Home
Deal of the day

அமேசான் சிறப்பு சலுகை: ஸ்மார்ட்போன்களை வாங்க சரியான நேரம்.! உடனே முந்துங்கள்.!

பண்டிகை காலம் என்பதால் அமேசான் தளத்தில் சிறப்பு சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு சலுகை கண்டிப்பாக பல்வேறு மக்களுக்கு பயனுள்ள வகையில் இருக்கும் என்றுதான் கூறவேண்டும். அதன்படி லேப்டாப், ஸ்மார்ட்போன், ஸ்மார்ட்டிவி, டேப்லெட் உள்ளிட்ட பல சாதனங்களுக்கு விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

அமேசான் சிறப்பு சலுகை: ஸ்மார்ட்போன்களை வாங்க சரியான நேரம்.!

அதேபோல் ஸ்மார்ட்போன்களை வாங்க இதுதான் சரியான நேரம். அதாவது அமேசான் தளத்தில் அதிகமான ஸ்மார்ட்போன்களுக்கு விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இப்போது விலைகுறைக்கப்பட்ட அந்த ஸ்மார்ட்போன்களின் பட்டியலைப் பார்ப்போம்.

மி 10ஐ 5ஜி ஸ்மார்ட்போன்

சியோமி மி 10ஐ 5ஜி ஸ்மார்ட்போனுக்கு விலைகுறைப்ப அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த ஸ்மார்ட்போனின் அசல் விலை ரூ.24,999-ஆக உள்ளது. ஆனால் அமேசான் தளத்தில் அறிவிக்கப்பட்ட சலுகையின் மூலம் இந்த ஸ்மார்ட்போனை ரூ.21,999-விலையில் வாங்க முடியும். இந்த ஸ்மார்ட்போன் 6.67' இன்ச் 1080 x 2400 பிக்சல்கள் கொண்ட முழு எச்டி பிளஸ் உடன் கூடிய HDR மற்றும் HDR10 + டிஸ்பிளே
வசதியுடன் வெளிவந்துள்ளது. மேலும் 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதம், கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு, குவால்காம் ஸ்னாப்டிராகன் 750 ஜி சிப்செட், 4820mAh பேட்டரி,33W வேகமான சார்ஜிங் ஆதரவு உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் 108எம்பி மெயின் கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 2எம்பி டெப்த் சென்சார் + 2எம்பி மேக்ரோ சென்சார் என மொத்தம் நான்கு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி செல்பீ கேமராவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

ரெட்மி நோட் 10டி 5ஜி

ரெட்மி நோட் 10டி 5ஜி ஸ்மார்ட்போனுக்கு அமேசான் தளத்தில் விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த ஸ்மார்ட்போனின் அசல் விலை ரூ.18,999-ஆக உள்ளது. ஆனால் அமேசான தளத்தில் அறிவிக்கப்பட்ட சலுகையின் மூலம் இந்த ஸ்மார்ட்போனை ரூ.16,999-விலையில் வாங்க முடியும். ரெட்மி நோட் 10டி 5ஜி ஸ்மார்ட்போன் மாடல் 6.5-இன்ச் எல்சிடி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது.
பின்பு 2400 x 1080 பிக்சல்கள் தீர்மானம்,Reading Mode 3.0, 1500: 1 கான்ட்ராஸ்ட் ரேஷியோ, கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு மீடியாடெக் Dimensity 700 சிப்செட் வசதி, 5000 எம்ஏஎச் பேட்டரி உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது
இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். மேலும் பின்புறம் 48எம்பி பிரைமரி சென்சார் + 2எம்பி டெப்த் சென்சார் + 2எம்பி மேக்ரோ லென்ஸ் என மொத்தம் மூன்று கேமராக்கள் உள்ளன. பின்பு 8எம்பி செல்பீ கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது இந்த ரெட்மி நோட் 10டி 5ஜி.

சாம்சங் கேலக்ஸி எம்31

சாம்சங் கேலக்ஸி எம்31 ஸ்மார்ட்போனின் அசல் விலை ரூ.21,999-என்று கூறப்படுகிறது. ஆனால் அமேசான் தளத்தில் இப்போது அறிவிக்கப்பட்டசலுகையின் மூலம் ரூ.15,999-விலையில் வாங்க முடியும். இந்த கேலக்ஸி எம்31 ஸ்மார்ட்போன் ஆனது 6.4-இன்ச் டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளது. பின்பு 2340 x 1080 பிக்சல் தீர்மானம், ஆக்டோ-கோர் எக்ஸிநோஸ் 9611 சிப்செட், 6000 எம்ஏஎச் பேட்டரி, பாஸ்ட் சார்ஜிங் வசதி என பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த கேலக்ஸி எம்31 ஸ்மார்ட்போன் மாடல். இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் 64எம்பி பிரைமரி சென்சார் + 8எம்பி செகன்டரி சென்சார் + 5எம்பி டெப்த் சென்சார் + 5எம்பி டெப்த் சென்சார் என மொத்தம் நான்கு கேமராக்கள் உள்ளன். அதேபோல் 32எம்பி செல்பீ கேமரா ஆதரவுடன் வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

ரெட்மி 9 ஆக்டிவ்

ரெட்மி 9 ஆக்டிவ் ஸ்மார்ட்போனின் அசல் விலை ரூ.9,499-ஆக உளளது. ஆனால் அமேசான் தளத்தில் அறிவிக்கப்பட்ட விலைகுறைப்பின் மூலம் இந்த ஸ்மார்ட்போனை ரூ.8,499-விலையில் வாங்க முடியும். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் சிறந்த தொழில்நுட்ப வசதியுடன் வெளிவந்துள்ளது. அதாவது 6.53-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே, 720x1600 பிக்சல் தீர்மானம், 20:9 என்ற திரைவிகிதம், 5000 எம்ஏஎச் பேட்டரி, 10 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி, ஆக்டோ-கோர் ஹீலியோ ஜி35 சிப்செட் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த ரெட்மி 9 ஆக்டிவ் ஸ்மார்ட்போன். மேலும் இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் 13எம்பி + 2எம்பி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 5எம்பி செல்பீ கேமரா ஆதரவை கொண்டுள்ளது இந்த
அட்டகாசமான ஸ்மார்ட்போன்.

English summary
Mid Range and Budget Smartphones Get Up to 35% Offer at Amazon!: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X