SALE பிச்சிக்கிட்டு போகுது.. OnePlus-க்கு விலை குறைப்பு.. 6800mAh பேட்டரி.. 80W ஃபாஸ்ட் சார்ஜிங்.. எந்த மாடல்?
ஒன்பிளஸ் (OnePlus) நிறுவனத்தின் ஒன்பிளஸ் நோர்ட் 5 (OnePlus Nord 5) ஸ்மார்ட்போனுக்கு விலை குறைப்பு மட்டுமல்லாமல், பேங்க் டிஸ்கவுண்ட் ஒரே நேரத்தில் கிடைப்பதால், விற்பனையில் பட்டையை கிளப்பி வருகிறது. இந்த மிட்-ரேஞ்ச் மாடலின் முழு பீச்சர்கள், விலை மற்றும் டிஸ்கவுண்ட் விவரங்களை இப்போது பார்க்கலாம்.
8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.31,999ஆகவும், 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.31,999ஆகவும் இருக்கிறது. அதேபோல 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி கொண்ட டாப்-எண்ட் வேரியண்ட்டின் விலை ரூ.37,999ஆக இருக்கிறது. இந்த மார்கெட் விலையில் இப்போது குறைக்கப்பட்டுள்ளது.

அமேசான் தளத்தில் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டானது, ரூ.30,499 பட்ஜெட்டில் கிடைக்கிறது. இது நேரடியாக ரூ.1,500 விலை குறைப்பில் கிடைப்பதாகும். இதுபோக ரூ.2,000 உடனடி பேங்க் டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. ஆகவே, ரூ.28,499 பட்ஜெட்டில் இந்த ஒன்பிளஸ் நோர்ட் 5 ஸ்மார்ட்போனை வாங்கி கொள்ளலாம்.
இந்த உடனடி பேங்க் டிஸ்கவுண்ட்டானது, எஸ்பிஐ கிரெடிட் கார்டுக்கு (SBI Credit Card) கிடைக்கிறது. அதேபோல எஸ்பிஐ டெபிட் கார்டு மூலம் ஆர்டர் செய்தால், ரூ.1,750 உடனடி டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. இந்த விலை குறைப்பு, பேங்க் டிஸ்கவுண்ட் போக ரூ.28,900 மதிப்பில் எக்ஸ்சேஞ்ச் மற்றும் ஈஎம்ஐ சலுகைகளும் இதில் பெற்று கொள்ளலாம்.
ஒன்பிளஸ் நோர்ட் 5 அம்சங்கள் (OnePlus Nord 5 Specifications): இந்த நோர்ட் ஸ்மார்ட்போனில் ஆக்ஸிஜன் ஓஎஸ் 15 (Oxygen OS 15) கொண்ட ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8எஸ் ஜென் 3 4என்எம் (Octa Core Snapdragon 8s Gen 3 4nm) சிப்செட் கிடைக்கிறது. இந்த சிப்செட்டில் கிடைக்கும் அட்ரினோ 735 ஜிபியு (Adreno 735 GPU) கிராபிக்ஸ் கார்டு கிடைக்கிறது.
ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) மற்றும் 4 வருடங்களுக்கான ஆண்ட்ராய்டு ஓஎஸ் அப்டேட் கிடைக்கிறது. அதேபோல 6 வருடங்களுக்கு செக்யூரிட்டி அப்டேட்களையும் இந்த நோர்ட் ஸ்மார்ட்போன் கொடுக்கிறது. இதை கேமிங் மாடலாகவே பார்க்கலாம். ஏனென்றால், 144 FPS கேமிங் மற்றும் 7,300 எம்எம் விசி கூலிங் சிஸ்டம் கிடைக்கிறது.
அதேபோல அதிக பேக்கப் கொடுக்க 6800mAh பேட்டரி மட்டுமல்லாமல், அதை உடனடியாக சார்ஜ் செய்து கொள்ள 80W சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் கிடைக்கிறது. கேமிங் அவுட்புட்டுக்கு ஏற்ப 144Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட 6.83 இன்ச் (2772 x 1240 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே கிடைக்கிறது. இதில் 1800 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் உள்ளது.
மேலும், 840Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி கிடைக்கிறது. இதுபோக கார்னிங் கொரில்லா கிளாஸ் 7ஐ (Corning Gorilla Glass 7i) பாதுகாப்பை கொடுத்து இருக்கிறது. கேமிங் மாடலாகவே இருந்தாலும், இந்திய கேமரா பிரியர்களுக்கு ஏற்ப பிரீமியமான சென்சார்கள் மற்றும் டெக்னாலஜிகளுடன் டூயல் ரியர் கேமரா சிஸ்டம் (Dual Rear Camera System) கிடைக்கிறது.
ஆகவே, ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் டெக்னாலஜி, சோனி எல்ஒய்டி 700 சென்சார் மற்றும் 4K வீடியோ ரெக்கார்டிங் சப்போர்ட் கொண்ட 50 எம்பி மெயின் கேமரா கிடைக்கிறது. மேலும், 3.5எம் மேக்ரோ சப்போர்ட் கொண்ட 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா உள்ளது. 50 எம்பி செல்பீ கேமரா மற்றும் சாம்சங் ஜேஎன்1 சென்சார் கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications








