அமேசான் சிறப்பு விற்பனை: குறைந்த விலையில் வாங்க கிடைக்கும் ஸ்மார்ட்போன்கள்.!
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பல்வேறு ஆன்லைன் தளங்களில் சிறப்பு சலுகைகள் வழங்கப்படுகின்றன. குறிப்பாக பிளிப்கார்ட், அமேசான் போன்ற தளங்களில் லேப்டாப், ஸ்மார்ட்போன், ஸ்மார்ட் டிவி உள்ளிட்ட பல்வேறு சாதனங்கள் கம்மி விலையில் கிடைக்கின்றன என்றுதான் கூறவேண்டும்.

அதேபோல் அமேசான் தளத்தில் அட்டகாசமான ஒப்போ, ரெட்மி, சாம்சங் நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்களுக்கும் விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி விலைகுறைக்கப்பட்ட அந்த ஸ்மார்ட்போன்களின் பட்டியலை சற்று விரிவாகப் பார்ப்போம்.
ரெட்மி 9 பவர்
4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட ரெட்மி 9 பவர் ஸ்மார்ட்போனின் அசல் விலை ரூ.13,999-ஆக உள்ளது. ஆனால் அமேசான் தளத்தில் அறிவிக்கப்பட்ட சலுகையின் மூலம் இந்த ஸ்மார்ட்போனை ரூ.11,499-விலையில் வாங்க முடியும். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் 6.53-இன்ச் எஃப்எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளது. பின்பு 2340 x 1080 பிக்சல் தீர்மானம், 19:5:9 என்ற திரைவிகிதம், 6000 எம்ஏஎச் பேட்டரி, 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி, கைரேகை ஸ்கேனர், குவால்காம் ஸ்னாப்டிராகன் 662 ஆக்டோ-கோர் பிராசஸர் என பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த ரெட்மி 9 பவர் ஸ்மார்ட்போன். அதேபோல் இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி மெயின் கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா+ 2எம்பி மேக்ரோ கேமரா + 2எம்பி போர்ட்ரெயிட் லென்ஸ் என மொத்தம் நான்கு கேமராக்கள் உள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி செல்பீ கேமராவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.
சாம்சங் கேலக்ஸி எம்52 5ஜி
6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட கேலக்ஸி எம்52 5ஜி ஸ்மார்ட்போனின் அசல் விலை ரூ.34,999-என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இப்போது அமேசான் தளத்தில் அறிவிக்கப்பட்ட சலுகையின் மூலம் இந்த ஸ்மார்ட்போனை ரூ.25,999-விலையில் வாங்க முடியும். பின்பு சாம்சங் கேலக்ஸி எம்52 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 6.7-இன்ச் எஃப்எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்புடன் வெளிவந்துள்ளது. மேலும் 2,400 X 1,080 பிக்சல் தீர்மானம், 20: 9 ஸ்க்ரீன் ரேஷியோ,120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 ஆதரவு, குவால்காம் ஸ்னாப்டிராகன் 778ஜி சிப்செட் வசதி, 5000 எம்ஏஎச் பேட்டரி, 25 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு என பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த கேலக்ஸி எம்52 5ஜி ஸ்மார்ட்போன். அதேபோல் கேலக்ஸி எம்52 5ஜி ஸ்மார்ட்போனின் பின்புறம் 64எம்பி பிரைமரி சென்சார் + 12எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 5எம்பி டெப்த் கேமரா என மொத்தம் மூன்று கேமராக்கள்
பொருத்தப்பட்டுள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி செல்பீ கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது இந்த சாம்சங் கேலக்ஸி எம்52 5ஜி.
iQOO 7 5G ஸ்மார்ட்போன்
iQOO 7 5G ஸ்மார்ட்போனின் அசல் விலை ரூ.34,990-ஆக உள்ளது. ஆனால் அமேசான் தளத்தில் அறிவிக்கப்பட்ட சலுகையின் மூலம் இந்த ஸ்மார்ட்போனை ரூ.29,990-விலையில் வாங்க முடியும். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் தனித்துவமான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது என்றுதான் கூறவேண்டும். அதாவது iQOO 7 5G ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 870 5ஜி சிப்செட், 4000 எம்ஏஎச் பேட்டரி,66 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். அதேபோல் 6.62' இன்ச் கொண்ட 120Hz ரெப்பிரேஷ் ரெட் 2400 x 1080 பிக்சல் உடன் கூடிய டிஸ்பிளேவுடன் வருகிறது இந்த சாதனம். பின்பு இது 48MP கொண்ட முதன்மை கேமராவுடன் கூடிய ட்ரிபிள் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஒப்போ ஏ31
4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட ஒப்போ ஏ31 ஸ்மார்ட்போனின் அசல் விலை ரூ.12,990-ஆக உள்ளது. ஆனால் அமேசான் தளத்தில் அறிவிக்கப்பட்ட சலுகையின் மூலம் இந்த ஸ்மார்ட்போனை ரூ.11,490-விலையில் வாங்க முடியும். குறிப்பாக ஒப்போ ஏ31 ஸ்மார்ட்போன் மாடலில் 6.5-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பு இடம்பெற்றுள்ளது. பின்பு இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம்
12எம்பி மெயின் சென்சார் + 2எம்பி மேக்ரோ சென்சார் + 2எம்பி டெப்த் சென்சார் என மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன, மேலும் 8எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம்என பல்வேறு வசதிகள் இவற்றுள் அடக்கம். அதேபோல் மீடியாடெக் ஹீலியோ பி35 சிப்செட் வசதி, 4230எம்ஏஎச் பேட்டரி உள்ளிட்ட தரமான அமசங்களுடன் வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான
ஸ்மார்ட்போன் மாடல்.


Click it and Unblock the Notifications