Home
Deal of the day

மொய் வச்ச மாதிரி ரூ.9999 டிஸ்கவுண்ட்.. இந்த 6000mAh பேட்டரி OnePlus போனை அடிச்சு புடிச்சு வாங்குறாங்க!

அமேசான் இந்தியா வலைத்தளமானது "அடிச்சு தூள் கிளப்பிட்டு இருக்கு!" என்றே கூறலாம். 2025 நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு அறிவிக்கப்பட்டுள்ள கிரேட் இந்தியன் பெஸ்டிவல் சேல் 2025 விற்பனையில்.. பிரபலமான ஸ்மார்ட்போன் பிராண்டுகளில் ஒன்றான - ஒன்பிளஸ் நிறுவனத்தின் பல மாடல்களின் மீது பெரிய அளவிலான டிஸ்கவுண்ட்டை வழங்குகிறது.

அவைகளில் கவனிக்கத்தக்க தள்ளுபடியை பெற்றுள்ளது ஒன்பிளஸ் 13ஆர் (OnePlus 13R) ஸ்மார்ட்போன் தான். அப்பர் மிட் -ரேன்ஜ் பிரிவின் கீழ் அறிமுகம் செய்யப்பட்ட இந்த ஸ்மார்ட்போன், இந்த பண்டிகை கால சிறப்பு விற்பனையின் போது ரூ.35,999 க்கு வாங்க கிடைக்கும் என்று அமேசான் அறிவித்துள்ளது.

OnePlus: மொய் வச்ச மாதிரி ரூ.9999 டிஸ்கவுண்ட்!

இது பேங்க் ஆபரை உள்ளடக்கிய விலை ஆகும். நினைவூட்டும் வண்ணம் ஒன்பிளஸ் 13ஆர் ஸ்மார்ட்போன் ஆனது கடந்த ஜனவரி 2025 இல் இந்தியாவில் அறிமுகமானது. இந்த ஸ்மார்போனின் எம்ஆர்பி ரூ.44,999 ஆகும். அதாவது அமேசான் கிரேட் இந்தியன் பெஸ்டிவல் சேல் 2025 விற்பனையின் போது இதன் விலையை ரூ.9999 வரை குறைத்து ரூ.34,999 க்கு வாங்க முடியும்.

அமேசான் கிரேட் இந்தியன் பெஸ்டிவல் சேல் 2025 இல் வேறு என்னென்ன ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்கள் ஆபர் விலையில் வாங்க கிடைக்கும்?
1. ஒன்பிளஸ் 13 (OnePlus 13): இது எம்ஆர்பி விலையான ரூ.72,999 க்கு பதிலாக பேங்க் டிஸ்கவுண்ட் உடன் சேர்த்து ரூ.57,999 க்கு வாங்க கிடைக்கும்.

2. ஒன்பிளஸ் 13எஸ் (OnePlus 13s): இது எம்ஆர்பி விலையான ரூ.57,999 க்கு பதிலாக பேங்க் டிஸ்கவுண்ட் உடன் சேர்த்து ரூ.47,999 க்கு வாங்க கிடைக்கும்.
3. ஒன்பிளஸ் நோர்ட் 5 (OnePlus Nord 5): இது எம்ஆர்பி விலையான ரூ.34,999 க்கு பதிலாக பேங்க் டிஸ்கவுண்ட் உடன் சேர்த்து ரூ.28,749 க்கு வாங்க கிடைக்கும்.

4. ஒன்பிளஸ் நோர்ட் சிஇ5 (OnePlus Nord CE5): இது எம்ஆர்பி விலையான ரூ.24,999 க்கு பதிலாக பேங்க் டிஸ்கவுண்ட் உடன் சேர்த்து ரூ.21,749 க்கு வாங்க கிடைக்கும்.
5. ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 4 லைட் (OnePlus Nord CE4 Lite): இது எம்ஆர்பி விலையான ரூ.20,999 க்கு பதிலாக பேங்க் டிஸ்கவுண்ட் உடன் சேர்த்து ரூ.15,999 க்கு வாங்க கிடைக்கும்.

6. ஒன்பிளஸ் நோர்ட் சிஇ4 (OnePlus Nod CE4): இது எம்ஆர்பி விலையான ரூ.24,999 க்கு பதிலாக பேங்க் டிஸ்கவுண்ட் உடன் சேர்த்து ரூ.18,999 க்கு வாங்க கிடைக்கும்.
7. ஒன்பிளஸ் நோர்ட் 4 (OnePlus Nord 4):இது எம்ஆர்பி விலையான ரூ.32,999 க்கு பதிலாக பேங்க் டிஸ்கவுண்ட் உடன் சேர்த்து ரூ.25,999 க்கு வாங்க கிடைக்கும்.

ஒன்பிளஸ் 13ஆர் ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்: டிஸ்பிளேவை பொறுத்தவரை இது 1264 x 2780 பிக்சல்ஸ், 93.9% ஸ்க்ரீன்-டூ-பாடி ரேஷியோ, 450 பிபிஐ பிக்சல் டென்சிட்டி, 4500 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ், 120 ஹெர்ட்ஸ் அடாப்டிவ் ரெஃப்ரெஷ் ரேட், கார்னிங் கொரில்லா கிளாஸ் 7ஐ ப்ரொடெக்ஷன் உடனான 6.78-இன்ச் ஃபுல்-எச்டி பிளஸ் எல்டிபிஓ டிஸ்பிளேவை கொண்டுள்ளது

சிப்செட்டை பொறுத்தவரை ஒன்பிளஸ் 13ஆர் ஸ்மார்ட்போனானது ஸ்னாப்டிராகன் 8 ஜெனரல் 3 சிப்செட்டை கொண்டுள்ளது, இது 16ஜிபி ரேம் மற்றும் 512ஜிபி வரையிலான இன்டர்னல் ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. கேமராக்களை பொறுத்தவரை இது ஓஐஎஸ் ஆதரவுடன் 50 மெகாபிக்சல் சோனி எல்ஒய்டி-700 1/1.56-இன்ச் ப்ரைமரி சென்சார் உடனான ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது

ரியர் யூனிட்டில் மீதமுள்ள கேமராக்களை பொறுத்தவரை 2எக்ஸ் ஆப்டிகல் ஜூம் கொண்ட 50 மெகாபிக்சல் எஸ்5கேஜேஎன்5 டெலிஃபோட்டோ கேமரா மற்றும் 8 மெகாபிக்சல் அல்ட்ரா வைட்-ஆங்கிள் கேமரா உள்ளது. முன்பக்கத்தில் 16 மெகாபிக்சல் செல்பீ கேமரா உள்ளது. பேட்டரியை பொறுத்தவரை 80W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 6000mAh பேட்டரியை கொண்டுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
OnePlus 13R gets Almost Rs 10000 Discount in Amazon Great Indian Festival Sale 2025
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X