Home
Deal of the day

Amazon-ல அள்ளுது ஆர்டர்! ரூ.12000 விலை குறைப்பு + ரூ.2000 வங்கி தள்ளுப்படி.. 6000mAh பேட்டரி OnePlus 5ஜி போன்!

அமேசான் இந்தியா (Amazon India) வலைத்தளத்தில் நடந்து கொண்டிருக்கும் கிரேட் சம்மர் சேல் 2026 விற்பனையில் (Great Summer Sale 2026) உங்களுடைய முதல் மற்றும் முக்கிய தேடல் - ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்கள் மீதான ஆபர் தான் என்றால்.. நீங்கள் எடுத்ததும் பார்க்க வேண்டியது ஒன்பிளஸ் 13 (OnePlus 13) மாடல் தான்!

ஏனென்றால் அமேசான் இந்தியா வலைத்தளம் ஆனது ஒன்பிளஸ் 13 மீது ரூ.12000 நேரடி தள்ளுபடி / விலை குறைப்பை அறிவித்துள்ளது. கூடவே அமேசான் பே பேலன்ஸ் வழியாக பணம் செலுத்தினால் ரூ.1019 வரை கேஷ்பேக் மற்றும் எச்டிஎப்சி பேங்க் கிரெடிட் கார்டு வழியிலான ரூ.2000 இன்ஸ்டன்ட் டிஸ்கவுண்ட் ஆகிய கூடுதல் சலுகைகளையும் பட்டியலிட்டுள்ளது.

OnePlus: ரூ.12000 விலை குறைப்பு + ரூ.2000 வங்கி தள்ளுப்படி!

ரூ.12000 நேரடி தள்ளுபடியின் விளைவாக, கடந்த ஜனவரி 2025 இல் ரூ.69,999 க்கு அறிமுகமான ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போனின் 12GB ரேம் + 256GB இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷனை ரூ.57,999 க்கு வாங்க முடியும், இது எந்தகிரெடிட் கார்டு, டெபிட் கார்டு, பேங்க் டிஸ்கவுண்ட்டும் இல்லாத நேரடி விலைகுறைப்பாகும்.

கூடுதலாக அமேசான் பே ஆபர் மற்றும் எச்டிஎப்சி பேங்க் ஆபரை பயன்படுத்தினால், தகுதியான வாடிக்கையாளர்களால் ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போனின் ஃபைனல் ஆபர் பிரைஸ்-ஐ இன்னும் கொஞ்சம் குறைக்க முடியும். பழைய ஸ்மார்ட்போனை எக்ஸ்சேன்ஜ் செய்ய விரும்பும் பயனர்கள் ஆர்டர் செய்யும் முன், அதுகுறித்த விவரங்களை செக் செய்ய மறக்க வேண்டாம்.

ஒன்பிளஸ் 13 டிஸ்பிளே: டிஸ்பிளேவை பொறுத்தவரை இது 3168 × 1440 பிக்சல்ஸ் ரெசல்யூஷன், 120 ஹெர்ட்ஸ் வரையிலான ரெஃப்ரெஷ் ரேட், 1600 நிட்ஸ் டிபிக்கல் ப்ரைட்னஸ், 4500 நிட்ஸ் வரையிலான பீக் ப்ரைட்னஸ், 2160 ஹெர்ட்ஸ் ஹை-ஃப்ரெக்வன்சி பிடபுள்யூஎம் டிம்மிங், டால்பி விஷன், கிரிஸ்டல் ஷீல்ட் சூப்பர் செராமிக் கிளாஸ் ப்ரொடெக்ஷன் உடனான 6.82 இன்ச் 2கே பிளஸ் எல்டிபிஓ அமோஎல்இடி பேனலை கொண்டுள்ளது.

ஒன்பிளஸ் 13 சிப்செட்: சிப்செட்டை பொறுத்தவரை ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போன் ஆனது 900மெகாஹெர்ட்ஸ் அட்ரெனோ 830 ஜிபியு உடனான 4.32ஜிகாஹெர்ட்ஸ்ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 எலைட் 4என்எம் மொபைல் பிளாட்ஃபார்ம் ப்ராசஸர் மூலம் இயக்கப்படுகிறது. இது 16ஜிபி வரையிலான எல்பிடிடிஆர்5எக்ஸ் ரேம் மற்றும் 512ஜிபி வரையிலான யுஎப்எஸ் 4.0 இன்டர்னல் ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்டுள்ளது.

ஒன்பிளஸ் 13 ரியர் கேமரா: கேமராக்களை பொறுத்தவரை ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது. அதில் 1/1.4-இன்ச் சோனி எல்ஒய்டி-808 சென்சார், எப்/1.6 அபெர்க்ஷர், ஓஐஎஸ் உடனான 50எம்பி ப்ரைமரி கேமரா + 114° அல்ட்ரா-வைட் கேமராவுடன் 1/1.27-இன்ச் சாம்சங் ஜேஎன்1 சென்சார் உடனான 50எம்பி கேமரா + 3x ஆப்டிகல் ஜூம், 6x இன்-சென்சார் ஜூம், 120x டிஜிட்டல் ஜூம் உடனான 50எம்பி பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ கேமரா உள்ளது

ஒன்பிளஸ் 13 செல்பீ கேமரா, பேட்டரி: முன்பக்கத்தில் சோனி ஐஎம்எக்ஸ்615 சென்சார் கொண்ட 32எம்பி செல்பீ கேமரா உள்ளது. இது எப்/2.4 அபெர்க்ஷர் உடன் வருகிர்து. இதனால் 4கே வரையிலான 30எஃப்பிஎஸ் வீடியோ ரெக்கார்டிங்கை செய்ய முடியும். பேட்டரியை பொறுத்தவரை 100W சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங், 50W வயர்லெஸ் சார்ஜிங், மேக்னட்டிக் சார்ஜிங் சப்போர்ட் உடனான 6000mAh பேட்டரியை கொண்டுள்ளது.

ஒன்பிளஸ் 13-ல் கவனிக்கப்பட வேண்டிய மற்ற அம்சங்கள்: இது இன்-டிஸ்ப்ளே அல்ட்ராசோனிக் பிங்கர் பிரிண்ட் சென்சாரை கொண்டுள்ளது. மேலும் தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான ஐபி68 + ஐபி69 ரேட்டிங்கையும் பெற்றுள்ளது. இது ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், 4-மைக்ரோஃபோன்கள், யூஎஸ்பி டைப்-சி போர்ட், டால்பி அட்மோஸ் ஆகிய அம்சங்களையும் கொண்டுள்ளது.

Best Mobiles in India

English summary
OnePlus 13 gets Rs 12000 Price Cut Selling For Rs 57999 Instead of Rs 69999 in Amazon Summer Sale
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X