Home
Deal of the day

எந்த பேங்க் கார்டும் வேணாம்.. ரூ.5000 நேரடி விலை குறைப்பு.. 5850mAh பேட்டரி OnePlus மினி போன்!

ஒன்பிளஸ் நிறுவனத்தின் முதல் மினி ஸ்மார்ட்போன் ஆக, அதாவது காம்பாக்ட் பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் (Compact Flagship Smartphone) ஆக இந்திய சந்தையில் அறிமுகமான ஒன்பிளஸ் 13எஸ் (OnePlus 13s) மாடலின் மீது, எந்த பேங்க் கார்டும் இல்லாமல் நேரடியாக ரூ.5000 விலை குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது அமேசான் இந்தியா வலைத்தளத்தில் ஒன்பிளஸ் 13எஸ் ஸ்மார்ட்போன் ஆனது ரூ.49,999 க்கு பட்டியலிடப்பட்டுள்ளது. அதாவது இது ரூ.5000 நேரடி விலை குறைப்பை பெற்றுள்ளது. நினைவூட்டும் வண்ணம் ஒன்பிளஸ் 13எஸ் ஸ்மார்ட்போனின் 12ஜிபி ரேம் + 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.54,999 க்கு அறிமுகம் செய்யப்பட்டது.

ரூ.5000 நேரடி விலை குறைப்பு.. 5850mAh பேட்டரி OnePlus மினி போன்!

கூடுதலாக தேர்ந்தெடுக்கப்பட்ட வங்கிகளில் கிரெடிட் கார்டு வழியாக வாங்கினால் ரூ.100 கேஷ்பேக் கிடைக்கும் என்றும் அமேசான் இந்தியா வலைத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள வாடிக்கையாளர்கள் ஒன்பிளஸ் 13எஸ் ச்னர்ட்போனை பிளாக் வெல்வெட், க்ரீன் சில்க் மற்றும் பிங்க் சாடின் 3 ஆகிய கலர்களில் வாங்கலாம்.

ஒன்பிளஸ் 13எஸ் ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்:
- 6.32-இன்ச் 1.5கே (1216 × 2640 பிக்சல்ஸ்) LTPO ProXDR டிஸ்பிளே
- 120Hz வரை ரெஃப்ரெஷ் ரேட்
- 1600 நிட்ஸ் வரை பீக் ப்ரைட்னஸ்
- 2,160Hz PWM டிம்மிங் ரேட்
- ஆக்வா டச் 2.0 தொழில்நுட்பம்
- க்ளோவ் மோட்
- 12ஜிபி LPDDR5X ரேம்
- 512GB வரை UFS 4.0 ஸ்டோரேஜ்

- ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப்செட்
- ஆண்ட்ராய்டு 15 அடிப்படையிலான OxygenOS 15 ஓஎஸ்
- டூயல் ரியர் கேமரா செட்டப்
- எப் /1.8 அபெர்க்ஷர் மற்றும் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) ஆதரவுடன் 50-மெகாபிக்சல் சோனி LYT-700 ப்ரைமரி சென்சார்
- எப்/2.0 அபெர்க்ஷர், 2x ஆப்டிகல் ஜூம் மற்றும் எலக்ட்ரானிக் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (EIS) ஆதரவுடன் 50-மெகாபிக்சல் S5KJN5 டெலிஃபோட்டோ ஷூட்டர்
- 32 மெகாபிக்சல் செல்பீ சென்சார் (எப் /2.0, EIS ஆதரவு)

- 5850mAh பேட்டரி
- 80W SuperVOOC சார்ஜிங் ஆதரவு
- இன்-டிஸ்ப்ளே ஆப்டிகல் பிங்கர் பிரிண்ட் சென்சார்
- 5ஜி, 4ஜி, வைஃபை 7, ப்ளூடூத் 6.0, NavIC உடன் கூடிய GPS, NFC மற்றும் USB Type-C போர்ட்
- அளவீட்டில் 150.8×71.7×8.2மிமீ
- எடையில் 185 கிராம்

ஒன்பிளஸ் 13எஸ் ஸ்மார்ட்போனில் கஸ்டமைஸ் செய்யக்கூடிய பிளஸ் கீ உள்ளது: இதை நீண்ட நேரம் அழுத்துவதன் மூலம் ரிங், வைப்ரேட் மற்றும் சைலண்ட் மோடுகளுக்கு இடையில் மாறலாம். கேமராவை திறப்பது, ஸ்க்ரீனில் உள்ள டெக்ஸ்ட்-ஐ மொழிபெயர்ப்பது அல்லது ஃப்ளாஷ்லைட்டை இயக்குவது போன்ற குவிக் அக்சஸ்-களுக்கும் இதை கஸ்டமைஸ் செய்யலாம். இதைக்கொண்டு AI Plus Mind Space-ஐயும் தொடங்க முடியும்.

ஒன்பிளஸ் 13எஸ் ஸ்மார்ட்போனில் உள்ள மைண்ட் ஸ்பேஸ்-ஐ பயன்படுத்தி கட்டுரைகள், புகைப்படங்கள், சாட்கள் மற்றும் அட்டவணைகள் போன்ற தகவல்களை ஒரே இடத்தில் சேமித்து, அவற்றை எளிதாக நேவிகேட் செய்யலாம். மேலும் இந்த ஸ்மார்ட்போனில் AI Detail Boost, AI Unblur, AI Reflection Eraser, AI Reframe மற்றும் பல ஏஐ-ஆதரவு இமேஜிங் டூல்களும் உள்ளன. AI Translation, AI VoiceScribe, AI Call Assistant, AI Search, அத்துடன் Google இன் Circle to Search அம்சம் மற்றும் Google Gemini போன்ற ஏஐ அம்சங்களுக்கான ஆதரவும் இதில் உள்ளது.


Article Corrections

Remove repeated word in title.
Best Mobiles in India

English summary
OnePlus 13s gets Rs 2000 Price Cut and Rs 5000 Bank Discount in Amazon India
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X