அமேசான்: பட்ஜெட் விலையில் கிடைக்கும் புதிய ஸ்மார்ட்போன்கள்.! இதோ பட்டியல்.!
பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன்களுக்கு இந்தியாவில் நல்ல வரவேற்பு உள்ளது என்றுதான் கூறவேண்டும். குறிப்பாக ரெட்மி, ஒப்போ, விவோ நிறுவனங்கள் பட்ஜெட் விலையில் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய அதிக ஆர்வம் காட்டுகின்றன என்றுதான் கூறவேண்டும்.

குறிப்பாக ரெட்மி நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்களுக்கு இந்தியாவில் நல்ல வரவேற்பு உள்ளது என்றுதான் கூறவேண்டும். இப்போது அமேசான் தளத்தில் பட்ஜெட் விலையில் கிடைக்கும் புதிய ஸ்மார்ட்போன்களின் பட்டியலைப் பார்ப்போம்.
ரெட்மி நோட் 11
4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட ரெட்மி நோட் 11 ஸ்மார்ட்போனை அமேசான் தளத்தில் ரூ.13,499-விலையில் வாங்க முடியும். ரெட்மி நோட் 11 ஸ்மார்ட்போன் ஆனது 6.43-இன்ச் எஃப்எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. மேலும் 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், ஸ்னாப்டிராகன் 680 பிராசஸர், MIUI 13 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளம், 5000 எம்ஏஎச் பேட்டரி, 33 வாட் பாஸ்ட் சார்ஜிங் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது ரெட்மி நோட் 11. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் 50எம்பி பிரைமரி லென்ஸ் + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2எம்பி மேக்ரோலென்ஸ் + 2எம்பி போர்ட்ரெயிட் லென்ஸ் என மொத்தம் நான்கு கேமராக்கள் உள்ளன. அதேபோல் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 13எம்பி கேமரா இவற்றுள் அடக்கம்.
4ஜி எல்இடி, டூயல்-பேண்ட் வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட், புளூடூத் 5.0 உள்ளிட்ட பல இணைப்பு ஆதரவுகள் இதில் உள்ளன. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் எடை 195 கிராம் என்று கூறப்படுகிறது.
விவோ Y21T
4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட விவோ லு21வு ஸ்மார்ட்போனை அமேசான் தளத்தில் ரூ.16,490-விலையில் வாங்க முடியும். இந்த புதிய Vivo Y21T ஆனது Funtouch OS 12 உடன் Android 11 இல் இயங்குகிறது. இது 6.58 இன்ச் HD+ (720x1,600 பிக்சல்கள்) டிஸ்ப்ளே கொண்டுள்ளது. ஹூட்டின் கீழ், தொலைபேசியில் ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 680 சிப்செட் உடன் 4ஜிபி ரேம் உடன் இணைக்கப்பட்டுள்ளது. Vivo Y21T மூன்று பின்புற கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது, இதில் f/1.8 லென்ஸுடன் 50 மெகாபிக்சல் முதன்மை சென்சார் உள்ளது, மேலும் f/2.4 மேக்ரோ லென்ஸுடன் 2 மெகாபிக்சல் இரண்டாம் நிலை சென்சார் மற்றும் 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார் உள்ளது.Vivo Y21T ஆனது f/1.8 லென்ஸுடன் 16 மெகாபிக்சல் செல்ஃபி கேமராவுடன் வருகிறது.ஸ்மார்ட்போனில் 128GB உள் சேமிப்புஉள்ளது. கூடுதல் ஸ்டோரேஜ் வசதிக்காக இது ஒரு பிரத்தியேக ஸ்லாட் வழியாக 1TB வரை விரிவாக்கத்தை ஆதரிக்கிறது. Vivo Y21T இல் உள்ள இணைப்பு விருப்பங்களில் 4G LTE, Wi-Fi, Bluetooth v5, GPS/ A-GPS, FM ரேடியோ, USB டைப்-C மற்றும் 3.5mm ஹெட்ஃபோன் ஜாக் ஆகியவை அடங்கும். பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை ஸ்கேனரும் உள்ளது. Vivo Y21T ஆனது 18W ஃபாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கும் 5,000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது.
சாம்சங் கேலக்ஸி ஏ03எஸ்
4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட சாம்சங் கேலக்ஸி ஏ03எஸ் ஸ்மார்ட்போன் மாடலை அமேசான் தளத்தில் ரூ.11,999-விலையில் வாங்க முடியும். சாம்சங் கேலக்ஸி ஏ03எஸ் ஸ்மார்ட்போன் ஆனது 6.5-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 720×1600 பிக்சல்தீர்மானம், 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 20:9 என்ற திரைவிகிதம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான கேலக்ஸி ஏ03எஸ் ஸ்மார்ட்போன். சாம்சங் கேலக்ஸி ஏ03எஸ் ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது. கேலக்ஸி ஏ03எஸ் ஸ்மார்ட்போனின் பின்புறம் 13எம்பி பிரைமரி சென்சார் + 2எம்பி மேக்ரோ சென்சார் + 2எம்பி டெப்த் சென்சார் என மொத்தம் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 5எம்பி செல்பீ கேமரா ஆதரவுடன்இந்த சாதனம் வெளிவந்துள்ளது. கேலக்ஸி ஏ03எஸ் ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் 15 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, கைரேகை ஸ்கேனர் உள்ளிட்ட சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த கேலக்ஸி ஏ03எஸ் ஸ்மார்ட்போன்மாடல். டூயல்-சிம், 4ஜி, டூயல் பேண்ட் வைஃபை, ப்ளூடூத் 5.0, ஜிபிஎஸ், ஏ-ஜிபிஎஸ், பீடோ, க்ளோனாஸ், யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் மற்றும் 3.5 மிமீ ஹெட்போன் ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான சாம்சங் கேலக்ஸி ஏ03எஸ் ஸ்மார்ட்போன் மாடல்.
ஒப்போ ஏ31
6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி கொண்ட ஒப்போ ஏ31 ஸ்மார்ட்போனை அமேசான் தளத்தில் ரூ.12,990-விலையில் வாங்க முடியும். ஒப்போ ஏ31 ஸ்மார்ட்போன் மாடலில் 6.5-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பு இடம்பெற்றுள்ளது. பின்பு 720x1,600 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் வெளிவந்துள்ளது. மேலும் இந்தசாதனத்தில் கைரேகை சென்சார் வசதி இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் 12எம்பி main சென்சார் + 2எம்பி மேக்ரோ
சென்சார் +2எம்பி டெப்த் சென்சார் என மூன்றுகேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளன, மேலும் 8எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம்என பல்வேறு வசதிகள் இவற்றுள் அடக்கம். இந்த ஒப்போ ஸ்மார்ட்போனில் 2.3ஜிகாஹெர்ட்ஸ் மீடியாடெக் 6765 ஆக்டோ-கோர் பிராசஸர் வசதியைக் கொண்டுள்ளது. ஒப்போ ஏ31 சாதனத்தில் 4230எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது, மேலும் 4ஜி எல்டிஇ, வைஃபை, புளூடூத் 5.0, மைக்ரோ யுஎஸ்பி போர்ட் மற்றும் 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட
பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.


Click it and Unblock the Notifications