இதை விட நல்ல OFFER-ஐ கண்டா வர சொல்லுங்க.. ரூ.35000 தள்ளுபடியில் Nothing 5ஜி போன்.. எந்த மாடல்?
இதைவிட நல்ல ஆபர் இருந்தா சொல்லுங்க பார்ப்போம் என்று கூறும்படியாக, நடந்து கொண்டிருக்கும் அமேசான் கிரேட் சம்மர் சேல் 2026 (Amazon Great Summer Sale 2026) விற்பனையில் நத்திங் (Nothing) நிறுவனத்தின் பிரீமியம் ஸ்மார்ட்போன் ஒன்றின் மீது நேரடியாக ரூ.35000 தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.
அது நத்திங் போன் 3 ஸ்மார்ட்போனாகும். கடந்த 2025 ஆம் ஆண்டு ஜூலை மாதம், ரூ.79,999 க்கு இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த ஸ்மார்ட்போன் தற்போது ரூ.35,000 நேரடி தள்ளுபடி / விலை குறைப்பை பெற்று, அமேசான் வழியாக ரூ.44,999 க்கு வாங்க கிடைக்கிறது. கூடுதலாக ரூ.1250 எச்டிஎப்சி பேங்க் டிஸ்கவுண்ட் மற்றும் அமேசான் பே பேலன்ஸ் வழியாக பணம் செலுத்தினால் ரூ.1349 கேஷ்பேக் ஆகிய கூடுதல் சலுகைகளும் அறிவிக்கப்பட்டுள்ளது.

நத்திங் போன் 3 ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்: டிஸ்பிளேவை பொறுத்தவரை இது 6.67-இன்ச் பிளெக்சிபில் AMOLED பேனலை கொண்டுள்ளது. இந்த டிஸ்பிளே 1.5K ரெசல்யூஷன் , 4500 நிட்ஸ் (HDR) மற்றும் 1600 நிட்ஸ் (HMB) வரையிலான பீக் ப்ரைட்னஸ், 1000 ஹெர்ட்ஸ் டச் சம்ப்ளிங், 2160 ஹெர்ட்ஸ் PWM டிம்மிங், 92.89% ஸ்க்ரீன்-டூ-பாடி ரேஷியோ ஆகிய அம்சங்களையும் கொண்டுள்ளது.
சிப்செட்டை பொறுத்தவரை நத்திங் போன் 3 ஸ்மார்ட்போன் ஆனது மேம்பட்ட 4என்எம் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வடிவமைக்கப்பட்ட ஸ்னாப்டிராகன் 8எஸ் ஜென் 4 சிப்செட்டை கொண்டுள்ளது. இது மேம்படுத்தப்பட்ட பிரைம் செயல்திறன் கொண்ட குவால்காம்-ன் கிரியோ CPU கட்டமைப்பு மற்றும் அதிநவீன குவால்காம் அட்ரினோ ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
பழைய நத்திங் போன் 2 ஸ்மார்ட்போனுடன் ஒப்பிடும்போது இது ஜிபியு, மல்டி டாஸ்கிங், இமேஜ் ப்ராசஸிங் மற்றும் கிராபிக்ஸ் ஹேண்ட்லிங்கில் குறிப்பிடத்தக்க மேம்பாடுகளை வழங்கும். சிபியு சக்தியில் 36% அதிகரிப்பு, 88% ஜிபியு மேம்படுத்தல், ஏஐ தொடர்பான பணி செயலாக்கத்தில் 60% அதிகரிப்பு என.. நத்திங் போன் 3 ஸ்மார்ட்போன் ஆனது மல்டி டாஸ்கிங் முதல் மிக மென்மையான மொபைல் கேமிங் வரை சிரமமில்லாத அனுபவங்களை செயல்படுத்தும்.
கேமராக்களை பொறுத்தவரை நத்திங் போன் 3 ஸ்மார்ட்போனில் ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் உள்ளது. அதில் 50எம்பி ஓஐஎஸ் ப்ரைமரி கேமரா + 50எம்பி ஓஐஎஸ் பெரிஸ்கோப் கேமரா + 50எம்பி அல்ட்ரா-வைட் கேமரா உள்ளது. முன்பக்கத்தில் 50எம்பி செல்பீ கேமரா உள்ளது. இதன் கேமரா செட்டப்பில் ட்ரூலென்ஸ்எஞ்சின் 4 மற்றும் 4கே அல்ட்ரா எக்ஸ்டிஆர் வீடியோ சிஸ்டம் ஆகிய அம்சங்களும் உள்ளன.
பேட்டரியை பொறுத்தவரை நத்திங் போன் 3 ஸ்மார்ட்போனில் இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய 5500mAh சிலிக்கான் கார்பன் செல் பேக் செய்யப்பட்டுள்ளது. இது 65W பாஸ்ட் வயர்டு சார்ஜிங் மூலம், இது வெறும் 54 நிமிடங்களில் முழுமையாக சார்ஜ் ஆகும். கூடவே இது 15W வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவையும் கொண்டுள்ளது.
கவனிக்கப்பட வேண்டிய மற்ற அம்சங்களை பொறுத்தவரை, ஸ்மார்ட்போனின் பின்புறத்தில் ஒரு மைக்ரோ-எல்இடி டிஸ்பிளே உள்ளது. அது கிளிப் மேட்ரிக்ஸ் (Glyph Matrix) என்று அழைக்கப்படுகிறது. இது ஐபி68 ரேட்டிங் உடன் வருகிறது. கடைசியாக ஆண்ட்ராய்டு 15 (Android 15) அடிப்படையிலான நத்திங் ஓஎஸ் 3.5 உடன் 2025 இல் அறிமுகம் செய்யப்பட்டுள்ள நத்திங் போன் 3 ஸ்மார்ட்போனிற்கு 5ஆண்டுகள் முக்கிய ஆண்ட்ராய்டு அப்டேட்கள் மற்றும் 7 ஆண்டுகளுக்கு செக்யூரிட்டி அப்டேட்கள் கிடைக்கும் என்றும் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications