Home
Deal of the day

அமேசானில் தடாலடி ஆர்டர்.. 1 மாதம் ஆகாத புது Redmi 5ஜி போன் மீது டிஸ்கவுண்ட்.. 7540mAh பேட்டரி, 100W சார்ஜிங்!

கடந்த ஜூன் மாதம் 16 ஆம் தேதி, ரெட்மி நிறுவனத்தின் லேட்டஸ்ட் 5ஜி ஸ்மார்ட்போன் ஆகவும், இந்திய சந்தைக்கு வந்த முதல் ரெட்மி டர்போ சீரீஸ் ஸ்மார்ட்போன்கவும் ஆகவும் அறிமுகமான ரெட்மி டர்போ 5 (Redmi Turbo 5) மாடல் ஆனது தற்போது அமேசான் இந்தியா வலைதளத்தில் ஆபர் விலையில் வாங்க கிடைக்கிறது.

தற்போது அமேசான் இந்தியா வலைத்தளத்தில் நடக்கும் ப்ரைம் டே விற்பனையின் (Amazon Prime Day Sale) ஒரு பகுதியாக, அறிமுகம் ஆகி முழுதாக 1 மாதம் கூட ஆகாத ரெட்மி டர்போ 5 மாடல் மீது ரூ.2000 கூப்பன் தள்ளுபடி கிடைக்கிறது.

புது Redmi 5ஜி போன் மீது டிஸ்கவுண்ட்.. 7540mAh பேட்டரி, 100W சார்ஜிங்!

இந்த கூப்பன் தள்ளுபடியின் (Coupon Discount) வழியாக ரெட்மி டர்போ 5 ஸ்மார்ட்போனின் பேஸிக் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷனின் விலையை, அதன் அசல் அறிமுக விலையான ரூ.37,999 இல் இருந்து ரூ.35,999 ஆக குறைக்க முடியும்.

இதேபோல ஹை-எண்ட் பேஸிக் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷனின் விலையை ரூ.40,999 இல் இருந்து ரூ.38,999 ஆகவும் குறைக்க முடியும். அமேசானில் இந்த ஸ்மார்ட்போன் Asphalt Black, Nitro Blue மற்றும் Turbo White ஆகிய 3 கலர்களில் வாங்க கிடைக்கிறது.

ரெட்மி டர்போ 5 ஸ்மார்ட்போனின் விரிவான அம்சங்கள்:
- 6.59-இன்ச் 1.5கே (1,268 × 2,756 பிக்சல்கள்) 12-பிட் அமோஎல்இடி டிஸ்பிளே
- 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 460 பிபிஐ பிக்சல் டென்சிட்டி, 3500 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ், 68.7 பில்லியன் கலர்ஸ், 2,560Hz இன்ஸ்டன்ட் டச் சாம்ப்ளிங் ரேட், 480Hz டச் சாம்ப்ளிங் ரேட், 3,840Hz PWM டிம்மிங், கார்னிங் கொரில்லா கிளாஸ் 7ஐ ப்ரொடெக்ஷன் மற்றும் டால்பி விஷன் (Dolby Vision)

- ஆக்டா-கோர் மீடியாடெக் டிமென்சிட்டி 8500 அல்ட்ரா சிப்செட்
- ARM மாலி-G720 MC8 GPU
- LPDDR5x அல்ட்ரா ரேம் மற்றும் UFS 4.1 இன்-பில்ட் ஸ்டோரேஜ்
- ஹீட் மேனேஜ்மென்ட்டிற்கான 5300 சதுர மிமீ வெப்பச் சிதறல் பரப்பளவைக் கொண்ட 3டி ஐஸ்-லூப் கூலிங் (3D Ice-Loop Cooling) சிஸ்டம்

- டூயல் ரியர் கேமரா செட்டப்
- 50 மெகாபிக்சல் (f/1.5) சென்சார் (Sony IMX882) பிரைமரி கேமரா
- இது ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) மற்றும் எலக்ட்ரானிக் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (EIS) ஆகியவைகளை கொண்டுள்ளது
- 8 மெகாபிக்சல் (f/2.2) அல்ட்ரா-வைட் கேமரா
- 20 மெகாபிக்சல் (f/2.2) செல்பீ கேமரா
- 4K/60 fps தரத்தில் வீடியோ ரெக்கார்டிங்
- கேமரா லென்ஸ்களை சுற்றி 'Redmi Pixel Matrix' அம்சம்

- 7,540mAh பேட்டரி
- USB Type-C போர்ட் வழியாக 100W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 27W வயர்டு ரிவர்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங்
- தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்காக இது IP66, IP68, IP69 மற்றும் IP69K ரேட்டிங்
- டூயல் சிம் (dual SIM) ஆதரவு
- ஆண்ட்ராய்டு 16 (Android 16) ஓஎஸ் அடிப்படையிலான ஹைப்பர்ஓஎஸ்3 (HyperOS 3)
- நான்கு வருட ஓஎஸ் அப்டேட்கள் மற்றும் ஆறு வருட செக்யூரிட்டி அப்டேட்கள்

ரெட்மி டர்போ 5 ஸ்மார்ட்போனில் உள்ள நிறைகள்:
- மிகச்சிறந்த நீடித்துழைப்புடன் கூடிய உயர்தர கட்டமைப்பு
- பிரகாசமான டிஸ்பிளே
- சிறந்த கேமிங் மற்றும் ஒட்டுமொத்த செயல்திறன்
- மிகப்பெரிய பேட்டரி மற்றும் நல்ல பாஸ்ட் சார்ஜிங்.

ரெட்மி டர்போ 5 ஸ்மார்ட்போனில் உள்ள கவனிக்கத்தக்க குறைகள்:
- அதிகப்படியான ப்ரீ-இன்ஸ்டால்டு ஆப்கள்
- ஹீட் மேனேஜ்மென்ட்டில் மேம்பாடு தேவை.

Best Mobiles in India

English summary
New Redmi Turbo 5 With 7540mAh Battery 5G Phone gets Discount in Amazon Prime Day Sale
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X