Home
Deal of the day

அமேசான்: பட்ஜெட் விலையில் கிடைக்கும் நோக்கியா ஸ்மார்ட்போன்கள்.! இதோ பட்டியல்.!

எச்எம்டி குளோபல் நிறுவனம் இந்த ஆண்டு பல புதிய 5ஜி ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. குறிப்பாக இந்நிறுவனம் அறிமுகம் செய்யும் ஸ்மார்ட்போன்கள் தனித்துவமான அம்சங்களுடன் வெளிவரும் என்பதால் இந்தியாவில் நல்ல வரவேற்பு உள்ளது என்றுதான் கூறவேண்டும்.

அமேசான்: பட்ஜெட் விலையில் கிடைக்கும் நோக்கியா ஸ்மார்ட்போன்கள்.!

அதேபோல் இந்நிறுவனத்தின் பீச்சர் போன் மாடல்களும் அதிகளவில் விற்பனை செய்ய்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இப்போது அமேசான் தளத்தில் பட்ஜெட் விலையில் கிடைக்கும் ஸ்மார்ட்போன்களின் பட்டியலை சற்று விரிவாகப் பார்ப்போம்.

நோக்கியா சி01 பிளஸ்

நோக்கியா சி01 பிளஸ் ஸ்மார்ட்போன் மாடலை அமேசான் தளத்தில் ரூ.6,799-விலையில் வாங்க முடியும். நோக்கியா சி01 பிளஸ் ஸ்மார்ட்போன் ஆனது 5.45-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது.
பின்பு 1440 x 720 பிக்சல் தீர்மானம், 18:9 என்ற திரைவிகிதம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். நோக்கியா சி01 பிளஸ் ஸ்மார்ட்போனில் மிகவும் எதிர்பார்த்த ஆக்டோ-கோர் Unisoc SC9863a பிராசஸர் வசதி இடம்பெற்றுள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு
கோ எடிஷன் இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. நோக்கியா சி01 பிளஸ் ஸ்மார்ட்போனில் 5எம்பி ரியர் கேமரா மற்றும் 2எம்பி செல்பீ கேமரா ஆதரவும் உள்ளது. மேலும் எல்இடி பிளாஸ்உட்பட பல்வேறு அட்டகாசமான அம்சங்களை கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன் மாடல். நோக்கியா சி01 பிளஸ் ஸ்மார்ட்போன் ஆனது 3000எம்ஏஎச் பேட்டரி ஆதரவைக் கொண்டு வெளிவந்துள்ளது. மேலும் 5 வாட் சார்ஜிங் ஆதரவு, கைரேகை சென்சார் உள்ளிட்ட சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த
புதிய ஸ்மார்ட்போன் மாடல். 4 ஜி வோல்டிஇ, வைஃபை 802.11 பி / ஜி / என், புளூடூத் 4.2, ஜிபிஎஸ், க்ளோனாஸ், டூயல் சிம் மற்றும் மைக்ரோ யுஎஸ்பி போர்ட் மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த நோக்கியா சி01 பிளஸ் ஸ்மார்ட்போன்.

நோக்கியா ஜி10

4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட நோக்கியா ஜி10 ஸ்மார்ட்போன் மாடலை அமேசான் தளத்தில் ரூ.12,116-விலையில் வாங்க முடியும். 6.5-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே, 20:9 என்ற திரைவிகிதம், மீடியாடெக் ஹீலியோ ஜி25 எஸ்ஒசி ப்ராசஸர், இரண்டு வருட சாப்ட்வேர் அப்டேட் உள்ளது, 5050 எம்ஏஎச் பேட்டரி, பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை சென்சார், ப்ளூடூத் 5.0 வைஃபை 802.11 3.5 மிமீ ஹெட்ஜாக், கூகுள் அசிஸ்டென்ட் ஆதரவு உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். மேலும் இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் 13எம்பி மெயின் கேமரா + 2எம்பி மேக்ரோ லென்ஸ் + 2எம்பி டெப்த் சென்சார் என மொத்தம் மூன்று கேமராக்கள் உள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

நோக்கியா ஜி20

4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட நோக்கியா ஜி20 ஸ்மார்ட்போன் மாடலை அமேசான் தளத்தில் ரூ.12,490-விலையில் வாங்க முடியும். நோக்கியா ஜி20 ஸ்மார்ட்போன் ஆனது 6.5-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. மேலும் 1600x720 பிக்சல் தீர்மானம், 20: 9 திரை விகிதம், 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி35 எஸ்ஒசி சிப்செட் வசதி, ஆண்ட்ராய்டு 11 இயங்குதளம், 5050 எம்ஏஎச் பேட்டரி ஆதரவு, 10 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, கைரேகை சென்சார், கூகுள் அசிஸ்டென்ட் பட்டன் என பல்வேறு அசத்தலான அம்சங்களை கொண்டுள்ளது இந்த நோக்கியா ஜி20 ஸ்மார்ட்போன் மாடல். அதேபோல் இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் 48 மெகாபிக்சல் முதன்மை சென்சார் + 5 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் ஷூட்டர் +
2 மெகாபிக்சல் மேக்ரோ ஷூட்டர் + 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார் என மொத்தம் நான்கு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி செல்பீ கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன் மாடல். மேலும் 4ஜி எல்டிஇ, வைஃபை 802.11 பி /ஜி/ என், ப்ளூடூத் வி 5.0, ஜிபிஎஸ்/ஏ-ஜிபிஎஸ், என்எப்சி, எஃப்எம் ரேடியோ, யூ.எஸ்.பி டைப்-சி, 3.5 மிமீ ஹெட்ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது நோக்கியா ஜி20.

நோக்கியா 5.4

6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட நோக்கியா 5.4 ஸ்மார்ட்போனை அமேசான் தளத்தில் ரூ.12,299-விலையில் வாங்க முடியும். நோக்கியா 5.4 ஸ்மார்ட்போன் ஆனது எச்டி பிளஸ் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. மேலும் 1520 x 720 பிக்சல்கள் தீர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு இந்த அசத்தலான நோக்கியா 5.4 ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் இதன் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம். நோக்கியா 5.4 ஸ்மார்ட்போனில்
குவால்காம் ஸ்னாப்டிராகன் 662 சிப்செட் வசதி உள்ளதாக கூறப்படுகிறது. எனவே இந்த சாதனத்தை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். நோக்கியா 5.4 ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி சென்சார் + 5எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2எம்பி மேக்ரோ லென்ஸ் + 2எம்பி டெப்த் சென்சார் என மொத்தம் நான்கு கேமராக்கள் உள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி செல்பீ கேமரா வசதியைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். நோக்கியா 5.4 ஸ்மார்ட்போனில்
4000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் 10 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, கைரேகை சென்சார் வசதி என பல்வேறு சிறப்பான அம்சங்களுடன் இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

English summary
Nokia smartphones available at budget prices on Amazon: Here is the list: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X