Home
Deal of the day

இந்த தீபாவளிக்கு புது போன் கன்ஃபார்ம்.. 6000mAh OnePlus 5ஜி போன் மீது ரூ.6000 டிஸ்கவுண்ட்.. எந்த மாடல்?

2025 தீபாவளிக்கு எப்படியாவது ஒரு புது ஸ்மார்ட்போனை வாங்கிவிட வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு.. நல்ல ஆபர்களை தேடுபவர்களை குறிவைத்து - அமேசான் இந்தியா (Amazon India) வலைத்தளம் ஆனது பலத்தரப்பட்ட ஒன்பிளஸ் (OnePlus) ஸ்மார்ட்போன்கள் மீது பல டிஸ்கவுண்ட்களை அறிவித்துள்ளது.

அவைகளில் ஒன்பிளஸ் 13ஆர் (OnePlus 13R) மீதான ஆபர் கவனிக்கத்தக்கதாக உள்ளது. தற்போது இது அமேசான் இந்தியா வலைத்தளத்தில் ரூ.6000 (பேங்க் டிஸ்கவுண்ட் உட்பட) தள்ளுபடியை பெற்று ரூ.36,999 க்கு வாங்க கிடைக்கிறது. நினைவூட்டும் வண்ணம் இது கடந்த ஜனவரி மாதம் ரூ.42,999 க்கு இந்தியாவில் அறிமுகமானது.

6000mAh OnePlus 5ஜி போன் மீது ரூ.6000 டிஸ்கவுண்ட்.. எந்த மாடல்?

ஒன்பிளஸ் 13ஆர் ஸ்மார்ட்போனின் விரிவான அம்சங்கள்: டிஸ்பிளேவை பொறுத்தவரை இது 1264 x 2780 பிக்சல்ஸ், 93.9% ஸ்க்ரீன்-டூ-பாடி, 450பிபிஐ பிக்சல் டென்சிட்டி, 4,500 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ், 120ஹெர்ட்ஸ் அடாப்டிவ் ரெஃப்ரெஷ் ரேட் கார்னிங் கொரில்லா கிளாஸ் 7ஐ ப்ரொடெக்ஷன் உடனான 6.78-இன்ச் ஃபுல்-எச்டி பிளஸ் எல்டிபிஓ டிஸ்பிளேவை கொண்டுள்ளது

சிப்செட்டை பொறுத்தவரை இது ஸ்னாப்டிராகன் 8 ஜெனரல் 3 சிப்செட்டை கொண்டுள்ளது, இது 16ஜிபி ரேம் மற்றும் 512ஜிபி வரையிலான இன்டர்னல் ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. கேமராக்களை பொறுத்தவரை இது ஓஐஎஸ் ஆதரவுடன் 50-மெகாபிக்சல் சோனி LYT-700 1/1.56-இன்ச் ப்ரைமரி சென்சார் உடனான ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது

மீதமுள்ள கேமராக்களை பொறுத்தவரை இது 2எக்ஸ் ஆப்டிகல் ஜூம் கொண்ட 50 மெகாபிக்சல் S5KJN5 டெலிஃபோட்டோ கேமரா மற்றும் 8 மெகாபிக்சல் அல்ட்ரா வைட்-ஆங்கிள் கேமராவை கொண்டுள்ளது. முன்பக்கத்தில் 16 மெகாபிக்சல் செல்பீ கேமரா உள்ளது. கடைசியாக இது 80W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 6,000mAh பேட்டரியை கொண்டுள்ளது.

அமேசானில் வேறு என்னென்ன ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்கள் மீது ஆபர் (பேங்க் டிஸ்கவுண்ட் உட்பட) கிடைக்கிறது?
1. ஒன்பிளஸ் 13 (OnePlus 13): ரூ.72,999 க்கு பதிலாக ரூ.59,999 க்கு வாங்க கிடைக்கும்
2. ஒன்பிளஸ் 13எஸ் (OnePlus 13s): ரூ.57,999 க்கு பதிலாக ரூ.47,999 க்கு வாங்க கிடைக்கும்

3. ஒன்பிளஸ் நோர்ட் 5 (OnePlus Nord 5): ரூ.34,999 க்கு பதிலாக ரூ.30,249 க்கு வாங்க கிடைக்கும்
4. ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 5 (OnePlus Nord CE 5): ரூ.24,999 க்கு பதிலாக ரூ.23,249 க்கு வாங்க கிடைக்கும்.

5. ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 4 லைட் (OnePlus Nord CE 4 Lite): ரூ.20,999 க்கு பதிலாக ரூ.15,999 க்கு வாங்க கிடைக்கும்
6. ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 4 (OnePlus Nord CE 4): ரூ.24,999 க்கு பதிலாக ரூ.18,249 க்கு வாங்க கிடைக்கும்

ஒன்பிளஸ் 13எஸ் ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்:
- 6.32-இன்ச் 1.5கே (1216 × 2640 பிக்சல்ஸ்) LTPO ProXDR டிஸ்பிளே
- ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப்செட்
-டூயல் ரியர் கேமரா செட்டப்
- எப் /1.8 அபெர்க்ஷர் மற்றும் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) ஆதரவுடன் 50-மெகாபிக்சல் சோனி LYT-700 ப்ரைமரி சென்சார்

- எப்/2.0 அபெர்க்ஷர், 2x ஆப்டிகல் ஜூம் மற்றும் எலக்ட்ரானிக் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (EIS) ஆதரவுடன் 50-மெகாபிக்சல் S5KJN5 டெலிஃபோட்டோ ஷூட்டர்
- 32 மெகாபிக்சல் செல்பீ சென்சார் (எப் /2.0, EIS ஆதரவு)
- 5850mAh பேட்டரி
- 80W SuperVOOC சார்ஜிங் ஆதரவு

More from GizBot

Best Mobiles in India

English summary
OnePlus 13R Rs 6000 Discount Amazon Great Indian Festival Sale 2025 Diwali Offer Details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X