OnePlus 32-இன்ச் ஸ்மார்ட் டிவி வாங்குறதுக்கு இதைவிட ஒரு சிறந்த நேரம் கிடைக்காது.. Amazon அசத்தல் சலுகை..
அமேசான் தளத்தில் அமேசான் டீல் ஆஃப் தி டே (Amazon Deal of the day) எனும் சிறப்பு சலுகை மூலம் பிரபலமான 32-இன்ச் ஒன்பிளஸ் ஸ்மார்ட் டிவியை கம்மி விலையில் வாங்க முடியும். அதாவது 32-இன்ச் ஒன்பிளஸ் Y சீரிஸ் எச்டி ரெடி எல்இடி ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவி (32Y1) மாடலுக்கு தான் தற்போது சலுகை வழங்கப்பட்டுள்ளது.
அதாவது இந்த 32-இன்ச் ஒன்பிளஸ் Y சீரிஸ் எச்டி ரெடி எல்இடி ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவி ஆனது முன்பு 19,999-விலையில் விற்பனை செய்யப்பட்டது. ஆனால் தற்போது இந்த ஸ்மார்ட் டிவிக்கு 38 சதவீதம் வரை தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த ஒன்பிளஸ் 32-இன்ச் ஸ்மார்ட் டிவியை தற்போது ரூ.12,499-விலையில் வாங்க முடியும்.

மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த ஸ்மார்ட் டிவியை இன்னும் கம்மி விலையில் வாங்க முடியும். இப்போது இந்த ஒன்பிளஸ் Y சீரிஸ் எச்டி ரெடி எல்இடி ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவியின் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம். அதாவது இந்த ஒன்பிளஸ் ஸ்மார்ட் டிவி ஆனது பெசல்-லெஸ் டிசைன்-ஐ கொண்டுள்ளது.
குறிப்பாக ஒன்பிளஸ் Y சீரிஸ் எச்டி ரெடி எல்இடி ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவி ஆனது 1366x768 பிக்சல்ஸ், 250 நிட்ஸ் ப்ரைட்னஸ் மற்றும் 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் ஆதரவைக் கொண்டுள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட் டிவி சிறந்த பாதுகாப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது. மேலும் இந்த டிவி எல்இடி பேனல் ஆதரவுடன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.
64-பிட் பவர்ஃபுல் பிராசஸர் வசதியைக் கொண்டு இந்த 32-இன்ச் ஒன்பிளஸ் Y சீரிஸ் எச்டி ரெடி எல்இடி ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவி வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த பிராசஸர் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். அதேபோல் இந்த டிவியை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். பின்பு ஆண்ட்ராய்டு டிவி 9.0 இயங்குதளத்தைக் கொண்டு இந்த ஒன்பிளஸ் ஸ்மார்ட் டிவி வெளிவந்துள்ளது.
குறிப்பாக இந்த ஒன்பிளஸ் 32-இன்ச் ஸ்மார்ட் டிவியின் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ஒன்பிளஸ் நிறுவனம். பின்பு கூகுள் அசிஸ்டண்ட், குரோம்காஸ்ட் ஆதரவு உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை இந்த ஒன்பிளஸ் டிவியில் பயன்படுத்த முடியும். அதேபோல் இந்த டிவியில் காமா பிக்சர் எஞ்சின் ஆதரவு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
டால்பி டிஜிட்டல் பிளஸ் மற்றும் டிடிஎஸ்-எச்டி ஆதரவு கொண்ட 20 வாட்ஸ் ஸ்பீக்கர்களை கொண்டுள்ளது இந்த ஒன்பிளஸ் 32-இன்ச் ஸ்மார்ட் டிவி மாடல். எனவே இந்த ஸ்மார்ட் டிவி சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும். அதேபோல் நெட்ஃபிக்ஸ், பிரைம் வீடியோ, டிஸ்னி+ஹாட்ஸ்டார், யூடியூப் உள்ளிட்ட பல்வேறு ஆப்ஸ்களை இந்த டிவியில் பயன்படுத்த முடியும்.
1ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி ஸ்டோரேஜ் வசதி கொண்டுள்ளது இந்த 32-இன்ச் ஒன்பிளஸ் Y சீரிஸ் எச்டி ரெடி எல்இடி ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவி. எனவே இந்த ஸ்மார்ட் டிவியில் ஆப்ஸ்களை தடையின்றி பயன்படுத்த முடியும். அதேபோல் இந்த ஸ்மார்ட் டிவியில் காமா எஞ்சின் மற்றும் டைனமிக் கான்ட்ராஸ்ட் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் சிறந்த திரை அனுபவத்தைக் கொடுக்கும்.

புளூடூத், ஈதர்நெட், வைஃபை, எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளுடன் இந்த 32-இன்ச் ஒன்பிளஸ் Y சீரிஸ் எச்டி ரெடி எல்இடி ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவி வெளிவந்துள்ளது. குறிப்பாக மேம்பட்ட அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட் டிவி கம்மி விலையில் கிடைப்பதால் நம்பி வாங்கலாம்.
மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications








