சிட்டாக பறக்கும் ஆர்டர்.. ரூ.8748 பட்ஜெட்ல Nokia 5ஜி போன்.. 50எம்பி கேமரா.. 128ஜிபி மெமரி.. எந்த மாடல்?
அமேசான் தளத்தில் நோக்கியா ஜி42 5ஜி (Nokia G42 5G) ஸ்மார்ட்போனுக்கு தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. அதாவது இந்த போன் ஸ்னாப்டிராகன் சிப்செட், 6ஜிபி ரேம், 50எம்பி டரிபிள் ரியர் கேமராக்கள் மற்றும் பல்வேறு சிறப்பான அம்சங்களுடன் இந்த போன் வெளிவந்துள்ளது. இப்போது இந்த போனுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் மற்றும் இதன் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்க்கலாம்.
அமேசான் தளத்தில் நோக்கியா ஜி42 5ஜி ஸ்மார்ட்போனுக்கு 19 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.10,498 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் ரூ.1750 தள்ளுபடியும் கிடைக்கும். எனவே இந்த போனை ரூ.8748 விலையில் வாங்கிவிட முடியும்.

நோக்கியா ஜி42 5ஜி அம்சங்கள் (Nokia G42 5G specifications) : சக்திவாய்ந்த ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 480 பிளஸ் 5ஜி (Snapdragon 480 Plus 5G) சிப்செட் வசதி இந்த நோக்கியா ஜி42 5ஜி போனில் உள்ளது. குறிப்பாக ஆண்ட்ராய்டு 13 இயங்குதளத்தைக் கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்தது. ஆனால் சமீபத்தில் தான் ஆண்ட்ராய்டு 14 அப்டேட் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இந்த ஸ்மார்ட்போனில் மேம்பட்ட புதிய அம்சங்களைப் பயன்படுத்தலாம்.
அட்ரினோ 619 ஜிபியு (Adreno 619 GPU) கிராபிக்ஸ் கார்டு கொண்டுள்ளது இந்த நோக்கியா ஜி42 5ஜி ஸ்மார்ட்போன். எனவே கேமரிங் பயனர்கள் இந்த போனை நம்பி வாங்கலாம். குறிப்பாக இந்த போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது எச்எம்டி குளோபல் நிறுவனம்.
6.56-இன்ச் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளே வசதியுடன் இந்த நோக்கியா ஜி42 5ஜி போன் அறிமுகம் செய்யப்பட்டது . 720 x 1,612 பிக்சல்ஸ், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (90Hz refresh rate), 560 நிட்ஸ் ப்ரைட்னஸ்(560 nits brightness) மற்றும் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு டிஸ்பிளே அம்சங்களைக் கொண்டுள்ளது போன். பெரிய டிஸ்பிளே உடன் இந்த போன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.
அதேபோல் 6ஜிபி ரேம் ( 4ஜிபி ரேம் +2ஜிபி விர்ச்சுவல் ரேம்) + 128ஜிபி மெமரி வசதியைக் கொண்டுள்ளது இந்த நோக்கியா ஜி42 5ஜி மாடல். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இந்த போனில் உள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு வசதி இந்த போனில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
50எம்பி மெயின் கேமரா + 2எம்பி மேக்ரோ கேமரா + 2எம்பி டெப்த் கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் கொண்டுள்ளது நோக்கியா ஜி42 5ஜி ஸ்மார்ட்போன் . மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமரா கொண்டுள்ளது இந்த போன். அதேபோல் இந்த போனின் கேமராவில் நைட் மோட் 2.0 (Night Mode 2.0), ஏஐ போர்ட்ராய்டு (AI Portrait), ஓஇசட்ஓ ஆடியோ கேப்சர் (OZO 3D Audio Capture) உள்ளிட்ட சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளன.

20W சார்ஜிங் மற்றும் 5000mAh பேட்டரி வசதியுடன் வெளிவந்துள்ளது நோக்கியா ஜி42 5ஜி போன் . இந்த பேட்டரியை ஒரு முறை சார்ஜ் செய்த 3 நாட்கள் பேட்டரி பேக்கப் கிடைக்கும். மேலும் சைடு மவுண்டெட் பிங்கர் பிரிண்ட் சென்சார்(Side-mounted fingerprint sensor), 3.5 மிமீ ஆடியோ ஜாக் (3.5mm audio jack) உள்ளிட்ட வசதிகள் இதில் உள்ளன.
IP52 தர டஸ்ட் மற்றும் ப்ளாஷ் ரெசிஸ்டன்ட் (Dust And Splash Resistant) கொண்டுள்ளது இந்த போன். மேலும் இந்த போனில் ப்ளூடூத் 5.1 (Bluetooth 5.1), வை-பை 802 (Wi - Fi 802), ஜிபிஎஸ் (GPS) மற்றும் டைப் - சி 2.0 (Type-C 2.0) ஆகிய கனெக்டிவிட்டி அம்சங்கள் இதில் உள்ளன.


Click it and Unblock the Notifications