ரூ.10,000 முதல் 5G போன் வாங்கலாமா? இந்த ஆஃப்பரை கவனிக்காம போய்டாதீங்க.! பீல் பண்ணுவீங்க.!
இந்தியாவில் இந்த மாத துவக்கத்தில் 5ஜி நெட்வொர்க் (5G Network) அறிமுகம் செய்யப்பட்டதில் இருந்து, மக்கள் அனைவரும் 5ஜி ஸ்மார்ட்போன்களை (5G Smartphones) பற்றித் தான் அதிகம் இணையத்தில் சர்ச் செய்கிறார்கள். புதுசா 5ஜி போன் வாங்க வேண்டும் என்று அனைவரும் திட்டமிடுகிறார்கள்.
ஆனால், 5ஜி டிவைஸ்களின் விலையைப் பார்த்ததும் அப்படியே சிலர் பேக் அடித்துவிடுகிறோம்.! உண்மையைச் சொல்லப் போனால், விலையைப் பார்த்த பின்பும் 5ஜி ஸ்மார்ட்போன் வாங்க வேண்டும் என்ற எண்ணம் தான் நம்முள் தொடர்கிறது.

இது பண்டிகை கால சீசன் (Festival Season) என்பதனால், புது 5ஜி ஸ்மார்ட்போனை ரூ.10,000 முதல் வாங்கிட நமக்கு ஒரு லக்கி சான்ஸ் கிடைத்துள்ளது. ஆம், சரியாக தான் படித்தீர்கள், ரூ.10,000 முதல் புது பிராண்டட் 5G Smartphones சாதனத்தை வாங்க வாய்ப்பு அமைந்துள்ளது.
சரி, இப்போது எந்த டிவைஸ் என்ன விலையில், எவ்வளவு கூடுதல் சலுகையுடன் கிடைக்கிறது. இதை எப்படி எபக்ட்டிவ் விலையில் (Effective Price Offers) வாங்கலாம் என்று பார்க்கலாம்.
1. Samsung Galaxy M13 5G
கம்மி விலையில் 5ஜி நெட்வொர்க் சேவையுடன் இயங்கும் ஸ்மார்ட்போனை வாங்க நினைத்தால், கண்டிப்பாக நீங்கள் இந்த Samsung Galaxy M13 5G ஸ்மார்ட்போனை தான் வாங்க வேண்டும். இப்போது, சந்தையில் கிடைக்கும் மிகவும் மலிவான பிராண்டட் 5ஜி ஸ்மார்ட்போன் மாடல் இது மட்டுமே. இதன் அசல் விலை ரூ. 16,999 ஆகும். இன்றைய சலுகையில் இதை வெறும் ரூ. 11,999 விலையில் வாங்கலாம். எபக்ட்டிவ் சலுகையாக இந்த டிவைஸை நீங்கள் வெறும் ரூ. 10,799 விலையில் வாங்கலாம். எபக்டிவ் சலுகை என்பது வங்கி வழங்கும் சலுகைகள் மற்றும் பிற சலுகைகளை உள்ளடக்கியது.
2. Redmi 11 Prime 5G
லேட்டஸ்ட் 5ஜி நெட்வொர்க்கில் இயங்கும் பெஸ்டான பட்ஜெட் பிரைஸ் ஸ்மார்ட்போன் மாடல் இதுவாகும். இந்த Redmi 11 Prime 5G ஸ்மார்ட்போனின் அசல் விலை ரூ. 15,999 ஆகும். சலுகையுடன் இப்போது இதை நீங்கள் ரூ. 12,999 விலையில் வாங்கலாம். எபக்ட்டிவ் சலுகை விலையாக இந்த டிவைஸை ரூ. 10,999 என்ற விலையில் இன்னும் குறைவாக வாங்கலாம். இது வங்கி சலுகைகளுடன் உள்ளடக்கியது.
3. iQOO Z6 Lite 5G
தரமான டிஸ்பிளே உடன் பட்ஜெட் விலையில் ஒரு புதிய 5ஜி ஸ்மார்ட்போனை நீங்கள் வாங்க விரும்பினால், இந்த iQOO Z6 Lite 5G மாடலை தாராளமாக வாங்கலாம். இப்போது இதன் சலுகை விலை ரூ. 13,999 ஆகும். வங்கி மற்றும் பிற சலுகைகள் சேர்த்து, எபக்டிவ் சலுகையாக இந்த டிவைஸை நீங்கள் வெறும் ரூ. 11,999 என்ற விலையில் வாங்கலாம். இதன் அசல் விலை ரூ. 15,999 ஆகும்.
4. realme narzo 50 5G
சக்தி வாய்ந்த சிப்செட் உடன் தரமான கேமரா அம்சத்தை எதிர்பார்க்கும் வாடிக்கையாளர்களுக்கு இந்த realme narzo 50 5G போன் ஒரு அற்புதமான சாய்ஸ். இதன் அசல் விலை ரூ. 18,999 என்றாலும் கூட, இன்றைய சலுகையின் மூலம் இதை வெறும் ரூ. 15,999 விலையில் வாங்கக் கிடைக்கிறது. வங்கி சலுகைகளை சேர்த்து, எபக்டிவ் சலுகையாக இந்த போனை நீங்கள் இப்போது வெறும் ரூ. 13,749 என்ற பெஸ்ட் பிரைஸில் வாங்கலாம்.
5. realme Narzo 50 Pro 5G
சூப்பர் AMOLED மற்றும் FPS 5G அம்சத்துடன் பட்ஜெட் விலையில் கிடைக்கும் ஒரே ஸ்மார்ட்போன் மாடல் இதுவாகும். உங்களுடைய பட்ஜெட் 15 ஆயிரத்திற்குள் இருக்கிறது என்றால், வாங்க சிறந்த பெஸ்ட் 5ஜி போன் இதுவாக தான் இருக்கும். இதன் அசல் விலை ரூ. 25,999 ஆகும். ஆனால், இன்றைய சலுகையை பயன்படுத்திக்கொண்டால், இதை நீங்கள் வெறும் ரூ. 17,999 விலைக்கு வாங்கலாம். கூடுதல் வங்கி சலுகையுடன் சேர்த்து, எபக்ட்டிக் சலுகை விலையாக ரூ. 14,999 என்ற விலையில் வாங்கக் கிடைக்கிறது.
6. Redmi Note 11T 5G
நீங்கள் எதிர்பார்க்கும் அணைத்து பெஸ்டான அம்சங்களையும் இந்த Redmi Note 11T 5G ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது. சிறந்த டிஸ்பிளே, சிப்செட், கேமரா, பாஸ்ட் சார்ஜிங், பேட்டரி என்ற எல்லாமே இதில் பெஸ்டாக அமைந்துள்ளது. தீபாவளி தமாக்க விற்பனையின் ஒரு பகுதியாக இந்த டிவைஸை வெறும் ரூ. 15,999 விலைக்கு வாங்க முடியும். இதன் அசல் விலை ரூ.20,999 ஆகும். வங்கி சலுகைகள் சேர்த்து, இப்போது இதை ரூ. 13,999 என்ற எபக்டிவ் விலையில் நீங்கள் வாங்கலாம்.
அடுத்த ஆண்டு முதல் இந்திய சந்தைக்குள் புதிதாக அறிமுகம் செய்யப்படும் ஸ்மார்ட்போன்களில் 5ஜி மற்றும் 4ஜி இணக்கம் மட்டுமே கொண்டிருக்க வேண்டும் என்று மொபைல் தயாரிப்பாளர் நிறுவனங்களுக்கு இந்திய அரசு புதிய ஆணையை உத்தரவிட்டுள்ளது. அடுத்த தலைமுறை நெட்வொர்க்கிற்கு மக்களை அழைத்துச் செல்ல இந்தியா குறைந்த விலையில் 5ஜி போன்களை அறிமுகம் செய்ய நிறுவனங்களைத் தூண்டுகிறது.


Click it and Unblock the Notifications