Home
Deal of the day

பொசுக்குனு டிஸ்கவுண்ட்.. ரூ.5,250 கட்.. 100W சார்ஜிங்.. 5500mAh பேட்டரி.. AMOLED டிஸ்பிளே.. எந்த மாடல்?

ஒன்பிளஸ் (OnePlus) பிரியர்கள் அடிச்சு புடிச்சு ஆர்டர் போடும்படியான டிஸ்கவுண்ட் விலையில் 100W சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங், 5500mAh பேட்டரி, அமோலெட் டிஸ்பிளே, சோனி ஐஎம்எக்ஸ் சென்சார் மெயின் கேமரா போன்ற பிரீமியம் பீச்சர்களை கொண்ட ஒன்பிளஸ் 12ஆர் (OnePlus 12R) கிடைக்கிறது. இந்த போனின் விலை எப்படி? டிஸ்கவுண்ட் மற்றும் எக்ஸ்சேஞ்ச் போனஸ் எவ்வளவு? முழு பீச்சர்கள் என்ன? உள்ளிட்ட விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

ஒன்பிளஸ் 12ஆர் அமேசான் விற்பனை (OnePlus 12R Amazon Sale): இந்த போனின் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ. 39,999ஆக இருந்தது. ஆனால், இப்போது அமேசான் விற்பனையில் ரூ.37,999 பட்ஜெட்டில் கிடைக்கிறது. இதுபோக ஐசிஐசிஐ பேங்க் கிரெடிட் கார்டுக்கு ரூ.3,250 மதிப்பில் உடனடி டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. ஆகவே, ரூ.34,749 பட்ஜெட்டில் வாங்கி கொள்ளலாம்.

பொசுக்குனு டிஸ்கவுண்ட்.. ரூ.5250 கட்.. 100W சார்ஜ்.. 5500mAh பேட்டரி!

இது ரூ.5,250 விலை குறைப்பில் கிடைப்பதாகும். ஆகவே, இதுவரையில் கிடைக்காத மலிவான விலைக்கு ஆர்டர் செய்து கொள்ளலாம். மேலும், ரூ.34,000 மதிப்பில் எக்ஸ்சேஞ்ச் சலுகை கொடுக்கப்படுகிறது. இந்த மிட்-ரேஞ்ச் விலைக்கு பிரீமியம் பீச்சர்களை கொடுக்கிறது. இப்போது, ஒன்பிளஸ் 12ஆர் போனின் முழு பீச்சர்கள் மற்றும் டிசைன் விவரங்களை தெரிந்து கொள்வோம்.

ஒன்பிளஸ் 12ஆர் அம்சங்கள் (OnePlus 12R Specifications): இந்த போன் அல்ட்ரா பிரீமியம் லுக்கில் கூல் ப்ளூ (Cool Blue) மற்றும் அயர்ன் கிரே (Iron Gray) கலர்களில் கிடைக்கிறது. 8.8 மிமீ தடிமன் மற்றும் 207 கிராம் எடை வருகிறது. ஏனென்றால், பெரிய பேட்டரி மற்றும் அதிகப்படியான சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் இந்த போனில் கிடைக்கிறது. 6.78 இன்ச் (2780 × 1264 பிக்சல்கள்) டிஸ்பிளே உள்ளது.

கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 (Corning Gorilla Glass Victus 2) புரொடெக்சன் இந்த டிஸ்பிளேவுக்கு கிடைக்கிறது. 3டி கர்வ்ட் அமோலெட் (3D Curved AMOLED) டிசைனில் வருகிறது. இந்த பிரீமியம் டிஸ்பிளேவில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 4500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் 360Hz டச் சாம்பிளிங் ரேட் பேக் செய்யப்பட்டுள்ளது. 2160Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி கிடைக்கிறது.

ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 எஸ்ஓசி(Octa Core Snapdragon 8 Gen 2 SoC) சிப்செட் மற்றும் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) கிடைக்கிறது. ஆக்ஸிஜன் ஓஎஸ் 14 (Oxygen OS 14) மற்றும் அட்ரினோ 740 ஜிபியு (Adreno 740 GPU) கிராபிக்ஸ் கார்டு பேக் செய்யப்பட்டுள்ளது. இந்த ஒன்பிளஸ் 12ஆர் போனுக்கு 3 வருடங்களுக்கான ஓஎஸ் அப்டேட் கிடைக்கிறது.

100W சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் (SuperVOOC Fast Charging) மற்றும் டைப்-சி சார்ஜிங் (Type-C Charging) கொண்ட 5500mAh பேட்டரி பேக் செய்துள்ளது. சோனி ஐஎம்எக்ஸ்890 (Sony IMX890) சென்சாருடன் 50 எம்பி மெயின் கேமரா + சோனி ஐஎம்எக்ஸ்355 (Sony IMX355) சென்சாருடன் 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா கிடைக்கிறது. 2 எம்பி மேக்ரோ கேமரா உள்ளது.

இந்த மேக்ரோவில் ஓவி02பி (OV02B) சென்சார் வருகிறது. 16 எம்பி செல்பீ ஷூட்டரிலும் சாம்சங் எஸ்5கே3பி9 (Samsung S5K3P9) சென்சார் வருகிறது. டால்பி அட்மோஸ் (Dolby Atmos) கொண்ட ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) மற்றும் டைப்-சி ஆடியோ (Type-C Audio) கிடைக்கிறது. இன்பிராரெட் சென்சார் (Infrared Sensor), 5ஜி எஸ்ஏ/என்எஸ்ஏ கனெக்டிவிட்டி உள்ளது.

English summary
OnePlus 12R With 50MP Camera Gets 12 Percent Discount in Amazon Sale Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X