ரூ.6094 க்கு இப்படி ஒரு ஸ்மார்ட்போன் கொடுத்தா யாரு தான் வாங்க மாட்டாங்க.. 8GB ரேம், 5,000mAh பேட்டரி!
பிளிப்கார்ட்பிக் பில்லியன் டேஸ் சேல் 2025 (Flipkart Big Billion Days Sale 2025 ) விற்பனையின் "கடைசி நாள்" குறித்த விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த செப்டம்பர் 23 ஆம் தேதி தொடங்கிய பிளிப்கார்ட்டின் இந்த பண்டிகை கால சிறப்பு விற்பனையானது வருகிற அக்டோபர் 2 ஆம் தேதி உடன் முடிவடைய உள்ளது.
ஆக யாரெல்லாம் "சம்பளம் போடட்டும்.. ஆபர் விலையில் ஒரு நல்ல ஸ்மார்ட்போனை வாங்கலாம்" என்று காத்து இருந்தீர்களோ.. அவர்கள் தீயாக வேலை செய்ய வேண்டிய நேரம் (அடுத்த 2 நாட்கள்) வந்துவிட்டது. ஒருவேளை உங்களுடைய பட்ஜெட் மிகவும் குறைவு என்றால்.. அதாவது ரூ.10,000 க்குள் தான் இருக்கிறது என்றால்.. அதில் மீதி ரூ.4000 மிச்சப்படுத்தும் அளவிலான ஒரு ஸ்மார்ட்போன் ஆபர் பிளிப்கார்ட்டில் உள்ளது.

அது ஐடெல் ஸெனா 10 (Itel Zeno 10) ஸ்மார்ட்போன் மீதான டீல் ஆகும். பிளிப்கார்ட்டில் தற்போது இந்த ஸ்மார்ட்போன் 17% நேரடி தள்ளுபடியை பெற்று, அதன் அசல் எம்ஆர்பி விலையான ரூ.7,399 க்கு பதிலாக ரூ.6,094 என்கிற ஆபர் விலையில் பட்டியலிடப்பட்டுள்ளது.
ஐடெல் ஸெனோ 10 விரிவான அம்சங்கள் (Itel Zeno 10 Specifications and Features): டிஸ்பிளேவை பொறுத்தவரை, இது 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.56-இன்ச் எச்டி பிளஸ் ஐபிஎஸ் டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இது செல்பீ கேமரா கட்-அவுட்டை சுற்றி பேட்டரி சார்ஜிங் விவரங்கள் மற்றும் இன்கம்மிங் கால் அலெர்ட்ஸ் போன்ற அறிவிப்புகளை காட்டும் டைனமிக் பார் அம்சத்தை கொண்டுள்ளது.
சிப்செட்டை பொறுத்தவரை இது 3ஜிபி மற்றும் 4ஜிபி ரேம் ஆப்ஷன்களுடன் குறிப்பிடப்படாத ஆக்டா-கோர் சிப்செட்டில் இயங்குகிறது. விர்ச்சுவல் ரேம் (Virtual RAM) அம்சம் வழியாக பயன்படுத்தப்படாத ஸ்டோரேஜில் இருந்து, இந்த ஸ்மார்ட்போனின் ரேமை 8ஜிபி வரை விரிவாக்க முடியும்.
கேமராக்களை பொறுத்தவரை ஏஐ ஆதரவு (AI Support) கொண்ட 8எம்பி டூயல் ரியர் கேமரா செட்டப் உள்ளது முன்பக்கத்தில், செல்பீ மற்றும் வீடியோ கால்களுக்கு 5 மெகாபிக்சல் கேமரா உள்ளது. டூயல் சிம் ஆதரவுடன் வரும் இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் கொண்டு இயங்குகிறது.
கிட்டத்தட்ட ரூ.6000 க்கு அருகிலான பட்ஜெட்டில் கிடைக்கும் ஸ்மார்ட்போனாக இருந்தாலும் கூட, இது ஃபிங்கர் பிரிண்ட் சென்சார் (Finger Print Sensor) மற்றும் ஃபேஸ் அன்லாக் (Face Unlock) ஆகிய 2 வகையான பாதுகாப்பு அம்சத்தையும் கொண்டுள்ளது. பேட்டரியை பொறுத்தவரை இது 5,000mAh பேட்டரியை பேக் செய்கிறது .
பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் 2025 விற்பனையில் ரூ.10,000 க்கு மேல், அதே சமயம் ரூ.20,000 க்குள் என்கிற ஆபர் விலையில் வாங்க கிடைக்கும் மற்ற சில ஸ்மார்ட்போன்களும் உள்ளன. ஒப்போ கே13 5ஜி (Oppo K13 5G) ஸ்மார்ட்போன் ஆனது ரூ.19,499 க்கு பதிலாக ரூ.14,999 க்கு வாங்க கிடைக்கிறது
இதேபோல விவோ டி4 லைட் 5ஜி (Vivo T4 Lite 5G) ஸ்மார்ட்போன் ஆனது ரூ.13,999 க்கு பதிலாக ரூ.8,999 க்கு வாங்க கிடைக்கிறது. மோட்டோ ஜி96 (Moto G96) ஸ்மார்ட்போன் ஆனது ரூ.20,999 க்கு பதிலாக ரூ.14,999 க்கு வாங்க கிடைக்கும்.
விவோ டி4எக்ஸ் 5ஜி (Vivo T4x 5G) ஸ்மார்ட்போன் ஆனது ரூ.17,999 க்கு பதிலாக ரூ.12,249 க்கு வாங்க கிடைக்கிறது. கடைசியாக ஒப்போ கே13எக்ஸ் 5ஜி (Oppo K13x 5G) ஸ்மார்ட்போன் ஆனது ரூ.16,999 க்கு பதிலாக ரூ.9,999 க்கு வாங்க கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications