ரூ.19000 நேரடி விலை குறைப்பு.. அடிமட்ட விலைக்கு வாங்க கிடைக்கும் OnePlus 5ஜி போன்.. எந்த மாடல்?
9000mAh பேட்டரி, குவால்காமின் ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 6 ப்ரோ சிப்செட் மற்றும் 240ஹெர்ட்ஸ் வரையிலான ரெஃப்ரெஷ் ரேட் டிஸ்பிளே ஆகிய முக்கிய அம்சங்களுடன்.. ரூ.89,999 என்கிற விலைக்கு.. இந்த 2026 ஆம் ஆண்டின் இறுதிக்குள் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது - ஒன்பிளஸ் 16 ஸ்மார்ட்போன்!
அதாவது ஒன்பிளஸ் 15 மாடலின் அறிமுக விலையான ரூ.72,999-ஐ விட, வரவிருக்கும் ஒன்பிளஸ் 16 மாடலின் விலை ரூ.15,000 க்கும் மேலான அதிக விலைக்கு வருமென்று எதிர்பார்க்கப்படுகிறது. சரி இன்னும் பழைய ஒன்பிளஸ் 13 மாடலை வாங்கலாம் என்று பார்த்தால், அதுவும் கூட இன்னமும் ரூ.58,000 பட்ஜெட்டில் தான் (பிளிப்கார்ட்டில்) வாங்க கிடைக்கிறது.

ஆக ரூ.30,000 - ரூ.35,000 பட்ஜெட்டில் ஒன்பிளஸ் பிளாக்ஷிப் ஸ்மார்ட்போனை வாங்க நீங்கள் இன்னும் பின்னோக்கி சென்று, இன்னும் பழைய மாடலை தான் வாங்க வேண்டும். அப்படியாக இப்போதைக்கு உங்களுக்கு இருக்கும் ஒரு நல்ல ஆப்ஷன் - ஒன்பிளஸ் 11 5ஜி ஸ்மார்ட்போன் தான். இது என்ன விலைக்கு அறிமுகமானது? என்ன விலைக்கு வாங்க கிடைக்கிறது? இப்போதும் நம்பி வாங்கலாமா? இதோ விவரங்கள்:
அசல் விலை, ஆபர் விலை: நினைவூட்டும் வண்ணம் ஒன்பிளஸ் 11 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது ரூ.56,999 க்கு அறிமுகம் செய்யப்பட்டது. இது 8GB RAM + 128GB ஸ்டோரேஜ் ஆப்ஷனின் விலை ஆகும். தற்போது இது 33% நேரடி தள்ளுபடி பெற்று.. அதாவது ரூ.19,000 நேரடி விலை குறைப்பை பெற்று ரூ.37,999 க்கு அமேசான் இந்தியா வழியாக வாங்க கிடைக்கிறது.
ஒன்பிளஸ் 11-ன் முக்கிய அம்சங்கள்: இது 6.7-இன்ச் QHD+ E4 2.75D கர்வ்டு OLED LTPO 3.0 டிஸ்பிளே, 5000mAh பேட்டரி மற்றும் 100W பாஸ்ட் சார்ஜிங், ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 சிப்செட், 16ஜிபி வரை ரேம், ஆண்ட்ராய்டு 13 அடிப்படையிலான ஆக்ஸிஜன்ஓஎஸ், 50எம்பி + 48எம்பி+ 32எம்பி ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப், 16எம்பி செல்பீ கேமரா போன்றவைகளை கொண்டுள்ளது.
இதை நம்பி வாங்கலாமா? ஒரு பிளாக்ஷிப் ஸ்மார்ட்போனிற்கு கேமரா மிகவும் முக்கியம். அந்த விஷயத்தில் ஒன்பிளஸ் 11 5ஜி-யில் எந்த குறையும் சொல்ல முடியாது. ஏனென்றால் இது ஹசல்ப்ளாட் (Hasselblad) நிறுவனத்துடன் கூட்டுசேர்ந்து அதன் கேமராக்களை உருவாக்கியுள்ளது.
மேலும் ஒன்பிளஸ் நிறுவனம் அதன் மிகவும் பிரபலமான அலெர்ட் ஸ்லைடர் அம்சத்தை ஒன்பிளஸ் 11 ஸ்மார்ட்போனில் மீண்டும் கொண்டு வந்துள்ளது. நினைவூட்டும் வண்ணம் இது ஒன்பிளஸ் 10 சீரீஸில் காணப்படவில்லை. அறியாதோர்களுக்கு, அலெர்ட் ஸ்லைடர் என்பது ஸ்மார்ட்போனின் பக்கவாட்டில் அமைந்துள்ள ஒரு பிஸிக்கல் ஸ்விட்ச் (Physical Switch) ஆகும்.
இது ஸ்மார்ட்போனை ம்யூட் செய்யவோ, வைப்ரேட்டில் வைக்கவோ அல்லது ஸ்மார்ட்போனை அன்லாக் செய்யாமலேயே ரிங் மோடிற்கு மாற்றவோ, அலாரத்தை அணைக்கவோ, இப்படி பல வேலைகளை மிகவும் எளிமையாக செய்ய அனுமதிக்கும். இதோடு ஒன்பிளஸ் நிறுவனம் இந்த ஸ்மார்ட்போனிற்கு 4 முக்கிய ஆண்ட்ராய்டு அப்டேட்ஸ் மற்றும் 5 வருட செக்யூரிட்டி அப்டேட்ஸ் கிடைக்கும் என்று உறுதி அளித்துள்ளது.
ஒன்பிளஸ் 11 ஸ்மார்ட்போனில் குவால்காமின் லேட்டஸ்ட் 5ஜி சிப்செட் ஆன ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 ப்ராசஸர் உள்ளது. இது 35% வேகமான சிபியு, 25% மேம்படுத்தப்பட்ட ஜிபியு-வை வழங்குகிறது. போதாக்குறைக்கு இந்த ஸ்மார்ட்போன் 16ஜிபி வரையிலான ரேம் உடன் இணைக்கப்பட்டுள்ளது. எனவே மல்டி-டாஸ்கிங் மற்றும் கேமிங்கின் போது எந்த குறையும் இருக்காது. கடைசியாக ஒன்பிளஸ் 11 ஸ்மார்ட்போன் 100W சூப்பர்வூக் பாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கும் 5000mAh பேட்டரியை பேக் செய்கிறது. நிறுவனத்தின் கூற்றுப்படி, வெறும் 25 நிமிடங்களில் 0 - 100% பேட்டரி சார்ஜ் ஆகிவிடும்.


Click it and Unblock the Notifications