Home
Deal of the day

ஆர்டர் அள்ளுது.. ரூ.12000 விலை குறைப்பு.. 100W சார்ஜிங், 6000mAh பேட்டரி OnePlus 5ஜி போன் மீது.. எந்த மாடல்?

இந்தியாவில் ஒன்பிளஸ் 13 (OnePlus 13) ஸ்மார்ட்போனின் விலை கடுமையாக குறைக்கப்பட்டுள்ளது. தற்போது அமேசான் இந்தியா வலைத்தளத்தில் ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போனின் பேஸிக் 12ஜிபி ரேம் + 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.69,999 க்கு பதிலாக ரூ.57,999 க்கு வாங்க கிடைக்கிறது. இது ரூ.12000 நேரடி விலை குறைப்பாகும்.

சீனாவில் ஒன்பிளஸ் 15டி (OnePlus 15) ஆக அறிமுகம் செய்யப்பட்ட மாடல், இந்தியா மற்றும் உலகளாவிய சந்தைகளில் ஒன்பிளஸ் 15எஸ் (OnePlus 15s) ஆக, ஜூன் 2026 இல் அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படும் வேளையில், இந்த விலைக்குறைப்பு வருகிறது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

ரூ.12000 விலை குறைப்பு.. 6000mAh பேட்டரி OnePlus 5ஜி போன் மீது!

ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போனின் விரிவான அம்சங்கள்: டிஸ்பிளேவை பொறுத்தவரை இது 3168 × 1440 பிக்சல்ஸ் ரெசல்யூஷன், 120 ஹெர்ட்ஸ் வரையிலான ரெஃப்ரெஷ் ரேட், 1600 நிட்ஸ் டிபிக்கல் ப்ரைட்னஸ், 4500 நிட்ஸ் வரையிலான பீக் ப்ரைட்னஸ், 2160 ஹெர்ட்ஸ் ஹை-ஃப்ரெக்வன்சி பிடபுள்யூஎம் டிம்மிங், டால்பி விஷன், கிரிஸ்டல் ஷீல்ட் சூப்பர் செராமிக் கிளாஸ் ப்ரொடெக்ஷன் உடனான 6.82 இன்ச் 2கே பிளஸ் எல்டிபிஓ அமோஎல்இடி பேனலை கொண்டுள்ளது.

சிப்செட்டை பொறுத்தவரை ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போன் ஆனது 900மெகாஹெர்ட்ஸ் அட்ரெனோ 830 ஜிபியு உடனான 4.32ஜிகாஹெர்ட்ஸ்ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 எலைட் 4என்எம் மொபைல் பிளாட்ஃபார்ம் ப்ராசஸர் மூலம் இயக்கப்படுகிறது. இது 16ஜிபி வரையிலான எல்பிடிடிஆர்5எக்ஸ் ரேம் மற்றும் 512ஜிபி வரையிலான யுஎப்எஸ் 4.0 இன்டர்னல் ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்டுள்ளது.

கேமராக்களை பொறுத்தவரை ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது. அதில் 1/1.4-இன்ச் சோனி எல்ஒய்டி-808 சென்சார், எப்/1.6 அபெர்க்ஷர், ஓஐஎஸ் உடனான 50எம்பி ப்ரைமரி கேமரா + 114° அல்ட்ரா-வைட் கேமராவுடன் 1/1.27-இன்ச் சாம்சங் ஜேஎன்1 சென்சார் உடனான 50எம்பி கேமரா + 3x ஆப்டிகல் ஜூம், 6x இன்-சென்சார் ஜூம், 120x டிஜிட்டல் ஜூம் உடனான 50எம்பி பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ கேமரா உள்ளது

முன்பக்கத்தில் சோனி ஐஎம்எக்ஸ்615 சென்சார் கொண்ட 32எம்பி செல்பீ கேமரா உள்ளது. இது எப்/2.4 அபெர்க்ஷர் உடன் வருகிர்து. இதனால் 4கே வரையிலான 30எஃப்பிஎஸ் வீடியோ ரெக்கார்டிங்கை செய்ய முடியும். பேட்டரியை பொறுத்தவரை 100W சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங், 50W வயர்லெஸ் சார்ஜிங், மேக்னட்டிக் சார்ஜிங் சப்போர்ட் உடனான 6000mAh பேட்டரியை கொண்டுள்ளது.

சீனாவில் அறிமுகமான ஒன்பிளஸ் 15டி ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்:
- ஆண்ட்ராய்டு 16 அடிப்படையிலான கலர்ஓஎஸ் 16 ஓஎஸ்
- 6.32 இன்ச் ஃபுல்-எச்டி+ (1216 x 2640 பிக்சல்ஸ்) AMOLED டிஸ்பிளே
- குவால்காம் 3என்எம் ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 சிப்செட்
- ஒப்போவின் லூமோ இமேஜிங் இன்ஜின் கொண்ட டூயல் ரியர் கேமரா
- சோனி அல்ட்ரா விஷன் சென்சார் உடன் கூடிய 50-மெகாபிக்சல் (எப்/1.8) ப்ரைமரி கேமரா
- 3.5x ஆப்டிகல் ஜூம் மற்றும் 7x வரை லாஸ்லெஸ் டிஜிட்டல் ஜூம் திறன்களுடன் கூடிய 50-மெகாபிக்சல் (எப்/2.4) பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ
- முன்புறத்தில் 16-மெகாபிக்சல் (எப்/2.4) செல்பீ கேமரா
- 7500mAh கிளேசியர் பேட்டரி
- 100W சூப்பர்வூக் வயர்டு மற்றும் 50W வயர்லெஸ் ஃபாஸ்ட் சார்ஜிங்
- தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான IP66 + IP68 + IP69 + IP69K ரேட்டிங்

சீனாவில் ஒன்பிளஸ் 15டி என்ன விலைக்கு அறிமுகமானது, ஒன்பிளஸ் 15எஸ் இங்கே என்ன விலைக்கு வரலாம்? சீனாவில் ஒன்பிளஸ் 15டி ஸ்மார்ட்போனின் பேஸிக் 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் இந்திய ரூபாய் மதிப்பின்படி சுமார் ரூ.58,000 க்கு அறிமுகம் செய்யப்பட்டது. இந்தியாவிற்கு ரீபிராண்டிங் செய்யப்படும் ஒன்பிளஸ் 15எஸ்-ன் விலை ரூ.58,000 - ரூ.68,000 க்குள் இருக்கலாம்.

Best Mobiles in India

English summary
OnePlus 13 gets Rs 12000 Price Cut in Amazon India Ahead OnePlus 15s Expected Launch in India
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X