ஆளுக்கு 4 அள்ளி போடுங்க.. Amazon-ல் வெறும் ரூ.949 க்கு லேட்டஸ்ட் HMD மொபைல்.. 4ஜி, UPI வசதி, YouTube இருக்கு!
நோக்கியா (NOKIA) பிராண்டிங்கின் கீழ் மொபைல் போன்களை தயாரிப்பதாக உள்ளே நுழைந்து, உரிமம் வாங்கிய எச்எம்டி க்ளோபல் (HMD Global) நிறுவனமானது, தற்போது தனது சொந்த பிராண்டிங்கின் கீழ் 4வது ஸ்மார்ட்போனை கூடிய விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யவுள்ளது. அது எச்எம்டி ஃப்யூஷன் (HMD Fusion) ஸ்மார்ட்போனாகும்.
ஸ்மார்ட்போன்கள் ஒருபக்கம் இருக்க எச்எம்டி நிறுவனமானது சொந்த பிராண்டிங்கின் கீழ் ஃபீச்சர் போன்களையும் அறிமுகம் செய்துள்ளது. அவைகளில் கடந்த செப்டம்பர் மாதம் அறிமுகமான எச்எம்டி 105 4ஜி (HMD 105 4G) மற்றும் எச்எம்டி 110 4ஜி (HMD 110 4G) ஆகிய 2 மாடல்களும் பழைய நோக்கியா மாடல்களுக்கு இணையான வரவேற்பை பெற்றன.

ஏனென்றால் இவ்விரு மாடல்களுமே.. மிகவும் மலிவான விலையில் 4ஜி ஆதரவு, கிளவுட் போன் ஆப் (Cloud Phone App) மூலம் யூட்யூப் (YouTube), யூட்யூப் மியூசிக் (YouTube Music) மற்றும் யூட்யூப் ஷார்ட்ஸ் (YouTube Shorts) ஆகியவற்றிற்கான ஆதரவு, இண்டர்நெட் அணுகல் இல்லாவிட்டாலும் கூட ப்ரீ-லோட் செய்யப்பட்ட ஆப் (Pre-loaded app) வழியிலான யுபிஐ பரிவர்த்தனைக்கான (UPI transaction) ஆதரவு போன்றவைகளை கொண்டுள்ளன.
தற்போது இவ்விரு மாடல்களுமே அமேசான் இந்தியா (Amazon India) வலைத்தளம் வழியாக தள்ளுபடி விலைகளின் கீழ் வாங்க கிடைக்கின்றன. எச்எம்டி 105 4ஜி மாடல் ஆனது 37% தள்ளுபடியை பெற்று அசல் விலையான ரூ.1,499 க்கு பதிலாக ரூ.949 க்கு வாங்க கிடைக்கிறது. மறுகையில் உள்ள எச்எம்டி 110 4ஜி மாடல் ஆனது 18% தள்ளுபடியை பெற்று அசல் விலையான ரூ.2,799 க்கு பதிலாக ரூ.2,299 க்கு வாங்க கிடைக்கிறது.
எச்எம்டி 105 4ஜி மற்றும் எச்எம்டி 110 4ஜி ஃபீச்சர் போன்களின் முக்கிய அம்சங்களை பொறுத்தவரை, இரண்டுமே 1450எம்ஏஎச் பேட்டரி, எம்பி3 பிளேயர், வயர்லெஸ் எஃப்எம் ரேடியோ, ஃபோன் டால்க்கர், எஸ்டி கார்டு வழியாக 32ஜிபி வரையிலான ஸ்டோரேஜ், 13 மொழிகளுக்கான இன்புட் மற்றும் 23 மொழிகளுக்கான ரெண்டரிங் ஆதரவை கொண்டுள்ளன.
டிசைனை பொறுத்தவரை, எச்எம்டி 105 4ஜி மற்றும் எச்எம்டி 110 4ஜி ஆகிய இரண்டுமே "வழக்கமான" கேண்டி பார் ஸ்டைல் டிசைனுடன் வட்டமான எட்ஜ்ளுடன் வருகின்றன. கலர் ஆப்ஷன்களை பொறுத்தவரை எச்எம்டி 105 4ஜி மாடலானது பிளாக், சியான் மற்றும் பிங்க் கலர்களிலும், எச்எம்டி 110 4ஜி மாடலானது டைட்டானியம் மற்றும் ப்ளூ கலர்களிலும் வருகிறது
எச்எம்டி நிறுவனத்தின் நான்காவது ஸ்மார்ட்போனாக அறிமுகமாகும் எச்எம்டி ஃப்யூஷன் ஸ்மார்ட்போன் ஆனது, முன்னதாக அறிமுகமான எச்எம்டி க்ரெஸ்ட் 5ஜி (HMD Crest 5G), எச்எம்டி கிரெஸ்ட் மேக்ஸ் 5ஜி (HMD Crest Max 5G) மற்றும் எச்எம்டி ஸ்கைலைன் (HMD Skyline) ஆகிய 3 மாடல்களுடன் இணையும். மேற்கண்ட 3 மாடல்களும் முறையே ரூ.14,499, ரூ16,498 மற்றும் ரூ.35,999 க்கு வாங்க கிடைக்கின்றன.
புதிய எச்எம்டி ஃப்யூஷன் ஸ்மார்ட்போனின் விலையை பொறுத்தவரை, இந்தியாவில் இது ரூ.23,499 க்கு அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முக்கிய அம்சங்களை பொருத்தவரை இது 90ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.5-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளேவை கொண்டிருக்கும். சிப்செட்டை பொறுத்தவரை இது 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்ட ஸ்னாப்டிராகன் 4 ஜென் 2 சிப்செட் மூலம் இயக்கப்படும்.
கேமராக்களை பொறுத்தவரை இது 108எம்பி ப்ரைமரி கேமரா + 2எம்பி இரண்டாம் நிலை சென்சார் என்கிற டூயல் ரியர் கேமரா செட்டப்பை பேக் செய்யும். பேட்டரியை பொறுத்தவரை 33W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 5,000mAh பேட்டரியை கொண்டிருக்கும். மேலும் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் உடன் வரும் இந்த ஸ்மார்ட்போனிற்கு2 வருட சாஃப்ட்வேர் அப்டேட்கள் கிடைக்கும் என்றும் உறுதி செய்யப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications