தங்கத்த தூக்கிட்டு வாங்க பா.. IP69 ரேட்டிங்.. 68W சார்ஜிங்.. ஆஃபரில் Motorola 5ஜி போன்.. எந்த மாடல்?
அமேசான் தளத்தில் மோட்டோரோலா எட்ஜ் 60 ஃப்யூஷன் 5ஜி (Motorola Edge 60 FUSION 5G) ஸ்மார்ட்போன் ஆனது தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கிறது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் அட்டகாசமான வடிவமைப்பு மற்றும் தரமான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. இப்போது அமேசானில் இந்த போனுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் மற்றும் இதன் அம்சங்களைப் பார்க்கலாம்.
தற்போது அமேசான் தளத்தில் 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி கொண்ட மோட்டோரோலா எட்ஜ் 60 ஃப்யூஷன் 5ஜி ஸ்மார்ட்போனுக்கு 20 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.20,850 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை இஎம்ஐ முறையில் வாங்கினால் ரூ.1500 தள்ளுபடியும் உள்ளது. ஆகவே இந்த போனை ரூ.19350 விலையில் வாங்கிவிட முடியும்.

மோட்டோரோலா எட்ஜ் 60 ஃப்யூஷன் 5ஜி அம்சங்கள் (Motorola Edge 60 FUSION 5G Specifications): 50 எம்பி மெயின் கேமரா + 13 எம்பி அல்ட்ரா வைடு கேமரா ஆகிய ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது மோட்டோரோலா எட்ஜ் 60 ஃப்யூஷன் 5ஜி. செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமரா உள்ளது. இதுதவிர பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன. எனவே இந்த ஸ்மார்ட்போன் மூலம் அசத்தலான படங்களை எடுக்க முடியும்.
தரமான ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7400 4என்எம்(Octa Core MediaTek Dimensity 7400 4nm) சிப்செட் வசதியுடன் இந்த மோட்டோரோலா எட்ஜ் 60 ஃப்யூஷன் 5ஜி வெளிவந்தது மேலும் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) மூலம் இந்த போன் இயங்குகிறது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.
குறிப்பாக 6.7 இன்ச் குவாட் கர்வ்ட் பிஓஎல்இடி (Quad Cueved pOLED) டிஸ்பிளே வசதியுடன் இந்த போன் வெளிவந்துள்ளது. மேலும் 2712 x 1220 பிக்சல்கள், 4500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 360 ஹெர்ட்ஸ் டச் சாம்பிளிங் ரேட், 446 பிபிஐ பிக்சல் டென்சிட்டி உள்ளிட்ட பல அம்சங்கள் இதன் டிஸ்பிளேவில் உள்ளன. குறிப்பாக இந்த போனின் டிஸ்பிளே சிறந்த திரை அனுபவத்தைக் கொடுக்கும்.
அதுவும் IP69 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) உடன் இந்த மோட்டோரோலா ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது. குறிப்பாக இந்த போனின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது. பின்பு MIL-STD-810H இராணுவ தர சான்றிதழ் பெற்றுள்ளது மோட்டோரோலா எட்ஜ் 60 ஃப்யூஷன் 5ஜி ஸ்மார்ட்போன்.

அதேபோல் டால்பி அட்மாஸ் ஆடியோவுடன் கூடிய ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் இந்த ஸ்மார்ட்போனில் உள்ளன. மேலும் யூ.எஸ்.பி-சி ஆடியோ, ஹைப்ரிட் டூயல் சிம், 5 ஜி, வைஃபை 6, புளூடூத் 5.4 , என்.எஃப்.சி உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த ஸ்மார்ட்போனில் உள்ளன.
இந்த மோட்டோரோலா எட்ஜ் 60 ஃப்யூஷன் 5ஜி போன் 5500mAh பேட்டரி வசதியுடன் வெளிவந்துள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் கொடுக்கும். இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 68W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. ஆகவே இந்த போனை வேகமாக சார்ஜ் செய்துவிட முடியும்.


Click it and Unblock the Notifications








