மிரளுது அமேசான்.. ரூ.25000 பட்ஜெட்ல SONY கேமரா.. 100W சார்ஜிங்.. 5500mAh பேட்டரி.. எந்த மாடல்?
இந்தியா கேமரா பிரியர்களுக்கான சோனி எல்ஒய்டி சென்சாருடன் மெயின் கேமரா, கேமிங் பிரியர்களுக்கான 120Hz ரெஃப்ரெஷ் ரேட்டுடன் அமோலெட் டிஸ்பிளே, நிமிடங்களில் ஃபுல் சார்ஜ் கொடுக்கும் 100W ஃபாஸ்ட் சார்ஜிங், பட்டையை கிளப்பும் பேக்கப்புடன் 5500mAh பேட்டரி போன்ற மிட்-பிரீமியம் பீச்சர்கள் பேக் செய்துள்ள ஒன்பிளஸ் நோர்ட் 4 5ஜி (OnePlus Nord 4 5G) போனானது நம்ப முடியாத டிஸ்கவுண்ட்டில் கிடைக்கிறது.
அமேசான் விற்பனையில் (Amazon Sale) ஒன்பிளஸ் பிரியர்கள் அடித்து பிடித்து ஆர்டர் போடும்படியான டிஸ்கவுண்ட்டில் ஒன்பிளஸ் நோர்ட் 4 5ஜி போன் கிடைக்கிறது. பீச்சர்களில் மட்டுமல்லாமல், டிசைனில் மெட்டாலிக் பாடியில் அல்ட்ரா பிரீமியம் லுக் கொடுக்கிறது. ஸ்லிம் பாடியில் 5500mAh பேட்டரியை கொடுக்கிறது. முழு பீச்சர்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

ஒன்பிளஸ் நோர்ட் 4 5ஜி அம்சங்கள் (OnePlus Nord 4 5G Specifications): இந்த ஒன்பிளஸ் போனில் கேமிங் பிரியர்களுக்கு மிட்-ரேஞ்ச் அவுட்புட் கொடுக்கும் ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 7 பிளஸ் ஜென் 3 4என்எம் (Octa Core Snapdragon 7+ Gen 3 4nm) சிப்செட் மற்றும் அட்ரினோ 732 ஜிபியு (Adreno 732 GPU) கிராபிக்ஸ் கார்டு கிடைக்கிறது. ஆக்ஸிஜன்ஓஎஸ் 14.1 (OxygenOS 14.1) கிடைக்கிறது.
லேட்டஸ்ட் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) வருகிறது. ஒன்பிளஸ் ரோம் ரேம்-வைட்டலைசேஷன் (OnePlus RAM-Vitalization) கொண்ட 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்களில் மார்கெட்டில் கிடைக்கிறது. மேலும், 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட ஹை-எண்ட் மாடலும் கிடைக்கிறது.
பிரீமியமான டிஸ்பிளே பேக் செய்துள்ளது. ஆகவே, அக்வா டச் (Aqua Touch) மற்றும் ப்ரோஎக்ஸ்டிஆர் (ProXDR) கொண்ட 6.74 இன்ச் (2772 × 1240 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே வருகிறது. இந்த பிரீமியம் டிஸ்பிளேவில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 2150 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் 2160Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி கிடைக்கிறது.
மேலும், ஓடிடி பிரியர்களுக்கான எச்டிஆர்10பிளஸ் (HDR10+) மற்றும் அல்ட்ரா எச்டிஆர் (Ultra HDR) கிடைக்கிறது. இந்த ஒன்பிளஸ் மாடலில் 50 எம்பி மெயின் கேமரா + 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா உள்ளது. இந்த கேமராக்களில் சோனி எல்ஒய்டி 600 (Sony LYT 600) சென்சார் மற்றும் சோனி ஐஎம்எக்ஸ்355 (Sony IMX355) சென்சார் கிடைக்கிறது.
16 எம்பி செல்பீ ஷூட்டர் உள்ளது. இந்த ஷூட்டரில் சாம்சங் எஸ்5கே3பி9 (Samsung S5K3P9) சென்சார் கிடைக்கிறது. இந்த ஒன்பிளஸ் நோர்ட் 4 5ஜி போனில் 100W சூப்பர்வூக் (SuperVOOC) ஃபாஸ்ட் சார்ஜிங்
மற்றும் 5500mAh பேட்டரி வருகிறது. இந்த பேட்டரிக்கு பேட்டரி ஹெல்த் என்ஜின் (Battery Health Engine) உள்ளது. மூன்று கலர்களில் ஆர்டர் செய்து கொள்ளலாம்.
ஒன்பிளஸ் நோர்ட் 4 அமேசான் சேல் (OnePlus Nord 4 Amazon Sale): அமேசான் தளத்தில் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.27,999ஆக இருக்கிறது. ஆனால், இப்பேது ஐசிஐசிஐ பேங்க் கிரெடிட் கார்டுக்கு ரூ.2000 உடனடி டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. ஆகவே, ரூ.25,999 பட்ஜெட்டில் வாங்கி கொள்ளலாம். இந்தியாவில் அறிமுகமானபோது ரூ.29,999ஆக விலை இருந்தது.


Click it and Unblock the Notifications