Home
Deal of the day

கண்ணா நான் NOKIA டா.. வெறும் ரூ.1800 க்கு 1 மாத பேட்டரி லைஃப், 32GB மெமரி, 2000 போன் நம்பர், இலவச ஹெட்போன்ஸ்!

ரூ.2000 க்குள் என்கிற பட்ஜெட்டில்.. இன்னும் சரியாக சொல்லப்போனால் ரூ.1800 க்கு ஒரு நல்ல நோக்கியா (NOKIA) ஃபீச்சர் மொபைல் போனை வாங்க வேண்டும் என்கிற தேடலில் அல்லது யோசனையில் உள்ளவர்கள், அப்படியே அமேசான் இந்தியா (Amazon India) வலைத்தளத்திற்குள் செல்லவும்.

ஏனென்றால் பிரத்யேக ம்யூசிக் பட்டன்கள் உடனான பவர்ஃபுல் லவுட்ஸ்பீக்கர், 1 மாத காலத்திற்கான ஸ்டேண்ட்பை பேட்டரி லைஃப், எஸ்டி கார்டு வழியாக 32ஜிபி வரையிலான இன்டர்னல் மெமரிக்கான ஆதரவு, ரீடெயில் பாக்ஸில் இலவச ஹெட்போன்ஸ் உட்பட பல தரமான அம்சங்களை கொண்ட ஒரு நோக்கியா மாடல், அமேசான் இந்தியா வலைதளத்தில் வெறும் ரூ.1,814 க்கு வாங்க கிடைக்கிறது.

ரூ.1800 க்கு 1 மாத பேட்டரி லைஃப், 32GB மெமரி, இலவச ஹெட்போன்ஸ்!

அது நோக்கியா 130 மியூசிக் 2023 (Nokia 130 Music 2023) மாடலாகும். நோக்கியா பிராண்டட் மொபைல் போன்களை தயாரிக்கும் உரிமத்தை பெற்ற பின்னர் எச்எம்டி குளோபல் நிறுவனமானது நோக்கியா 130 மியூசிக் மாடலின் அப்கிரேடட் வெர்ஷனை வெளியிட்டு இருந்தது. இதன் கீழ் நோக்கியா 130 மியூசிக் மாடலின் பேட்டரி மேம்படுத்தப்பட்டு, நீண்ட கால பேட்டரி லைஃப்பை வழங்கும்படி மாற்றியமைக்கப்பட்டது.

எச்எம்டி குளோபல் நிறுவனத்தின் கூற்றுப்படி நோக்கியா 130 மியூசிக் ஆனது 1 மாத காலத்திற்கான ஸ்டேண்ட்பை பேட்டரி லைஃப் வழங்கும் மற்றும் இதில் சக்திவாய்ந்த லவுட்ஸ்பீக்கரும் உள்ளது. மேலும் இந்த மாடலுக்கு 1 வருட ரீப்ளேஸ்மென்ட் உத்திரவாதமும் அளிக்கப்பட்டுள்ளது.

நோக்கியா 130 ம்யூசிக் மொபைலின் விரிவான அம்சங்கள்: டிஸ்பிளேவை பொறுத்தவரை இது 2.4 இன்ச் க்யூவிஜிஏ டிஸ்பிளேவை கொண்டுள்ளது. மேலும் இது டேக்டிக் கீபேடீ உடன் வருகிறது. பேட்டரியை பொறுத்தவரை இது 1450mAh பேட்டரியை கொண்டுள்ளது. இது 2017 ஆம் ஆண்டில் அறிமுகமமாக நோக்கியா 130 மாடலில் உள்ள 1020mAh பேட்டரியை விட மிகப்பெரிய பேட்டரி ஆகும்.

நோக்கியா 130 மியூசிக் மொபைல் ஆனது 32ஜிபி வரையிலான மைக்ரோ எஸ்டி கார்டுகளை ஆதரிக்கிறது மற்றும் எம்பி3 பிளேயருடன் வருகிறது. இதில் உள்ள எஃப்எம் ரேடியோ ஆனது வயர்டு மற்றும் வயர்லெஸ் ஆகிய இரண்டு ஆதரவுகளையும் வழங்குகிறது.

