அதே ஆபர் விலை.. ஆர்டர் தூள் பறக்குது.. ரூ.12000 பட்ஜெட்டில் 5000mAh பேட்டரி உடன் பக்காவான Samsung 5ஜி போன்!
தீபாவளி பண்டிகை காலத்தை குறிவைத்து கடந்த அக்.10 ஆம் தேதி அன்று இந்தியாவில் அறிமுகமான சாம்சங் நிறுவனத்தின் ஒரு புதிய 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது தீபாவளி பண்டிகை முடிந்தும் கூட, இன்னமும் அதே ஆபர் விலையில் வாங்க கிடைக்கிறது. என்ன மாடல்? என்ன விலை? என்னென்ன அம்சங்கள்? இதோ விவரங்கள்:
என்ன மாடல்? அது சாம்சங் கேலக்ஸி எம்17 5ஜி (Samsung Galaxy M17 5G) ஸ்மார்ட்போன் ஆகும். முன்னதாக அறிமுகமாகி விற்பனையில் சக்கைபோடு போட்ட சாம்சங் கேலக்ஸி எம்16 5ஜி (Samsung Galaxy M16 5G) மாடலை தொடர்ந்து இது இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

என்ன விலை? சாம்சங் கேலக்ஸி எம்17 5ஜி ஸ்மார்ட்போனின் 4 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷனின் அசல் அறிமுக விலை ரூ.16,499 ஆகும். இருப்பினும் அறிமுகமான நேரத்தில் நடந்த தீபாவளி பண்டிகை கால சலுகையின் ஒரு பகுதியாக, அமேசான் இந்தியா வழியாக கிடைக்கும் கூப்பன் சலுகைக்கு பிறகு இந்த ஸ்மார்ட்போன் ரூ.12,499 க்கு வாங்க கிடைத்தது.
இப்போது சிறப்பு விற்பனை முடிந்த பின்னரும் கூட அதே ஆபர் விலைக்கு வாங்க கிடைக்கிறது. அமேசான் இந்தியா வலைதளத்தில் இந்த ஸ்மார்ட்போன் மூன்லைட் சிலபேர் (Moonlight Silver) மற்றும் சபையர் பிளாக் (Sapphire Black) என்கிற 2 கலர் ஆப்ஷன்களில் வாங்க கிடைக்கிறது. ஆர்வமுள்ள வாடிக்கையாளர்கள் முந்திக்கொள்ளவும்.
சாம்சங் கேலக்ஸி எம்17 5ஜி ஸ்மார்ட்போனின் விரிவான அம்சங்கள்: டிஸ்பிளேவை பொறுத்தவரை இது FHD+ ரெசல்யூஷன் (1,080 x 2,340 பிக்சல்ஸ்) மற்றும் 90Hz ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.7-இன்ச் சூப்பர் அமோஎல்இடி டிஸ்பிளேவை (Super AMOLED Display) கொண்டுள்ளது. இதன் டிஸ்பிளேவில் கொரில்லா கிளாஸ் விக்டஸ் ப்ரொடெக்ஷனும் (Gorilla Glass Victus Protection) உள்ளது!
சிப்செட்டை பொறுத்தவரை சாம்சங் கேலக்ஸி எம்17 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 5 என்எம் எக்ஸினோஸ் 1330 சிப்செட் (5nm Exynos 1330 Chipset) மூலம் இயக்கப்படுகிறது. இது 4 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்டு உள்ளது.
கேமராக்களை பொறுத்தவரை சாம்சங் கேலக்ஸி எம்17 5ஜி மாடலில் ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் (Triple Rear Camera Setup) உள்ளது. அதி ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (Optical Image Stabilization - OIS) ஆதரவுடன் 50 எம்பி ப்ரைமரி சென்சார் + 5 எம்பி அல்ட்ரா வைட் ஷூட்டர் + 2 எம்பி மேக்ரோ லென்ஸ் உள்ளன. முன்பக்கத்தில் செல்பீக்கள் மற்றும் வீடியோ கால்களுக்காக 13 எம்பி செல்பீ கேமரா உள்ளது.
பேட்டரியை பொறுத்தவரை சாம்சங் கேலக்ஸி எம்17 5ஜி ஸ்மார்ட்போனில் 25W பாஸ்ட் வயர்டு சார்ஜிங்கை (25W Fast Wired Charging) ஆதரிக்கும் 5,000mAh பேட்டரி உள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் ரீடெயில் பாக்சில் (Retail Box) சார்ஜர் இருக்காது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. 7.5 மிமீ ஸ்லிம் டிசைன் உடன் வரும் இந்த ஸ்மார்ட்போன் தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான ஐபி54 ரேட்டிங்கையும் (IP54 Rating) கொண்டுள்ளது.
கடைசியாக சாம்சங் கேலக்ஸி எம்17 5ஜி ஸ்மார்ட்போனானது ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) அடிப்படையிலான ஒன் யுஐ 7 (One UI 7) ஓஎஸ் கொண்டு இயக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனிற்கு ஆறு வருட ஓஎஸ் அப்டேட் (OS Updates) மற்றும் செக்யூரிட்டி அப்டேட் (Security Updates) கிடைக்கும் என்றும் வாக்குறுதி அளிக்கப்பட்டு உள்ளது.


Click it and Unblock the Notifications








