Home
Deal of the day

அப்போ கண்ண மூடிக்கிட்டு வாங்கலாமே.. ரூ.6000 விலை குறைப்பு.. சர்ர்னு இறங்கியது இந்த Nothing 5ஜி போனின் விலை!

நத்திங் நிறுவனத்தின் அடுத்த பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன்களாக நத்திங் போன் 4ஏ சீரீஸ் (Nothing Phone 4a Seires) விரைவில் அறிமுகம் செய்யப்படலாம் என்கிற தகவல் வெளியான வேகத்தில்.. சற்றே பழைய நத்திங் போன் 2ஏ சீரிஸின் பிளஸ் வேரியண்ட் ஆன நத்திங் போன் 2ஏ பிளஸ் (Nothing Phone 2a Plus) மீது விலை குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

பிளிப்கார்ட் வலைத்தளத்தில் நடக்கும் பண்டிகை கால சிறப்பு விற்பனையான பிக் பில்லியன் டேஸ் சேல் 2025-ன் (Flipkart Big Billion Days Sale 2025) ஒரு பகுதியாக நத்திங் போன் 2ஏ பிளஸ் மீது ரூ.6000 நேரடி விலை குறைப்பு (Price Cut) கிடைக்கிறது. நினைவூட்டும் வண்ணம் இந்த ஸ்மார்ட்போனின் பேஸிக் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி ஆப்ஷன் ஆனது ரூ.27,999 க்கு இந்தியாவில் அறிமுகமானது.

சர்ர்னு இறங்கியது இந்த Nothing 5ஜி போனின் விலை!

2024 ஆகஸ்டில் நடந்த முதல் நாள் விற்பனையின் போது மட்டும் இது ரூ.24,999 க்கு வாங்க கிடைத்தது. அதன் பிறகு அசல் விலையான ரூ.27,999 க்கு திரும்பியது. பின்னர் புதிய நத்திங் போன் 3ஏ சீரீஸ் (Nothing Phone 3a Series) அறிமுகமான போது சிறிய விலை குறைப்பை கண்டது. இப்போது ரூ.6000நேரடி விலைகுறைப்பை பெற்று ரூ.21,999 க்கு வாங்க கிடைக்கிறது.

நத்திங் போன் 2ஏ பிளஸ் ஸ்மார்ட்போனின் விரிவான அம்சங்கள்: டிஸ்பிளேவை பொறுத்தவரை, இது 1080 x 2412 பிக்சல்கள், 120 ஹெர்ட்ஸ் வரையிலான ரெப்ரெஷ் ரேட், 394பிபிஐ பிக்சல் டென்சிட்டி மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5ப்ரொடெக்ஷன் உடனான 6.7 இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் அமோஎல்இடி (AMOLED) டிஸ்பிளேவை கொண்டுள்ளது. ப்ராசஸரை பொறுத்தவரை, இது மாலி-ஜி610 எம்சி4 ஜிபியு உடன் இணைக்கப்பட்ட ஆக்டாகோர் 4 என்எம் மீடியாடெக் டைமன்சிட்டி 7350 ப்ரோ 5ஜி சிப்செட்டை பேக் செய்கிறது.

கேமராக்களை பொறுத்தவரை, இது டூயல் ரியர் கேமரா செட்டப்பை (Dual rear camera setup) கொண்டுள்ளது. அதில் 50 மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா (சாம்சங் GN9 1/1.57-இன்ச் சென்சார் எப்/1.88 அபெர்க்ஷர், 10எக்ஸ் டிஜிட்டல் ஜூம் மற்றும் எலக்ட்ரானிக் இமேஜ் ஸ்டேபிலைசேஷன், ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன்) + 50-மெகாபிக்சல் செகண்டரி கேமரா (சாம்சங் JN1 1/2.76-இன்ச் சென்சார், 114 டிகிரி பீல்ட் ஆப் வியூ) உள்ளது. முன்பக்கத்தில் 50 மெகாபிக்சல் சாம்சங் JN1 செல்பீ ஷூட்டர் உள்ளது.

பேட்டரியை பொறுத்தவரை, இது 50W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு (Fast Charging Support) மற்றும் 5W ரிவர்ஸ் வயர்டு சார்ஜிங் ஆதரவு உடனான 5,000mAh பேட்டரியை பேக் செய்கிறது. இதை ஒருமுறை சார்ஜ் செய்தால் 40.6 மணிநேரம் வரை ம்யூசிக் பிளேபேக் டைமை வழங்கும் என்று கூறப்படுகிறது. மேலும், இதன் ஃ பாஸ்ட் சார்ஜிங் அம்சம் 56 நிமிடங்களில் பூஜ்ஜியத்திலிருந்து 100 சதவீதம் வரை பேட்டரியை நிரப்பும் என்றும் கூறப்படுகிறது

கவனிக்கப்பட வேண்டிய மற்ற அம்சங்களை பொறுத்தவரை, 5ஜி, 4ஜி LTE, வைஃபை 6, வைஃபை 6 டைரக்ட், ப்ளூடூத் 5.3, இன்-டிஸ்பிளே பிங்கர் பிரிண்ட் சென்சார், லீனியர் ஹாப்டிக் மோட்டார் (Linear haptic motor), எச்டி மைக்ரோஃபோன்கள் (High-definition microphones), டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Dual stereo speakers), ஐபி54 தூசி மற்றும் நீர்-எதிர்ப்பு கட்டமைப்பு (IP54 rating) போன்றவைகளை கொண்டுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Nothing Phone 2a Plus Get Rs 6000 Price Cut in Flipkart Big Billion Days Sale 2025 Ends October 2
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X