Home
Deal of the day

விடவே கூடாத விலை குறைப்பு.. கைக்குள்ள அடங்கும் OnePlus மினி ஸ்மார்ட்போன் மீது ரூ.7000 டிஸ்கவுண்ட்!

ஒன்பிளஸ் நிறுவனத்தின் மினி ஸ்மார்ட்போன் (OnePlus Mini Smartphone) ஆக.. அதாவது காம்பாக்ட் பிளாக்ஷிப் போன் (Compact Flagship Phone) ஆக அறிமுகமான ஒன்பிளஸ் 13எஸ் (OnePlus 13s) மாடலை மலிவான விலைக்கு வாங்க இதுவே சரியான நேரம் என்று கூறலாம்.

ஏனென்றால் அமேசான் கிரேட் இந்தியன் பெஸ்டிவல் சேல் 2025 (Amazon Great Indian Festival Sale 2025) விற்பனையின் ஒரு பகுதியாக ஒன்பிளஸ் 13எஸ் ஸ்மார்ட்போன் மீது நேரடி விலை குறைப்பு (Direct Price Cut) மட்டுமின்றி கூடுதலாக பேங்க் டிஸ்கவுண்ட்டும் (Bank Discount) அறிவிக்கப்பட்டுள்ளது.

OnePlus மினி ஸ்மார்ட்போன் மீது ரூ.7000 டிஸ்கவுண்ட்!

அமேசானில் தற்போது ஒன்பிளஸ் 13எஸ் ஸ்மார்ட்போனின் 12ஜிபி ரேம் + 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.50,999 க்கு வாங்க கிடைக்கிறது. அதாவது இது அசல் அறிமுக விலையான ரூ.54,999 உடன் ஒப்பிடும் போது ரூ.4000 நேரடி விலை குறைப்பு ஆகும்.

கூடுதலாக வங்கி சலுகைகளை பயன்படுத்தும் பட்சத்தில் ஒன்பிளஸ் 13எஸ் ஸ்மார்ட்போனின் இறுதி ஆபர் விலையை ரூ.47,999 க்கு கொண்டு வர முடியும். அதாவது மேலும் ரூ.3000 விலையை குறைக்க முடியும். இப்படியாக ஒன்பிளஸ் 13எஸ் ஸ்மார்ட்போன் மீது மொத்தம் ரூ.7000 டிஸ்கவுண்ட் கிடைக்கும். இந்த டிஸ்கவுண்ட் ஒன்பிளஸ் 13எஸ் ஸ்மார்ட்போனின் பிளாக் வெல்வெட், க்ரீன் சில்க் மற்றும் பிங்க் சாடின் ஆகிய 3 கலர் ஆப்ஷன்களின் மீதும் கிடைக்கும்.

ஒன்பிளஸ் 13எஸ் ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்:
- 6.32 இன்ச் 1.5கே (1216 × 2640 பிக்சல்ஸ்) எல்டிபிஓ ப்ரோ எக்ஸ்டிஆர் டிஸ்பிளே
- 120 ஹெர்ட்ஸ் வரை ரெஃப்ரெஷ் ரேட்
- 1600 நிட்ஸ் வரை பீக் ப்ரைட்னஸ்
- 2160 ஹசர்ட்ஸ் பிடபுள்யூஎம்டிம்மிங் ரேட்
- ஆக்வா டச் 2.0 தொழில்நுட்பம்
- க்ளோவ் மோட் (இது பயனர்கள் ஈரமான அல்லது கையுறை அணிந்த கைகளால் ஸ்மார்ட்போனை இயக்க உதவும்)

- 12ஜிபி எல்பிடிடிஆர்5எக்ஸ் ரேம்
- 512ஜிபி வரை யுஎப்எஸ் 4.0 ஸ்டோரேஜ்
- ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப்செட்
- ஆண்ட்ராய்டு 15 அடிப்படையிலான ஆக்சிஜென் ஓஎஸ் 15 ஓஎஸ்
- டூயல் ரியர் கேமரா செட்டப்
- எப் /1.8 அபெர்க்ஷர் மற்றும் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) ஆதரவுடன் 50 மெகாபிக்சல் சோனி எல்ஒய்டி 700 ப்ரைமரி சென்சார்
- எப்/2.0 அபெர்க்ஷர், 2எக்ஸ் ஆப்டிகல் ஜூம் மற்றும் எலக்ட்ரானிக் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (EIS) ஆதரவுடன் 50 மெகாபிக்சல் எஸ்5கேஜேஎன்5 டெலிஃபோட்டோ ஷூட்டர்
- 32 மெகாபிக்சல் செல்பீ சென்சார் (எப் /2.0, EIS ஆதரவு)

- 5850mAh பேட்டரி
- 80W சூப்பரவூக் சார்ஜிங் ஆதரவு
- இன் டிஸ்ப்ளே ஆப்டிகல் பிங்கர் பிரிண்ட் சென்சார்
- 5ஜி, 4ஜி, வைஃபை 7, ப்ளூடூத் 6.0, நாவிக் உடன் கூடிய ஜிபிஎஸ், என்எப்சி மற்றும் யூஎஸ்பி டைப்-சி போர்ட்
- அளவீட்டில் 150.8×71.7×8.2மிமீ
- எடையில் 185 கிராம்

ஒன்பிளஸ் 13எஸ் ஸ்மார்ட்போனில் கஸ்டமைஸ் செய்யக்கூடிய ஒரு பிளஸ் கீயும் (Plus Key) உள்ளது. இதை நீண்ட நேரம் அழுத்துவதன் மூலம் ரிங், வைப்ரேட் மற்றும் சைலண்ட் மோடுகளுக்கு இடையில் மாறலாம். மேலும் கேமராவை ஓப்பன் செய்வது, ஸ்க்ரீனில் உள்ள டெக்ஸ்ட்-ஐ மொழிபெயர்ப்பு செய்வது அல்லது ஃப்ளாஷ்லைட்டை இயக்குவது போன்ற குவிக் அக்சஸ்களுக்காகவும் இதை கஸ்டமைஸ் செய்யலாம்.

மேலும் இந்த பிளஸ் கீயை கொண்டு ஏஐ பிளஸ் மைண்ட் ஸ்பேஸையும் (AI Plus Mind Space) ஸ்டார்ட் செய்ய முடியும். ஒன்பிளஸ் 13எஸ் ஸ்மார்ட்போனில் உள்ள மைண்ட் ஸ்பேஸ்-ஐ பயன்படுத்தி கட்டுரைகள், புகைப்படங்கள், சாட்கள் மற்றும் அட்டவணைகள் போன்ற தகவல்களை ஒரே இடத்தில் சேமித்து, அவற்றை எளிதாக நேவிகேட் செய்ய முடியும்

மேலும் ஒன்பிளஸ் நிறுவனத்தின் இந்த காம்பாக்ட் பிளாக்ஷிப் ஸ்மார்ட்போனில் ஏஐ டீடெயில் பூஸ்ட் (AI Detail Boost), ஏஐ அன்பிளர் (AI Unblur), ஏஐ ரெஃப்ளெக்ஷன் ஏரேசர் (AI Reflection Eraser), ஏஐ ரீபிரேம் (AI Reframe) மற்றும் பல ஏஐ-ஆதரவு இமேஜிங் டூல்களும் உள்ளன. ஏஐ டிரான்ஸ்லேஷன் (AI Translation), ஏஐ வாய்ஸ்ஸ்க்ரைப் (AI VoiceScribe), ஏஐ கால் அசிஸ்டன்ட் (AI Call Assistant), ஏஐ சேர்ச் (AI Search), கூகுளின் சர்க்கிள் டூ சேர்ச் மற்றும் கூகுள் ஜெமினி போன்ற ஏஐ அம்சங்களுக்கான ஆதரவும் உள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
OnePlus Mini Compact Flagship Phone OnePlus 13s Selling At Discount Price in Amazon Sale 2025
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X