இந்த மாடலில் மைக்ரோ யூஎஸ்பி (அதாவது யூஎஸ்பி 1.1) போர்ட் மற்றும் 3.5மிமீ ஆடியோ ஜாக் உள்ளது. எச்எம்டி க்ளோபல் நிறுவனத்தின் கூற்றுப்படி, நோக்கியா 130 ம்யூசிக் ஆனது 2000 காண்டாக்ட்ஸ் மற்றும் 500 எஸ்எம்எஸ் வரையிலான சேமிப்பிடத்தை கொண்டுள்ளது மற்றும் இந்த மொபைல் போனின் ரீடெயில் பாக்ஸில் இலவச வயர்டு ஹெட்ஃபோன்ஸும் இருக்கும்

அமேசான் வலைத்தளத்தில் தற்போது நோக்கியா 130 ம்யூசிக் ஃபீச்சர் மொபைல் போன் ஆனது டார்க் ப்ளூ, பர்பிள் ஆகிய இரண்டு கலர்களில் வாங்க கிடைக்கிறது. ஒருவேளை உங்களுக்கு இன்னும் பெட்டர் ஆன நோக்கியா மொபைல் போன் வேண்டுமென்றால், அதாவது 4ஜி ஆதரவு, யுபிஐ வசதி உள்ளிட்ட சற்றே அட்வான்ஸ்டு அம்சங்களை கொண்ட நோக்கியா மொபைல் வேண்டுமென்றால்.. நீங்கள் நோக்கியா 3210 4ஜி (Nokia 3210 4G ) மாடலை வாங்கலாம்

ஒரிஜினல் நோக்கியா 3210 மொபைல் அறிமுகம் செய்யப்பட்டு, 25 வது ஆண்டு நிறைவை குறிக்கும் நோக்கத்தின் கீழ் கடந்த ஜூன் மாதம் அறிமுகமான இந்த நோக்கியா மாடலானது தற்போது அமேசான் இந்தியா வலைதளத்தில் ரூ.3,599 க்கு வாங்க கிடைக்கிறது.

இது 4ஜி ஆதரவு, யுபிஐ வசதி, யூட்யூப்க்கான அணுகல், 1450எம்ஏஎச் பேட்டரி, 2 மெகாபிக்சல் ரியர் கேமரா, யுனிசாக் டி107 சிப்செட், எஃப்எம் ஸ்ட்ரீமிங், டூயல் சிம் ஆதரவு, 2.4-இன்ச் அளவிலான க்யூவிஜிஏ டிஸ்பிளே, 128எம்பி ரேம் மற்றும் 64எம்பி ஸ்டோரேஜ், மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் வழியாக 32ஜிபி விரிவாக்கம் ஆகிய முக்கிய அம்சங்களை கொண்டுள்ளது.

மேலும் ரியர் எல்இடி ப்ளாஷ் உடனான 2 மெகாபிக்சல் ரியர் கேமரா, நோக்கியாவின் கிளாசிக் ஸ்னேக் கேம், யுபிஐ மற்றும் யூட்யூப் ஆப்களை தவிர்த்து வானிலை, செய்திகள், கிரிக்கெட் ஸ்கோர் உள்ளிட்ட ஆப்ஸ், ப்ளூடூத் 5.0 ஆதரவு, வயர்டு மற்றும் வயர்லெஸ் ஆதரவு உடனான எப்எம் ரேடியோ, எம்பி3 பிளேயர், 3.5மிமீ ஹெட்ஃபோன் ஜாக், யூஎஸ்பி டைப்-சிபோர்ட் மற்றும் 1450mAh பேட்டரி ஆகியவைகளையும் கொண்டுள்ளது.

English summary
Nokia 130 Music 2023 with Upgraded 1450mAh Battery Selling At Price Rs 1814 in Amazon
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X