Home
Deal of the day

வாழ்க்கை ஒரு வட்டம் டா.. புது மாடல் வந்ததும் ரூ.30000-க்கும் கீழே இறங்கிய 6800mAh பேட்டரி OnePlus 5ஜி போன்!

இந்தியாவில் ஒன்பிளஸ் நிறுவனத்தின் லேட்டஸ்ட் ஸ்மார்ட்போன் ஆக ஒன்பிளஸ் நார்ட் 6 (OnePlus Nord 6) மாடல் அறிமுகப்படுத்தப்பட்டதை தொடர்ந்து, ஒன்பிளஸ் நார்ட் 5 (OnePlus Nord 5) ஸ்மார்ட்போன் ஆனது ரூ.30000 க்கும் குறைவான ஆபர் விலைக்கு இறங்கி வந்துள்ளது.

ஒன்பிளஸ் நார்ட் 5 ஸ்மார்ட்போன் ஆனது இப்போது, ​​ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட்டில் ஆபர் விலையில் பட்டியலிடப்பட்டு இருப்பதாக 91மொபைல்ஸ் வலைத்தளம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதாவது ஆபர் விலை மட்டுமல்ல, ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட் வழியாக இதை ஆர்டர் செய்தால், சில நிமிடங்களிலேயே டெலிவரியும் செய்யப்படும் என்பதால், உண்மையிலேயே இது ஒரு சூப்பர் டீல் ஆகும்!

ரூ.30000-க்கும் கீழே இறங்கிய 6800mAh பேட்டரி OnePlus 5ஜி போன்!

இன்ஸ்டாமார்ட்டில் உள்ள ஒன்பிளஸ் நார்ட் 5 சலுகையின்படி, ரூ.34,009 என்கிற எம்ஆர்பி விலையில், ரூ.3,399 வங்கித் தள்ளுபடி மற்றும் ரூ.1,420 நோ காஸ்ட் இஎம்ஐ தள்ளுபடிக்கு பிறகு, இந்த போனை ரூ.29,188 என்ற பைனல் ஆபர் விலையில் வாங்கலாம். எஸ்பிஐ கார்டு வைத்து இருப்போர்கள் இதை மேலும் ஆறு மாதங்களுக்கு, மாதம் ரூ.5,101 வீதம் வட்டியின்றி பிரித்தும் செலுத்தலாம். இந்த சலுகை இடங்கள் மற்றும் சேவை கிடைக்கும் தன்மையைப் பொறுத்து மாறுபடலாம் என்பதை நினைவில் கொள்ளவும்.

இதை எழுதும் நேரத்தில் இந்த ஸ்மார்ட்போன் கையிருப்பில் இல்லை என்றாலும், விரைவில் மீண்டும் கையிருப்புக்கு வரக்கூடும், எனவே வாங்குபவர்கள் கவனமாக இருக்க வேண்டும். நினைவூட்டும் வண்ணம் ஒன்பிளஸ் நார்ட் 5 ஸ்மார்ட்போனானது கடந்த ஜூலை 2025-ல் ரூ.31,999 க்கு அறிமுகப்படுத்தப்பட்டது. எனவே, இதை ரூ.29,188-க்கு வாங்குவது, அறிமுக விலையிலிருந்து ரூ.2,811 சேமிப்பாகும்

ஒன்பிளஸ் நோர்ட் 5 ஸ்மார்ட்போனின் விரிவான அம்சங்கள் (OnePlus Nord 5 Specifications): டூயல் சிம் ஆதரவுடன் வரும் இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் அடிப்படையிலான நிறுவனத்தின் ஆக்சிஜன் ஓஎஸ் 15 (OxygenOS 15) ஸ்கின் கொண்டு இயங்குகிறது. டிஸ்பிளேவை பொறுத்தவரை இது 144ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 1800 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் உடனான 6.83-இன்ச் AMOLED டிஸ்பிளேவை கொண்டுள்ளது.

சிப்செட்டை பொறுத்தவரை இந்த போன் 12GB வரை LPDDR5x RAM உடன் இணைக்கப்பட்ட ஸ்னாப்டிராகன் 8எஸ் ஜென் 3 (Snapdragon 8s Gen 3) சிப்செட் கொண்டு இயங்குகிறது. கேமராக்களை பொறுத்தவரை ஒன்பிளஸ் நோர்ட் 5 ஸ்மார்ட்போன் ஆனது 50 மெகாபிக்சல் ப்ரைமரி கேமராவை கொண்டுள்ளது. இது சோனி LYT-700 சென்சார், ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) மற்றும் எப் /1.8 அபெர்க்ஷர் உடன் வருகிறது.

இது ஒன்பிளஸ் 13எஸ் (OnePlus 13s) மாடலில் பயன்படுத்தப்படும் அதே பிளாக்ஷிப் கேமரா ஆகும். ப்ரைமரி கேமராவுடன் எப்/2.2 அபெர்க்ஷர் மற்றும் 120-டிகிரி பீல்ட் ஆப் வியூ கொண்ட 8-மெகாபிக்சல் அல்ட்ராவைடு கேமராவும் உள்ளது. முன்பக்கத்தில், இது சாம்சங் ISOCELL JN5 சென்சார் மற்றும் எப்/2.0 அபெர்க்ஷர் உடன் கூடிய 50 மெகாபிக்சல் செல்பீ கேமராவை கொண்டுள்ளது.

கனெக்டிவிட்டி ஆப்ஷன்களை பொறுத்தவரை இது 5ஜி, 4ஜி LTE, வைஃபை 6, ப்ளூடூத் 5.4, NFC, GPS, NavIC மற்றும் USB Type-C போர்ட் ஆகியவைகளை வழங்குகிறது. பயோமெட்ரிக் அங்கீகாரத்திற்காக இன்-டிஸ்பிளே பிங்கர் பிரிண்ட் ஸ்கேனர் உடன் வரும் இந்த ஸ்மார்ட்போனில் பல்வேறு டிவைஸ்களை கட்டுப்படுத்த பயன்படுத்தக்கூடிய இன்ப்ரா ரெட் (IR) டிரான்ஸ்மிட்டரும் உள்ளது.

பேட்டரியை பொறுத்தவரை ஒன்பிளஸ் நோர்ட் 5 ஸ்மார்ட்போன் ஆனது 6,800mAh பேட்டரியை கொண்டுள்ளது, இது சேர்க்கப்பட்ட அடாப்டருடன் 80W SuperVOOC சார்ஜிங்கை ஆதரிக்கிறது. கடைசியாக இது தூசி மற்றும் ஸ்பிளாஸ் எதிர்ப்பிற்கான IP65 ரேடிங்கையும் கொண்டுள்ளது. அளவீட்டில் இது 163.4×77×8.1மிமீ உள்ளது மற்றும் எடையில் 211 கிராம் உள்ளது.

Best Mobiles in India

English summary
OnePlus Nord 5 Price dropped Under Rs 30000 on Swiggy Instamart check out Offers Details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X