அமேசான்: பட்ஜெட் விலையில் கிடைக்கும் மோட்டோ ஸ்மார்ட்போன்கள்.! இதோ பட்டியல்.!
மோட்டோரோலா நிறுவனம் கடந்த சில மாதங்களில் அதிகமான ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது என்றுதான் கூறவேண்டும். குறிப்பாக இந்நிறுவனம் அறிமுகம் செய்யும் அனைத்து ஸ்மார்ட்போன்களுக்கும் இந்தியாவில் நல்ல வரவேற்பு உள்ளது.

அதேபோல் மோட்டோரோலா நிறுவனம் இந்த ஆண்டு அதிகமான 5ஜி ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இப்போது அமேசான் தளத்தில் பட்ஜெட் விலையில் கிடைக்கும் மோட்டோ ஸ்மார்ட்போன்களின் பட்டியலைப் பார்ப்போம்.
மோட்டோரோலா ஜி10 பவர்
4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட மோட்டோரோலா ஜி10 பவர் ஸ்மார்ட்போனை அமேசான் தளத்தில் ரூ.12,499-விலையில் வாங்க முடியும். 6.5-இன்ச் மேக்ஸ் விஷன் எச்டி பிளஸ் டிஸ்பிளே, 60Hz refresh rate, 4ஜிபி ரேம்,
64ஜிபி மெமரி, ஆண்ட்ராய்டு 11 இயங்குதளம், 6000 எம்ஏஎச் பேட்டரி, 20 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, 4ஜி, டூயல் பேண்ட் வைஃபை, என்எப்சி, ஜபிஎஸ்,புளூடூத் 5.0 3.5எம்எம் ஆடியோ ஜாக் யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த மோட்டோரோலா ஜி10 பவர் ஸ்மார்ட்போன். மேலும் இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி சென்சார் + 8எம்பி வைடு ஆங்கிள் லென்ஸ் + 2எம்பி மேக்ரோ லென்ஸ் + 2எம்பி டெப்த் சென்சார் என மொத்தம் நான்கு கேமராக்கள் உள்ளன. பின்பு செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவைக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மோட்டோ ஜி30
4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட மோட்டோ ஜி30 ஸ்மார்ட்போன் மாடலை அமேசான் தளத்தில் ரூ.13,990-ஆக உள்ளது. 6.5' இன்ச் 1600 x 720 பிக்சல்கள் கொண்ட எச்டி பிளஸ் ஐபிஎஸ் டிஸ்பிளே, 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி ஸ்டோரேஜ், மைக்ரோ எஸ்.டி கார்டு ஆதரவு, ஸ்னாப்டிராகன் 662 சிப்செட் எனப் பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த மோட்டோ ஜி30 ஸ்மார்ட்போன் மாடல். அதேபோல் இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் 64 எம்பி பிரைமரி கேமரா + 8 எம்பி அல்ட்ராவைடு ஆங்கிள் சென்சார் + 2 எம்பி மேக்ரோ சென்சார் + 2 எம்பி டெப்த் சென்சார் என மொத்தம் நான்கு கேமராக்கள் உள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால்
அழைப்புகளுக்கும் என்றே 13எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன். 4 ஜி, வைஃபை, புளூடூத் 5.0, என்எப்சி, ஜிபிஎஸ், 3.5 ஆடியோ ஜாக், யூ.எஸ்.பி டைப்-சி போர்ட், 20W வேகமான சார்ஜிங் ஆதரவு, 5,000 எம்ஏஎச் பேட்டரி போன்ற பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த மோட்டோ ஜி30 மாடல்.
