ஸ்டாக் காலி ஆகிட்டே இருக்கு.. அவ்ளோ ஆர்டர்.. Amazon-ல் இந்த Redmi 5G போன் மீது ரூ.10,000 டிஸ்கவுண்ட்!
ஷாவ்மீ (Xiaomi) நிறுவனத்திடம் இருந்து மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ரெட்மி நோட் 14 சீரிஸ் (Redmi Note 14 Series) வருகிற டிசம்பர் 9 ஆம் தேதியன்று இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ள, ரெட்மி நோட் 13 ப்ரோ 5ஜி (Redmi Note 13 Pro 5G) ஸ்மார்ட்போன் மீது ரூ.10000 வரையிலான தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது அமேசான் இந்தியா (Amazon India) வலைதளத்தில், ரெட்மி நோட் 13 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனின் பேஸிக் 8ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ஆனது 21% நேரடி தள்ளுபடியை பெற்று, அசல் விலையான ரூ.28,999 க்கு பதிலாக ரூ.22,999 க்கு வாங்க கிடைக்கிறது. அதாவது ரூ.6000 மலிவான விலைக்கு வாங்க கிடைக்கிறது.

கூடவே ரூ.4000 பேங்க் இன்ஸ்டன்ட் டிஸ்கவுண்ட் ஆஃபரும் கிடைக்கிறது. இப்படியாக ரெட்மி நோட் 13 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் மொத்தம் ரூ.10,000 தள்ளுபடி விலையின் கீழ் விற்பனை செய்யப்படுகிறது. இதே ஸ்மார்ட்போனின் 8ஜிபி ரேம் + 256ஜிபி ஆப்ஷன் 19% தள்ளுபடியை பெற்று ரூ.30,999-க்கு பதிலாக ரூ.24,999-க்கும், 12ஜிபி ரேம் + 256ஜிபி 21% தள்ளுபடியை பெற்று ரூ 32,999-க்கு பதிலாக ரூ.25,999-க்கும் வாங்க கிடைக்கிறது.
ரெட்மி நோட் 13 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்களை பொறுத்தவரை இது 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.67-இன்ச் 1.5கே கர்வ்டு அமோலெட் டிஸ்பிளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 2 சிப்செட், ட்ரிபிள் ரியர் கேமரா யூனிட், ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) உடனான 200எம்பி மெயின் கேமரா, 16எம்பி செல்பீ கேமரா, 67W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 5,100mAh பேட்டரி ஆகியவைகளை கொண்டுள்ளது.
முன்னரே குறிப்பிட்டபடி ரெட்மி நோட் 14 சீரீஸ் ஆனது வருகிற டிசம்பர் 9 ஆம் தேதியன்று இந்தியாவில் அறிமுகம் செய்யப்படவுள்ளது. இதன் கீழ் ரெட்மி நோட் 14 (Redmi Note 14), ரெட்மி நோட் 14 ப்ரோ (Redmi Note 14 Pro) மற்றும் ரெட்மி நோட் 14 ப்ரோ பிளஸ் (Redmi Note 14 Pro Plus) என மொத்தம் 3 மாடல்கள் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
ரெட்மி நோட் 14 சீரீஸின் இந்திய விலை நிர்ணயம் எப்படி இருக்கும்? பேஸிக் வேரியண்ட் ஆன ரெட்மி நோட் 14 மடலின் விலை ரூ.12,990 முதல் தொடங்கலாம். அடுத்ததாக உள்ள ப்ரோ வேரியண்ட் ஆன ரெட்மி நோட் 14 ப்ரோ மாடலின் விலை ரூ.16,990 முதல் தொடங்கலாம். கடைசியாக உள்ள ப்ரோ பிளஸ் வேரியண்ட் ஆன ரெட்மி நோட் 14 ப்ரோ பிளஸ் வேரியண்ட் ஆனது ரூ.22,990 முதல் அறிமுகம் செய்யப்படலாம்.
ரெட்மி நோட் 14 சீரிஸில் என்னென்ன முக்கிய அம்சங்கள் இடம்பெறும்? ரெட்மி நோட் 14 சீரீஸின் அனைத்து மாடல்களுமே 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.67-இன்ச் ஓஎல்இடி டிஸ்பிளேவை கொண்டிருக்கும். வெண்ணிலா, ப்ரோ மற்றும் ப்ரோ பிளஸ் ஆகியவைகள் முறையே மீடியாடெக் டைமென்சிட்டி 7025 அல்ட்ரா, ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 3 மற்றும் டைமன்சிட்டி 7300 அல்ட்ரா சிப்செட்களால் இயக்கப்படும்.
கேமராக்களை பொறுத்தவரை ப்ரோ மற்றும் ப்ரோ பிளஸ் ஆகிய இரண்டுமே ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பை கொண்டிருக்கும். ஆனால் ப்ரோ பிளஸ் வேரியண்ட் ஆனது 50எம்பி போர்ட்ரெய்ட் டெலிஃபோட்டோ கேமராவுடன் வரும்; ப்ரோ வேரியண்ட் ஆனது 2எம்பி மேக்ரோ கேமராவுடன் வரும். இதேபோல ப்ரோ பிளஸ் ஆனது 90W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 6,200mAh பேட்டரியையும், ரோ மாடல் 44W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு உடனான 5,500mAh பேட்டரியையும் கொண்டிருக்கும்.


Click it and Unblock the Notifications