Home
Deal of the day

சர்ர்ருனு இறங்கியது OnePlus 13 விலை.. அக்.27 வரும் OnePlus 15 விலை லீக் ஆனதின் எதிர்வினை!

அடுத்த 3 வாரங்களுக்கு.. இன்னும் சரியாக சொல்ல வேண்டுமென்றால் அக்.27 தொடங்கி நவ.13 மற்றும் அதை தாண்டியும் கூட.. எந்த பக்கம் திரும்பினாலும் ஒன்பிளஸ் 15 (OnePlus 15) ஸ்மார்ட்போனின் அறிமுகம், விலை மற்றும் அம்சங்களை பற்றி அதிகம் பார்க்க வேண்டி இருக்கும்.

அக்.27 சீனாவில் அறிமுகம செய்யப்படும் ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போன் நவ.13 அன்று இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது (எப்படியும் 2025 நவம்பரில் அறிமுகமாகி விடும்). இதற்கிடையில் ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போனின் விலை ஆனது ஒன்பிளஸ் 13 (OnePlus 13) மாடலை விட குறைவானதாக இருக்கும் என்று ஒரு லீக் தகவல் வெளியாகி பரபரப்பை கிளப்பி இருந்தது.

சர்ர்ருனு இறங்கியது OnePlus 13 விலை!

அந்த பரபரப்பு அடங்குவதற்குள் பிளிப்கார்ட் வலைத்தளம் ஆனது இந்தாண்டு தொடக்கத்தில் இந்தியாவில் அறிமுகமான ஒன்பிளஸ் 13 மாடலின் மீது "மெகா, நேரடி விலை குறைப்பை" அறிவித்துள்ளது. அதாவது எந்த பேங்க் கிரெடிட் கார்டு அல்லது டெபிட் கார்டு அல்லது கூப்பன் தள்ளுபடியும் இல்லாத நேரடி விலை குறைப்பை அறிவித்துள்ளது.

தற்போது ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போனின் பேஸிக் 12ஜிபி ரேம் + 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ஆனது அதன் அசல் அறிமுக விலையான ரூ.69,999 க்கு பதிலாக ரூ.8160 விலை குறைப்பை பெற்று ரூ.61,839 க்கு வாங்க கிடைக்கிறது. குறிப்பிடத்தக்க வகையில் ஒன்பிளஸ் இந்தியா வலைத்தளம் இதே வேரியண்ட்டை இன்னமும் ரூ.69,999 க்கு தான் விற்பனை செய்கிறது.

ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போனின் விரிவான அம்சங்கள்: டிஸ்பிளேவை பொறுத்தவரை இது 3168 × 1440 பிக்சல்ஸ் ரெசல்யூஷன், 120 ஹெர்ட்ஸ் வரையிலான ரெஃப்ரெஷ் ரேட், 1600 நிட்ஸ் டிபிக்கல் ப்ரைட்னஸ், 4500 நிட்ஸ் வரையிலான பீக் ப்ரைட்னஸ், 2160 ஹெர்ட்ஸ் ஹை-ஃப்ரெக்வன்சி பிடபுள்யூஎம் டிம்மிங், டால்பி விஷன், கிரிஸ்டல் ஷீல்ட் சூப்பர் செராமிக் கிளாஸ் ப்ரொடெக்ஷன் உடனான 6.82 இன்ச் 2கே பிளஸ் எல்டிபிஓ அமோஎல்இடி பேனலை கொண்டுள்ளது

சிப்செட்டை பொறுத்தவரை ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போன் ஆனது 900மெகாஹெர்ட்ஸ் அட்ரெனோ 830 ஜிபியு உடனான 4.32ஜிகாஹெர்ட்ஸ்ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 எலைட் 4என்எம் மொபைல் பிளாட்ஃபார்ம் ப்ராசஸர் மூலம் இயக்கப்படுகிறது. இது 16ஜிபி வரையிலான எல்பிடிடிஆர்5எக்ஸ் ரேம் மற்றும் 512ஜிபி வரையிலான யுஎப்எஸ் 4.0 இன்டர்னல் ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்டுள்ளது

கேமராக்களை பொறுத்தவரை ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது. அதில் 1/1.4-இன்ச் சோனி எல்ஒய்டி-808 சென்சார், எப்/1.6 அபெர்க்ஷர், ஓஐஎஸ் உடனான 50எம்பி ப்ரைமரி கேமரா + 114° அல்ட்ரா-வைட் கேமராவுடன் 1/1.27-இன்ச் சாம்சங் ஜேஎன்1 சென்சார் உடனான 50எம்பி கேமரா + 3x ஆப்டிகல் ஜூம், 6x இன்-சென்சார் ஜூம், 120x டிஜிட்டல் ஜூம் உடனான 50எம்பி பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ கேமரா உள்ளது

முன்பக்கத்தில் சோனி ஐஎம்எக்ஸ்615 சென்சார் கொண்ட 32எம்பி செல்பீ கேமரா உள்ளது. இது எப்/2.4 அபெர்க்ஷர் உடன் வருகிர்து. இதனால் 4கே வரையிலான 30எஃப்பிஎஸ் வீடியோ ரெக்கார்டிங்கை செய்ய முடியும். பேட்டரியை பொறுத்தவரை 100W சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங், 50W வயர்லெஸ் சார்ஜிங், மேக்னட்டிக் சார்ஜிங் சப்போர்ட் உடனான 6000mAh பேட்டரியை கொண்டுள்ளது.

ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போனில் கவனிக்கப்பட வேண்டிய மற்ற அம்சங்கள்: இது இன்-டிஸ்ப்ளே அல்ட்ராசோனிக் பிங்கர் பிரிண்ட் சென்சாரை கொண்டுள்ளது. மேலும் தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான ஐபி68 + ஐபி69 ரேட்டிங்கையும் பெற்றுள்ளது. இது ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், 4-மைக்ரோஃபோன்கள், யூஎஸ்பி டைப்-சி போர்ட், டால்பி அட்மோஸ் ஆகிய அம்சங்களையும் கொண்டுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
OnePlus 13 price dropped suddenly Reaction to the leaked price of OnePlus 15 coming on October 27
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X