ஆல்ரெடி விலை கம்மி.. இப்போ இன்னும் கம்மி.. வெயிட்டான விலை குறைப்பில் OnePlus 5ஜி போன்!
அமேசான் இந்தியா (Amazon India) வலைத்தளத்தில் நடக்கும் கிரேட் இந்தியன் பெஸ்டிவல் சேலில் (Great Indian Festival) ஏற்கனவே பட்ஜெட்-விலை பிரிவின் கீழ் அறிமுகமான ஒரு ஒன்பிளஸ் ஸ்மார்ட்போனின் மீது ரூ.5000 விலை குறைப்பு அறிவிக்கப்பட்டு, அதன் விலை இப்போது இன்னுமும் குறைந்துள்ளது.
அது ஒன்பிளஸ் நோர்ட் சிஇ4 லைட் 5ஜி (OnePlus Nord CE4 Lite 5G) ஸ்மார்ட்போனாகும். தற்போது இந்த ஸ்மார்ட்போன் எம்ஆர்பி ரூ.20,999 க்கு பதிலாக, ரூ.5000 விலைக்குறைப்பை பெற்று ரூ.15,999 க்கு வாங்க கிடைக்கிறது. இது 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷனின் விலையாகும்.

ஒன்பிளஸ் நோர்ட் சிஇ4 லைட் 5ஜி ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்: டிஸ்பிளேவை பொறுத்தவரை இது 1,080 x 2,400 பிக்சல்ஸ், 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 2100 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் மற்றும் 20:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ உடனான 6.67-இன்ச் புல் எச்டி பிளஸ் அமோலெட் டிஸ்பிளேவை கொண்டு உள்ளது.
சிப்செட்டை பொறுத்தவரை இது அட்ரெனோ 619 ஜிபியு, 8ஜிபி LPDDR4X ரேம் மற்றும் 256ஜிபி வரை UFS 2.2 இன்டர்னல் ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்ட குவால்காம் ஸ்னாப்டிராகன் 695 சிப்செட் (Qualcomm Snapdragon 695 SoC) மூலம் இயக்கப்படுகிறது. கேமராக்களை பொறுத்தவரை, ஒன்பிளஸ் நோர்ட் சிஇ4 லைட் 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது டூயல் ரியர் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது.
இதில் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் உடனான 1/1.95-இன்ச் 50 மெகாபிக்சல் சோனி LYT-600 ப்ரைமரி சென்சார் + 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார் உள்ளன. முன்பக்கத்தில் எலெக்ட்ரானிக் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் உடனான 16-மெகாபிக்சல் செல்பீ கேமரா உள்ளது. பேட்டரியை பொறுத்தவரை இது 80W வயர்டு சூப்பர்வூக் மற்றும் 5W ரிவர்ஸ் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 5500mAh பேட்டரியை கொண்டுள்ளது.
ஒன்பிளஸ் நோர்ட் சிஇ4 லைட் 5ஜி ஸ்மார்ட்போனில் கவனிக்கப்பட வேண்டிய மற்ற அம்சங்களை பொறுத்தவரை இது 5ஜி, வைஃபை 5, ஜிபிஎஸ் ப்ளூடூத் 5.1 மற்றும் யூஎஸ்பி டைப்-சி போர்ட், தூசி மற்றும் ஸ்பிளாஸ் எதிர்ப்பிற்கான ஐபி4 ரேட்டிங், இன்-டிஸ்பிளே ஃபிங்கர் பிரிண்ட் ஸ்கேனர், 3.5 மிமீ ஆடியோ ஜாக் ஆகியவைகளை கொண்டுள்ளது.
ஒருவேளை நீங்கள் "நல்ல ஆபர் விலையில்" கிடைக்கும் ஒன்பிளஸ் பிளாக்ஷிப் வாங்க விரும்பினால், நிகழும் அமேசான் கிரேட் இந்தியன் பெஸ்டிவல் சேலில் ஒன்பிளஸ் 13 மாடலை கருத்தில் கொள்ளலாம். புதிய ஒன்பிளஸ் 15 மாடல் கூடிய விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளதால், தற்போது இது ரூ.63,999 க்கு வாங்க கிடைக்கிறது. இது இந்திய அறிமுக விலையான ரூ.69,999-ஐ ரூ.6000 குறைவாகும்.
ஒன்பிளஸ் 15 என்ன விலைக்கு வரும், எப்போது அறிமுகமாகும்? விலையை பொறுத்தவரை, இந்தியாவில் ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போன் ஆனது ரூ.65,000 - ரூ.75,000 என்கிற விலை வரம்பில் அறிமுகம் செய்யப்படலாம். ஐக்யூ, ரியல்மி போன்ற நிறுவனங்கள் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 5 எலைட் சிப்செட் உடனான தங்கள் ஸ்மார்ட்போன்களை விரைவாக அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதால், ஒன்பிளஸ் 15 ஆனது இம்முறை முன்கூட்டியே அறிமுகம் செய்யப்பட உள்ளது.
சீனாவில் இது இம்மாதமும், இந்தியாவில் அடுத்த மாதமும் அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்னும் சரியாக சொல்ல வேண்டும் என்றால், 91மொபைல்ஸ் ஹிந்தி வழியாக கிடைத்த அறிக்கையின்படி ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போன் வருகிற நவம்பர் 13 ஆம் தேதி உலகளவில் அறிமுகப்படுத்தப்படும் என்றும், அதே நாளில் இந்தியாவில் அறிமுகம் நடக்க வாய்ப்புள்ளது. சீன அறிமுகம் அக்டோபர் 27 ஆம் தேதி நடக்கலாம் என்று வேறு சில லீக்ஸ் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications








