Home
Deal of the day

பேக் டூ பேக் ஆபர்.. 6000mAh பேட்டரி கொண்ட இந்த OnePlus 5ஜி போன் மீது ரூ.5000 விலை குறைப்பு!

ஒன்பிளஸ் 15 சீரீஸின் கீழ் ஒன்பிளஸ் 15 மற்றும் ஒன்பிளஸ் 15ஆர் ஆகிய 2 மாடல்கள் அடுத்த மாதம் இந்தியாவில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், ஏற்கனவே ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போன் ஆனது குறைக்கப்பட்ட விலையின் கீழ் (பிளிப்கார்ட்டில்) வாங்க கிடைக்கிறது.

இதற்கிடையில் ஒன்பிளஸ் 13ஆர் (OnePlus 13R) மீதும் கிட்டத்தட்ட ரூ.5000 (சரியாக சொன்னால் ரூ.4,948) நேரடி விலை குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. பிளிப்கார்ட்டில் தற்போது ஒன்பிளஸ் 13ஆர் ஸ்மார்ட்போனின் பேஸிக் 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ஆனது அதன் அசல் அறிமுக விலையான ரூ.42,999 க்கு பதிலாக ரூ.38,051 க்கு வாங்க கிடைக்கிறது.

6000mAh பேட்டரி OnePlus 5ஜி போன் மீது ரூ.5000 விலை குறைப்பு!

ஒன்பிளஸ் 13ஆர் ஸ்மார்ட்போனின் அம்சங்கள்: டிஸ்பிளேவை பொறுத்தவரை இது 1264 x 2780 பிக்சல்ஸ், 93.9% ஸ்க்ரீன்-டூ-பாடி, 450பிபிஐ பிக்சல் டென்சிட்டி, 4,500 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ், 120ஹெர்ட்ஸ் அடாப்டிவ் ரெஃப்ரெஷ் ரேட் கார்னிங் கொரில்லா கிளாஸ் 7ஐ ப்ரொடெக்ஷன் உடனான 6.78-இன்ச் ஃபுல்-எச்டி பிளஸ் எல்டிபிஓ டிஸ்பிளேவை கொண்டுள்ளது

சிப்செட்டை பொறுத்தவரை இது ஸ்னாப்டிராகன் 8 ஜெனரல் 3 சிப்செட்டை கொண்டுள்ளது, இது 16ஜிபி ரேம் மற்றும் 512ஜிபி வரையிலான இன்டர்னல் ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. கேமராக்களை பொறுத்தவரை இது ஓஐஎஸ் ஆதரவுடன் 50-மெகாபிக்சல் சோனி LYT-700 1/1.56-இன்ச் ப்ரைமரி சென்சார் உடனான ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது

மீதமுள்ள கேமராக்களை பொறுத்தவரை இது 2எக்ஸ் ஆப்டிகல் ஜூம் கொண்ட 50 மெகாபிக்சல் S5KJN5 டெலிஃபோட்டோ கேமரா மற்றும் 8 மெகாபிக்சல் அல்ட்ரா வைட்-ஆங்கிள் கேமராவை கொண்டுள்ளது. முன்பக்கத்தில் 16 மெகாபிக்சல் செல்பீ கேமரா உள்ளது. கடைசியாக இது 80W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 6,000mAh பேட்டரியை கொண்டுள்ளது

ஒன்பிளஸ் 15, ஒன்பிளஸ் 15ஆர் எப்போது அறிமுகமாகிறது? ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போன் ஆனது வருகிற அக்.27 சீனாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இது நவம்பர் 13 ஆம் தேதி அன்று இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எப்படியும் 2025 நவம்பரில் அறிமுகமாகி விடும். இதோடு சேர்த்து சீனாவில் ஒன்பிளஸ் ஏஸ் 6 ஆக அறிமுகமாகும் மாடல் இந்தியாவில் ஒன்பிளஸ் 15ஆர் ஆக அறிமுகமாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஒன்பிளஸ் 15 ஆனது பிஓஇயின் தேர்ட் ஜெனரேஷன் ஓரியண்டல் டிஸ்பிளே உடனான உலகின் முதல் 165 ஹெர்ட்ஸ் ஓஎல்இடி ஸ்க்ரீனை கொண்ட ஸ்மார்ட்போன் ஆக அறிமுகமாகும் என்றும், இது 120W வயர்டு, 50W வயர்லெஸ் சார்ஜிங் உடன் 7300mAh பேட்டரி கொண்ட ஸ்மார்ட்போன் ஆக அறிமுகம் என்றும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் ஒன்பிளஸ் சீனாவின் தலைவர் ஆன லி ஜி, தனது சமூக ஊடகப்பதிவின் மூலம், ஒன்பிளஸ் 15 ஆனது ரோபோவின் லுமோ இமேஜிங் சிஸ்டமை அறிமுகப்படுத்தும் என்றும், இது ஒன்பிளஸ் நிறுவனத்தின் கீழ் அறிமுகமான மிகவும் மேம்பட்ட போட்டோகிராஃபி ஃபோகஸ்டு போன் (Most advanced photography-focused phone) ஆக நிலைநிறுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார். ஒட்டுமொத்தமாக ஒன்பிளஸ் 15 மீதான எதிர்பார்ப்பு எகிறிக்கொண்டே போகிறது

ஒன்பிளஸ் 13 மீதான விலை குறைப்பு: தற்போது ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போனின் பேஸிக் 12ஜிபி ரேம் + 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ஆனது அதன் அசல் அறிமுக விலையான ரூ.69,999 க்கு பதிலாக ரூ.8160 விலை குறைப்பை பெற்று ரூ.61,839 க்கு வாங்க கிடைக்கிறது. குறிப்பிடத்தக்க வகையில் ஒன்பிளஸ் இந்தியா வலைத்தளம் இதே வேரியண்ட்டை இன்னமும் ரூ.69,999 க்கு தான் விற்பனை செய்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
OnePlus 13R Price Cut in Flipkart Ahead OnePlus 15R Launch Next Month in India
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X