7400mAh பேட்டரி உடன் புது OnePlus போன்.. உடனே 6000mAh OnePlus மாடல் மீது ரூ.5100 விலை குறைப்பு!
ஒன்பிளஸ் (OnePlus) நிறுவனம் வருகிற டிசம்பர் 17 ஆம் தேதி அன்று இந்திய சந்தையில் ஒன்பிளஸ் 15ஆர் () ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யவுள்ளது. இது 7400mAh பேட்டரி உடன் வருமென்று உறுதி செய்யப்பட்ட வேகத்தில் 6000mAh பேட்டரி உடன் வரும் ஒரு ஒன்பிளஸ் மாடல் மீது திடீர் விலை குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
அது ஒன்பிளஸ் 13ஆர் 5ஜி (OnePlus 13R 5G) ஸ்மார்ட்போனாகும். பிளிப்கார்ட் வலைத்தளத்தில் தற்போது இது ரூ.37,889 க்கு வாங்க வாங்க கிடைக்கிறது. இது எந்த பேங்க் டிஸ்கவுண்டும் இல்லாத நேரடியான ரூ.5110 விலைக்குறைப்பை பிரதிபலிக்கிறது. பேங்க் ஆபர்களை பயன்படுத்தினால் இன்னும் விலையை குறைக்கலாம்.

நினைவூட்டும் வண்ணம் ஒன்பிளஸ் 13ஆர் ஸ்மார்ட்போன் ஆனது இந்தியாவில் இது 2 ஸ்டோரேஜ் ஆப்ஷன்களில் கீழ் அறிமுகமானது. அந்த நேரத்தில் 12ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷனின் விலை ரூ.42,999 க்கும் 16ஜிபி ரேம் +512ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.49,999 க்கு வாங்க கிடைத்தது. தற்போது ஒன்பிளஸ் 15ஆர் வருவதால் விலை குறைக்கப்பட்டுள்ளது.
ஒன்பிளஸ் 13ஆர் ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்: டிஸ்பிளேவை பொறுத்தவரை இது 1264 x 2780 பிக்சல்ஸ், 93.9% ஸ்க்ரீன்-டூ-பாடி, 450பிபிஐ பிக்சல் டென்சிட்டி, 4,500 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ், 120ஹெர்ட்ஸ் அடாப்டிவ் ரெஃப்ரெஷ் ரேட் கார்னிங் கொரில்லா கிளாஸ் 7ஐ ப்ரொடெக்ஷன் உடனான 6.78-இன்ச் ஃபுல்-எச்டி பிளஸ் எல்டிபிஓ டிஸ்பிளேவை கொண்டுள்ளது.
சிப்செட்டை பொறுத்தவரை இது ஸ்னாப்டிராகன் 8 ஜெனரல் 3 சிப்செட்டை கொண்டுள்ளது, இது 16ஜிபி ரேம் மற்றும் 512ஜிபி வரையிலான இன்டர்னல் ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. கேமராக்களை பொறுத்தவரை இது ஓஐஎஸ் ஆதரவுடன் 50-மெகாபிக்சல் சோனி LYT-700 1/1.56-இன்ச் ப்ரைமரி சென்சார் உடனான ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது
மீதமுள்ள கேமராக்களை பொறுத்தவரை இது 2எக்ஸ் ஆப்டிகல் ஜூம் கொண்ட 50 மெகாபிக்சல் S5KJN5 டெலிஃபோட்டோ கேமரா மற்றும் 8 மெகாபிக்சல் அல்ட்ரா வைட்-ஆங்கிள் கேமராவை கொண்டுள்ளது. முன்பக்கத்தில் 16 மெகாபிக்சல் செல்பீ கேமரா உள்ளது. கடைசியாக இது 80W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 6,000mAh பேட்டரியை கொண்டுள்ளது
ஒன்பிளஸ் 15ஆர் ஸ்மார்ட்போனின் விலை நிர்ணயம் எப்படி இருக்கும்? பெரும்பாலும் ஒன்பிளஸ் 15ஆர் ஆனது ரூ.45,000 க்குள் என்கிற பட்ஜெட்டில் தான் இருக்கும். இன்னும் குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால் இது ரூ.44,999 அறிமுகம் செய்யப்படலாம். இது ரூ.72,999 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஒன்பிளஸ் 15 மாடலுக்கு கீழே அமரும்!
ஒன்பிளஸ் 15ஆர் ஸ்மார்ட்போனில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்? முன்னரே குறிப்பிட்டபடி இது 7400mAh பேட்டரியுடன் வரும் என்பது உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது. அதனுடன், இந்த ஸ்மார்ட்போன் 165 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz Refresh Rate) உடனான 1.5கே அமோஎல்இடி டிஸ்பிளேவை (1.5K AMOLED Display) கொண்டிருக்கும் என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக இது 2026 ஆம் ஆண்டின் தொடக்கத்திலேயே இது ஒரு சிறந்த மிட்-ரேன்ஜ் போனாக நிலைநிறுத்தப்படும்.
இதுகுறித்த அறிவிப்பில் - ஒன்பிளஸ் 15ஆர் ஸ்மார்ட்போனின் மிகப்பெரிய 7400mAh பேட்டரி ஆனது 80W SUPERVOOC பாஸ்ட் சார்ஜிங்கால் ஆதரிக்கப்படும் என்றும், 4 ஆண்டுகளுக்குப் பிறகும் இது குறைந்தது 80% க்கும் அதிகமான திறனை தக்க வைத்துக் கொள்ளும் என்றும் ஒன்பிளஸ் பிராண்ட் தெரிவித்துள்ளது. மேலும் ஒன்பிளஸ் 15ஆர் ஸ்மார்ட்போனால் 4கே ரெசல்யூஷனில் வினாடிக்கு 120 பிரேம்களில் ரெக்கார்ட் செய்ய முடியும் என்றும் ஒன்பிளஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது
சிப்செட்டை பொறுத்தவரை ஒன்பிளஸ் 15ஆர் ஸ்மார்ட்போன் ஆனது ஸ்னாப்டிராகன் 8 ஜென் 5 (Snapdragon 8 Gen 5) உடன் அறிமுகம் செய்யப்படலாம். இது உண்மையாகும் பட்சத்தில் இந்த சிப்செட்டை கொண்ட முதல் ஸ்மார்ட்போனாக இது இருக்கும். சுவாரசியமாக ஒன்பிளஸ் 15ஆர் ஸ்மார்ட்போன் ஆனது பிளஸ் மைண்டிற்கான (Plus Mind) ஆதரவுடன் வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








