர்ட் சிஇ4 லைட் 5ஜி போனின் அம்சங்களை சற்று விரிவாகப் பார்க்கலாம்.

ஒன்பிளஸ் நோர்ட் சிஇ4 லைட் 5ஜி அம்சங்கள் (OnePlus Nord CE4 Lite 5G Specifications): தரமான ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 695 6என்எம் 5ஜி எஸ்ஓசி (Octa Core Qualcomm Snapdragon 695 6nm 5G SoC) கொண்டுள்ளது இந்த போன். மேலும் அட்ரினோ 619 ஜிபியு (Adreno 619 GPU) கிராபிக்ஸ் கார்டு கொண்டு வெளிவந்தது இந்த ஒன்பிளஸ் போன்.
குறிப்பாக 6.67 இன்ச் ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே டிஸ்பிளே இதில் உள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில்2400 × 1080 பிக்சல்கள், 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 240Hz டச் சாம்பிளிங் ரேட், 2100 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது.
அதேபோல் ஆக்ஸிஜன்ஓஎஸ் 14 (OxygenOS 14) சார்ந்த ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) மூலம் இந்த ஒன்பிளஸ் போன் இயங்குகிறது. ஆனாலும் ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் இந்த போனுக்கு கிடைக்கும். IP54 டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் கொண்டுள்ளது இந்த ஒன்பிளஸ் நோர்ட் சிஇ4 லைட் 5ஜி ஸ்மார்ட்போன்.
குறிப்பாக 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் வசதியைக் கொண்டுள்ளது இந்த ஒன்பிளஸ் நோர்ட் சிஇ4 லைட் 5ஜி ஸ்மார்ட்போன். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டு வெளிவந்துள்ளது இந்த போன். அதாவது நீங்கள் 1 டிபி வரை மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த போனில் உள்ளது.
ஒன்பிளஸ் நோர்ட் சிஇ4 லைட் 5ஜி போன் 50 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி டெப்த் கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. மேலும் ஓஐஎஸ் (OIS), 1080p வீடியோ ரெக்கார்டிங் சப்போர்ட், 10x டிஜிட்டல் ஜூமிங் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளன இந்த ரியர் கேமராக்கள். பின்பு செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமரா கொண்டு வெளிவந்துள்ளது இந்த போன். இதுதவிர பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.
மேலும் 5500mAh பேட்டரி பேட்டரி வசதி உடன் ஒன்பிளஸ் நோர்ட் சிஇ4 லைட் 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்தது. பின்பு 80W சூப்பர்வூக் (SuperVOOC) சார்ஜிங் வசதியும் கொண்டு வெளிவந்துள்ளது இந்த போன். எனவே இந்த ஸ்மார்ட்போனை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது, அதேசமயம் இதன் பேட்டரியை விரைவாக சார்ஜ் செய்து விட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், 3.5 எம்எம் ஹெட்போன் ஜாக் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான வசதிகள் இந்த போனில் உள்ளன. மேலும் சில்வர் (Super Silver) மற்றும் மெகா ப்ளூ (Mega Blue), அல்ட்ரா ஆரஞ்சு ( Ultra Orange) நிறங்களில் இந்த ஒன்பிளஸ் போன் வாங்க கிடைக்கிறது. இதுதவிர பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இதில் உள்ளன.


Click it and Unblock the Notifications