Home
Deal of the day

டிஸ்கவுண்ட் விலையில் OnePlus 5ஜி போன்.. 8GB ரேம், 50MP OIS கேமரா, 16MP EIS செல்பீ, 5500mAh பேட்டரி, IP54!

8GB ரேம், 50MP OIS கேமரா, 16MP EIS செல்பீ, 5500mAh பேட்டரி, IP54 ரேட்டிங் உட்பட மேலும் பல முக்கிய அம்சங்களுடன், கடந்த ஜூன் மாதம் இந்தியாவில் அறிமுகமான ஒன்பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போன், தற்போது அமேசான் இந்தியா வலைதளத்தில் தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கிறது. என்ன மாடல்? எவ்வளவு தள்ளுபடி? இதோ விவரங்கள்:

என்ன மாடல்? அமேசான் வலைத்தளத்தில் தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கும் ஒன்பிளஸ் மாடல் - ஒன்பிளஸ் நோர்ட் சிஇ4 லைட் 5ஜி (OnePlus Nord CE4 Lite 5G) ஸ்மார்ட்போனாகும். அமேசானில் தற்போது இது ரூ.2000 தள்ளுபடி விலையின் கீழ் வாங்க கிடைக்கிறது. இது இந்த ஸ்மார்ட்போனின் 8ஜிபி ரேம் + 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷனின் விலையாகும்.

டிஸ்கவுண்ட் விலையில் OnePlus 5ஜி போன்.. எந்த மாடல்?

நினைவூட்டும் வண்ணம் இந்தியாவில் அறிமுகமாகும் போது ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 4 லைட் 5ஜி ஸ்மார்ட்போனின் பேஸிக் 8ஜிபி + 128ஜிபி ஆப்ஷனின் விலை ரூ.19,999 ஆக நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. ஆக தற்போது இது ரூ.2000 டிஸ்கவுண்ட் விலையின் கீழ் வாங்க கிடைக்கிறது. சுவாரசியமாக இந்த தள்ளுபடி மெகா புளூ, சூப்பர் சில்வர் மற்றும் அல்ட்ரா ஆரஞ்சு ஆகிய மூன்று கலர் ஆப்ஷன்களிலும் கிடைக்கிறது.

ஒருவேளை நீங்கள் ஒன்பிளஸ் நோர்ட் சிஇ4 லைட் 5ஜி ஸ்மார்ட்போனின் 8ஜிபி ரேம் + 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷனை வாங்க விரும்பினால், அதன் மீதும் ரூ.2000 தள்ளுபடி கிடைக்கிறது. தற்போது இது அமேசான் இந்தியா வலைதளத்தில் ரூ.22,999 க்கு பதிலாக ரூ.20,999 க்கு வாங்க கிடைக்கிறது. இரண்டு ஸ்டோரேஜ் ஆப்ஷன்களின் மீதும் நேரடி தள்ளுபடி தவிர்த்து ரூ.1000 பேங்க் கேஷ்பேக் ஆபரும் கிடைக்கிறது.

ஒன்பிளஸ் நோர்ட் சிஇ4 லைட் 5ஜி ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்: டிஸ்பிளேவை பொறுத்தவரை இது 1,080 x 2,400 பிக்சல்ஸ், 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 2100 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் மற்றும் 20:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ உடனான 6.67-இன்ச் FHD+ AMOLED டிஸ்பிளேவை கொண்டுள்ளது.

சிப்செட்டை பொறுத்தவரை இது அட்ரெனோ 619 ஜிபியு, 8ஜிபி LPDDR4X ரேம் மற்றும் 256ஜிபி வரை UFS 2.2 இன்டர்னல் ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்ட குவால்காம் ஸ்னாப்டிராகன் 695 சிப்செட் (Qualcomm Snapdragon 695 SoC) மூலம் இயக்கப்படுகிறது. இது ஆண்ட்ராய்டு 14 அடிப்படையிலான ஆக்ஸிஜன்ஓஎஸ் 14 உடன் அனுப்பப்படுகிறது.

கேமராக்களை பொறுத்தவரை, ஒன்பிளஸ் நோர்ட் சிஇ4 லைட் 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது டூயல் ரியர் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது. இதில் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் உடனான 1/1.95-இன்ச் 50 மெகாபிக்சல் சோனி LYT-600 ப்ரைமரி சென்சார் + 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார் உள்ளன. முன்பக்கத்தில் எலெக்ட்ரானிக் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் உடனான 16-மெகாபிக்சல் செல்பீ கேமரா உள்ளது.

பேட்டரியை பொறுத்தவரை இது 80W வயர்டு சூப்பர்வூக் மற்றும் 5W ரிவர்ஸ் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 5500mAh பேட்டரியை கொண்டுள்ளது. கவனிக்கப்பட வேண்டிய மற்ற அம்சங்களை பொறுத்தவரை இது 5ஜி, வைஃபை 5, ஜிபிஎஸ் ப்ளூடூத் 5.1 மற்றும் யூஎஸ்பி டைப்-சி போர்ட், தூசி மற்றும் ஸ்பிளாஸ் எதிர்ப்பிற்கான ஐபி4 ரேட்டிங், இன்-டிஸ்பிளே ஃபிங்கர் பிரிண்ட் ஸ்கேனர், 3.5 மிமீ ஆடியோ ஜாக் ஆகியவைகளை கொண்டுள்ளது.

ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 4 லைட் 5ஜி ஸ்மார்ட்போனை போலவே ஒன்பிளஸ் 12ஆர் (OnePlus 12R) ஸ்மார்ட்போனின் மீதும் கூட தள்ளுபடி கிடைக்கிறது. தற்போது அமேசான் இந்தியா வலைதளத்தில் ஒன்பிளஸ் 12ஆர் ஸ்மார்ட்போனின் 16ஜிபி ரேம் + 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ஆனது ரூ.42,000 க்கு பதிலாக ரூ.36,999 க்கு வாங்க கிடைக்கிறது. இந்த ரூ.6000 டிஸ்கவுன்ட்டில் ரூ.3000 நேரடி தள்ளுபடியாகும், மீதமுள்ள ரூ.3000 டிஸ்கவுண்ட் ஆனது பேங்க் கேஷ்பேக் ஆபர் ஆகும்.

English summary
OnePlus Nord CE4 Lite 5G gets Rs 2000 Discount From Launch Price in Amazon India See Details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X