மோட்டோ இ7 பவர்
4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட மோட்டோ இ7 பவர் ஸ்மார்ட்போனை அமேசான் தளத்தில் ரூ.9,940-விலையில் வாங்க முடியும். மோட்டோ இ7 பவர் சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கையில், இது 6.5 இன்ச் எச்டி ப்ளஸ் மேக்ஸ் விஷன் வாட்டர் டிராப் ஸ்டைல் நாட்ச் டிஸ்ப்ளே, 1600x720 பிக்சல்கள் தீர்மானம் தெளிவுத்திறன், மீடியாடெக் ஹீலியோ ஜி25 சிப்செட், 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு வரும் எனவும் கூறப்படுகிறது. இதில் 1டிபி வரை விரிவாக்கக்கூடிய மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் வசதி இருக்கிறது. கேமரா அம்சத்தை பொறுத்தவரை இதில் இரட்டை கேமரா அமைப்பு இருக்கிறது. முன்பக்கத்தில் 13 மெகாபிக்சல் பிரதான
கேமரா, 2 மெகாபிக்சல் இரண்டாம் நிலை கேமரா ஆகியவை இருக்கிறது. எல்இடி பிளாஷ் உடன் முன்பக்கத்தில் 5 மெகாபிக்சல் செல்பி கேமரா இருக்கிறது. இதில் 1டிபி வரை விரிவாக்கக்கூடிய மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் வசதி இருக்கிறது. கேமரா அம்சத்தை பொறுத்தவரை இதில் இரட்டை கேமரா அமைப்பு இருக்கிறது. முன்பக்கத்தில் 13 மெகாபிக்சல் பிரதான கேமரா, 2 மெகாபிக்சல் இரண்டாம் நிலை கேமரா ஆகியவை இருக்கிறது. எல்இடி பிளாஷ் உடன் முன்பக்கத்தில் 5 மெகாபிக்சல் செல்பி கேமரா இருக்கிறது
மோட்டோரோலா 9 பவர்
4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி வசதி கொண்ட மோட்டோரோலா 9 பவர் ஸ்மார்ட்போனை அமேசான் தளத்தில் ரூ.12,890-விலையில் வாங்க முடியும். மோட்டோரோலா ஜி9 பவர் 6.78 இன்ச் எச்டி ப்ளஸ் (720x1,640பிக்சல்கள்) ஐபிஎஸ் டிஸ்ப்ளேவுடன் வருகிறது. இது குவால்காம் ஸ்னாப்டிராகன் 662 எஸ்ஓசி செயலி மூலம் இயக்கப்படுகிறது. 4 ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி சேமிப்பு வசதியோடு இந்த ஸ்மார்ட்போன் வருகிறது. 512 ஜிபி வரை மெமரி விரிவாக்க வசதிக்கு மைக்ரோ எஸ்டி கார்ட் ஸ்லாட் இருக்கிறது. மோட்டோரோலா ஜி 9 பவர் ஸ்மார்ட்போனில் 64 மெகாபிக்சல் முதன்மை சென்சார், 2 மெகாபிக்சல் மேக்ரோ சென்சார், 2 மெகாபிக்சல் ஆழ சென்சார் என மூன்று கேமரா இருக்கிறது. ஸ்மார்ட்போன் முன்புறத்தில் 16 மெகாபிக்சல் செல்பி கேமரா பொருத்தப்பட்டுள்ளது. மோட்டோரோலா ஜி 9 பவர் ஸ்மார்ட்போனில் 6000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இதில் 20 வாட்ஸ்
ஃபாஸ்ட் சார்ஜிங் அம்சம் இருக்கிறது. இதன் பேட்டரி ஆயுள் 60 மணிநேரம் வரை இருக்கும். இணைப்பு ஆதரவுகளாக வைஃபை, ப்ளூடூத் வி5, யூஎஸ்பி டைப்சி போர்ட் ஆகியவை அடங்கும். அதேபோல் தற்போது இந்தியாவில் 5ஜி ஸ்மார்ட்போன்களுக்கு இந்தியாவில் நல்ல வரவேற்பு உள்ளது. எனவே இந்நிறுவனம் 5ஜி ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்வதில் அதிக கவனம் செலுத்துகிறது.


Click it and Unblock the Notifications