ஏங்க TV வாங்குங்க.. ரூ.8,739-க்கு QLED டிவிங்க.. 40W ஆடியோ.. Google TV ஓஎஸ்.. 1GB ரேம்.. எந்த மாடலுங்க?
பிளிப்கார்ட் விற்பனையில் ரூ.10,000 பட்ஜெட்டை விட மலிவான விலைக்கு கியூஎல்இடி டிவி கிடைக்கிறது. டிஸ்கவுண்ட் விலையில் கிடைக்கும் இந்த டிவியில் டால்பி ஆடியோவுடன் கூடிய 40W ஸ்பீக்கர்கள், கூகுள் டிவி ஓஎஸ் மற்றும் 1 ஜிபி ரேம் போன்ற பீச்சர்கள் கிடைக்கின்றன. இவ்வளவு கம்மியான விலைக்கு வாங்க கிடைக்கும் இந்த டிவியில் என்னென்ன பீச்சர்கள் வருகிறது, விலை எப்படி உள்ளிட்ட விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
32 இன்ச் மோட்டோரோலா கியூஎல்இடி டிவி அம்சங்கள் (32 inch Motorola QLED TV Specifications): இந்த டிவியில் 32 இன்ச் (1366 x 768 பிக்சல்கள்) கியூஎல்இடி டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த டிஸ்பிளேவில் எச்டி ரெடி ரெசொலூசன் கிடைக்கும். எச்டி ரெசொலூஷன் (HD Resolution) மட்டுமல்லாமல், 60Hz ரெப்ரெஷ் ரேட் மற்றும் விவிட் பிக்சர் மோட் (Vivid Picture Mode) உள்ளது.

இதுபோக 16.78 பில்லியன் கலர் டெப்த் கிடைக்கிறது. ஆகவே, கலர் அக்கியூரசி மற்றும் நேச்சுரல் அவுட்புட் இந்த பட்ஜெட்டிலும் எதிர்பார்க்க முடிகிறது. இந்த பீச்சர்களுடன் பெசல்-லெஸ் டிசைனும் கிடைப்பதால், லுக்கும் பிரீமியமாக இருக்கிறது. மிட்-ரேஞ்ச் பட்ஜெட் டிவி மாடல்களில் கிடைக்கும் ஸ்டான்டர்ட், டைனாமிக், சினிமா, ஃபிலிம் மேக்கர் போன்ற விசுவல் மோட்களை கொடுக்கிறது.
இதுபோக எகோ, கேம் மற்றும் லோவ் ப்ளூ போன்ற விசுவல் மோட்களும் இந்த 32 இன்ச் மோட்டோரோலா கியூஎல்இடி டிவி கொடுக்கிறது. ஆகவே, ஸ்போர்ட்ஸ், மூவிக்கள் மற்றும் கேமிங்களுக்கு ஏற்ப டிஸ்பிளே மோட்களை கஸ்மர்கள் மாற்றி கொள்ளலாம். இந்த பட்ஜெட்டில் பல டிவி மாடல்கள் இதுபோன்ற பீச்சர்களை கொடுக்கப்படவில்லை.
இந்த டிஸ்பிளே பீச்சர்களுக்கு ஏற்ப 2 ஸ்பீக்கர்களுடன் பட்டையை கிளப்பும் ஆடியோ சப்போர்ட் கிடைக்கிறது. ஏனென்றால், டால்பி ஆடியோவுடன் 2 ஸ்பீக்கர்கள் கிடைக்கின்றன. இவை ஓப்பன் டைப் ஸ்பீக்கர்களாகும். இதில் டால்பி ஆடியோ மட்டுமல்லாமல், ஆப்டிகல் அவுட் (Optical Out) கிடைக்கிறது. ஹெட்போன் ஜாக் பெற்று கொள்ளலாம்.
டால்பி ஆடியோ (Dolby Audio) சப்போர்ட் கொண்ட 40W ஸ்பீக்கர்கள் கிடைக்கின்றன. இந்த பட்ஜெட்டில் 40W சவுண்ட் அவுட்புட் மற்ற நிறுவனங்களின் மாடல்களில் எதிர்பார்க்க முடியாது. அதேபோல கூகுள் டிவி 5.0 (Google TV 5.0) ஓஎஸ் கொடுத்துள்ளது. ஆகவே, குரோம்காஸ்ட் பில்ட்-இன் (Cromecast built-in), ஹே கூகுள் (Hey Google) வாய்ஸ் அசிஸ்டன்ட், கூகுள் போட்டோஸ் (Google Photos) வருகிறது.
அதேபோல கூகுள் பிளே ஸ்டோர் (Google Play Store) பயன்படுத்த கிடைக்கிறது. ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) யுஐ எதிர்பார்க்கலாம். இந்த ஓஎஸ் மூலம் கிட்டத்தட்ட பிரீமியம் டிவிக்கு நிகரான கன்ட்ரோல்கள் மற்றும் கூகுள் ஆப்களின் அனுகல் கிடைக்கும். இதுபோக 1 ஜிபி ரேம் மற்றும் 8 ஜிபி ஸ்டோரேஜ் கொடுக்கிறது. பர்ஃபாமென்ஸ் எதிர்பார்க்க முடியும்.
நெட்பிளிக்ஸ், சோனிலிவ், ஆப்பிள் டிவி, ஜியோஹாட்ஸ்டார், அமேசான் பிரைம் வீடியோ போன்ற ஓடிடி ஆப்கள் இன்-பில்ட்டாக கிடைக்கின்றன. கூகுள் மூவிஸ், பிளே ஸ்டோர், யூடியூப் போன்ற ஆப்களையும் பயன்படுத்த முடியும். ஆகவே, ரூ.10,000 பட்ஜெட்டைவிட மலிவான விலைக்கு எதிர்பார்க்க முடியாது. இப்போது விலையை பார்ப்போம்.
32 இன்ச் மோட்டோரோலா கியூஎல்இடி டிவியின் (32HDGQMDDAQ) விலையை பார்க்கையில், ரூ.9,199ஆக இருக்கிறது. பிளிப்கார்ட் (Flipkart) தளத்தில் 65 சதவீத டிஸ்கவுண்ட் போக இந்த விலைக்கு வாங்க கிடைக்கிறது. இதுபோக குறிப்பிட்ட கார்டுகளுக்கு ரூ.460 டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. ஆகவே, ரூ.8,739 பட்ஜெட்டில் வாங்கி கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications