ஆசை ஆசையாக மாதவ் ஷெத் அறிமுகம் செய்த 5ஜி போன் இப்போது அடிமட்ட ரூ.6000 பட்ஜெட்டில்!
ஆசை ஆசையாக மாதவ் ஷெத் அறிமுகம் செய்த 5ஜி ஸ்மார்ட்போன், இப்போது அடிமட்ட விலைக்கு வந்துள்ளது. அதாங்க "நம்ம ரியல்மி இந்தியாவின் முன்னாள் சிஇஓ" தலைமையிலான நெக்ஸ்ட்குவாண்டம் ஷிஃப்ட் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் முதல் 5ஜி ஸ்மார்ட்போனாக அறிமுகம் செய்யப்பட்ட ஏஐ பிளஸ் நோவா 5ஜி இப்போது தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கிறது.
பிளிப்கார்ட் பிக் பேங்க் தீபாவளி விற்பனையின் (Flipkart Big Bang Diwali Sale) ஒரு பகுதியாக - ஏஐ பிளஸ் நோவா 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது, அதன் அறிமுக விலையான ரூ.7999 க்கு பதிலாக ரூ 1350 பேங்க் டிஸ்கவுண்ட் போக ரூ.6,649 க்கு வாங்க கிடைக்கும் என்று பட்டியலிடப்பட்டு உள்ளது.

ஏஐ பிளஸ் நோவா 5ஜி ஸ்மார்ட்போன் உடன் சேர்த்து அறிமுகம் செய்யப்பட்ட ஏஐ பிளஸ் பல்ஸ் 4ஜி ஸ்மார்ட்போனும் கூட தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கிறது. இது அறிமுக விலையான ரூ.4999 க்கு பதிலாக ரூ .250 பேங்க் டிஸ்கவுண்ட் போக ரூ.4,749 க்கு வாங்க கிடைக்கும் என்று பட்டியலிடப்பட்டு உள்ளது
ஏஐ பிளஸ் பல்ஸ் 4ஜி, ஏஐ பிளஸ் நோவா 5ஜி ஸ்மார்ட்போன்களின் அம்சங்கள்: டிஸ்பிளேவை பொறுத்தவரை ஏஐ பிளஸ் பல்ஸ் 4ஜி, ஏஐ பிளஸ் நோவா 5ஜி ஆகியவைகள் முறையே 90ஹெர்ட்ஸ் மற்றும் 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.7-இன்ச் HD+ டிஸ்பிளேவை கொண்டுள்ளன.
சிப்செட்டை பொறுத்தவரை ஏஐ பிளஸ் பல்ஸ் 4ஜி ஸ்மார்ட்போன் ஆனது யுனிசாக் டி615 (Unisoc T615) சிப்செட்டால் இயக்கப்படுகிறது. அதே நேரத்தில் ஏஐ பிளஸ் நோவா 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது யுனிசாக் டி8200 (Unisoc T8200) சிப்செட் கொண்டு இயக்கப்படுகிறது. இரண்டுமே 1TB வரை விரிவாக்கக்கூடிய ஸ்டோரேஜை ஆதரிக்கின்றன.
மேலும் இரண்டு ஸ்மார்ட்போன்களும் நெக்ஸ்ட்குவாண்டம்-ன் நெக்ஸ்ட்க்யூ ஓஎஸ் (NxtQ OS) உடன் வருகின்றன. இந்த ஓஎஸ் ஆனது பயனர்கள் தங்கள் தரவை கண்காணிக்கும் ஆப்களை எப்படி கண்காணிக்கிறார்கள் என்பதையும் காண்பிக்கும் NxtPrivacy டாஷ்போர்டையும் கொண்டுள்ளது. முன்னரே குறிப்பிட்டபடி இந்த ஓஎஸ் ஆண்ட்ராய்டு 15-ஐ அடிப்படையாக கொண்டது.
கேமராக்களை பொறுத்தவரை, ஏஐ பிளஸ் பல்ஸ் 4ஜி (AI Plus Pulse 4G), ஏஐ பிளஸ் நோவா 5ஜி (AI Plus Nova 5G) ஆகிய 2 ஸ்மார்ட்போன்களுமே 50 மெகாபிக்சல் ப்ரைமரி ரியர் சென்சார்களை கொண்ட ஏஐ-பேக்டு டூயல் ரியர் கேமரா செட்டப்பை கொண்டுள்ளன. இரண்டு போன்களிலும் முன்பக்கத்தில் 5-மெகாபிக்சல் செல்பீ கேமரா உள்ளது.
பேட்டரியை பொறுத்தவரை ஏஐ பிளஸ் பல்ஸ் 4ஜி மற்றும் ஏஐ பிளஸ் நோவா 5ஜி ஆகிய இரண்டுமே 18W சார்ஜிங் ஆதரவுடன் 5,000mAh பேட்டரியை கொண்டுள்ளன. கனெக்டிவிட்டி ஆப்ஷன்களை பொறுத்தவரை வைஃபை, ஜிபிஎஸ், ப்ளூடூத், 3.5மிமீ ஆடியோ ஜாக் மற்றும் யூஎஸ்பி டைப்-சி போர்ட் ஆகியவைகளை கொண்டுள்ளன.
குறிப்பிடத்தக்க வகையி, இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களுமே ஆண்ட்ராய்டு 15 (Android 15) அடிப்படையிலான நெக்ஸ்ட்குவாண்டம் ஓஎஸ் (NxtQuantum OS) கொண்டு இயங்குகின்றன. இந்த ஓஎஸ் முழுமையாக இந்தியாவில் உருவாக்கப்பட்டது. மேலும் இவ்விரு ஏஐ பிளஸ் ஸ்மார்ட்போன்களுமே இந்தியாவில் வடிவமைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்த ஸ்மார்ட்போன்களில் இருக்கும் நெக்ஸ்ட்குவாண்டம் ஓஎஸ் ஆனது பயனர்கள் குறித்த தரவுகளை இந்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகததால் (Ministry of Electronics and Information Technology - MeitY) அங்கீகரிக்கப்பட்ட கூகுள் கிளவுட் சேவையகங்களில் (Google Cloud Servers) சேமிக்கும் என்றும் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications








